கேள்வி:குருதேவா! இந்த அன்பானது மனிதன் மீது கொள்கின்ற அன்பா அல்லது
இறைவன் மீது கொள்கின்ற அன்பா?
பதில்:மணிதன் மீது கொள்கின்ற அன்பு காலப்போக்கில் இல்லாமல் போய்விடும்;
இளமைக்காலத்தில் ஒரு பெண்ணிடம் ஏற்படுகின்ற அன்பும்,
ஒருவரிடம் நமக்குப் பணம் வேண்டும் என்பதால் அவர் மீது நாம் காட்டுகின்ற
அன்பும்,
நம்முடைய தாய் தந்தையரின் சொத்துக்கள் நமக்கே வரவேண்டும் என்பதனால் காட்டுகின்ற
அன்பும்,
நாம் இழந்த சொத்துக்களை மீண்டும் பெறுவதற்காக பிறரிடம் காட்டுகின்ற அன்பும்,
ஒரு பெண்ணை விரும்புவதால் ஏற்படும் அன்பும் உண்மையான அன்பு அல்ல;
ஈசன் மீது கொள்கின்ற காதலே மாறாத அன்பாகும்;இந்த மாறாத மலர்தான் அன்பு.மலராய்
இருபப்வள் சக்தி;எத்தனையோ அன்பு இருக்கலாம்; ஆனால்,தாயானவள் தன் மக்கள் மீது கொண்டிருக்கின்ற
அன்பைப் போன்று கிடைப்பது அரிதாகும்.இந்த அன்புமலரைத்தான் ஜாதி என்றார்கள்.வேறு எதையும்
ஜாதி என்று சொல்லவில்லை;
ஓம் அகத்தீசாய நமஹ
No comments:
Post a Comment