சாலையில் பயணம் செய்யும் போது எதிரே வரும் வாகனத்தின் ஹெல் லைட் வெளிச்சமே
நமது கண்களைக் கூச வைக்கின்றது;ஜோதி வடிவில் இருக்கும் இறைசக்தி(அருணாச்சலேஸ்வரர் என்ற
அண்ணாமலையார்)யின் வெளிச்சத்தைப் பார்க்கும் சக்தி நமக்கு இருக்குமா?
“நான் இப்போதே கடவுளை நீ காட்டு;அப்போதுதான் நான் கடவுள் இருப்பதை நம்புவேன்”
அவசரக் குடுக்கைகளும்,நாத்திகக் கொழுந்துகளும் கடந்த 60 ஆண்டுகளாக நம்மிடமும்,நமக்கு
வேண்டப்பட்டவர்களிடமும் வாக்குவாதம் செய்து வாயடைத்துள்ளனர்;இப்போது இது தொடர்கிறது.
கடவுளை இப்போதே உன்னால் காட்ட முடியவில்லையே! எனவே,கடவுள் இல்லை; என்று
தானாகவே சொல்லிவிடுகின்றனர்;கடவுள் என்ன இவர்கள் வீட்டு வேலைக்காரனா?
பாலுக்குள் நெய் இருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் தெரியும்;அதற்காக
பாலைப் பார்க்கும் போதே அதில் நெய் தெரியுமா?
பாலில் இருந்து நெய்யை எடுப்பதற்கு எவ்வளவு வேலைகள் இருக்கின்றன;பாலில்
இருந்து நெய்யை எடுப்பது எப்படி? என்று விவரித்தால் அதுவே தனி கட்டுரையாகி விடும்;அதன்
பிறகுதானே நெய்யை எடுக்க முடியும்? அதன் பிறகே நெய்யைப்பார்க்க முடியும்!!
அது போல,கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கம் ஒருவருக்கு(ஒருத்திக்கு)
உண்மையாகவே இருந்தால்,அதற்கு ஏகப்பட்ட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்;
கடவுளைப் பார்க்க வேண்டும் என்றால்,அடுத்த கேள்வி முளைக்கின்றது.எந்தக்
கடவுளைப் பார்க்க வேண்டும்?
முருகக் கடவுளையும்,சதாசிவனையும் தரிசிப்பதற்கு பல பிறவிகளாக முயற்சி
செய்ய வேண்டும்;பிற கடவுள்களை முறையான குரு
கிடைத்து,சரியான வழிமுறைப்படி முயற்சித்தால் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் அல்லது
சில வருடங்களில் தரிசித்து விடமுடியும்;
இப்படி தாம் விரும்பும் கடவுளை தரிசித்தவர்கள் ஒவ்வொரு ஊரிலும்,ஒவ்வொரு
தெருவில்(தமிழ்நாட்டிலும்,பாரதத்திலும்) இன்றும் வாழ்ந்து வருகின்றனர்;அவர்கள் ஒரு
நாள் கூட,ஒரு தடவை கூட,ஒரே ஒருவரிடம் கூட(ஆருயிர் நண்பராக இருந்தாலும்,ஆருயிர் மகன்/ளாக
இருந்தாலும்) ‘நான் இந்தக் கடவுளை தரிசித்தேன்’ என்று சொல்ல மாட்டார்கள்;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் வராகி சிவசக்தி ஓம்
No comments:
Post a Comment