Monday, May 23, 2016

பூர்வீகச் சொத்துப்பிரச்சினையை உருவாக்கும் முன்னோர்களின் செயற்கை மரணங்கள்!!!


மதுரையைச் சேர்ந்த ஒரு ஜோதிடர்கள் குழு,1980களின் முற்பகுதியில் ஒரு வித்தியாசமான ஜோதிட ஆராய்ச்சியை மேற்கொண்டது;

பூர்வீகச் சொத்துக்காக யாரெல்லாம் வழக்கு தொடுத்துள்ளார்களோ,அவர்களின்(இருதரப்பும்) பிறந்த ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தனர்;இப்படிப்பார்ப்பதற்கு சுமாராக ஒன்றரை ஆண்டுகள் ஆயின;

முடிவாக,யாரெல்லாம் பூர்வீகச் சொத்துக்காக வழக்கு தொடுத்துள்ளார்களோ அவர்களுக்கு அல்லது யார் மீது வழக்கு இருக்கின்றதோ அவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கின்றது;முறையான பித்ரு தோஷ நிவாரணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும்,அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் யாராவது ஒருவருக்கும் தலைமுறை தலைமுறையாக பித்ரு தோஷம் தொடர்கின்றது;

ஜோதிடப்படி,லக்னத்துக்கு 3,5,9 இல் ராகு அல்லது கேது இருந்தாலே பித்ரு தோஷம் இருக்கின்றது என்றுதான் அர்த்தம்;
ஒரு வம்சாவழியில் தலைமுறைக்கு ஒருவர் வீதம் கடந்த ஐந்து தலைமுறையாக குறைந்தது ஐந்து பேர்கள் தற்கொலை செய்து இறந்தாலோ அல்லது கொலை செய்யப்பட்டு இறந்தாலோ அல்லது விபத்து/கலவரம்/போரில் இறந்தாலோ அது பித்ரு தோஷமாகப் பரிணமிக்கின்றது;

வருடத் திதி கொடுப்பது வேறு;பித்ருதோஷ நிவாரணமாக திலா ஹோமம் செய்வது வேறு;

ஒருவர் இயற்கையாக இறந்தால் அவருக்கு உறுதியாக மறுபிறவி உண்டு;செயற்கையாக இறந்தால் மறுபிறவி,திலா ஹோமம் செய்தால் மட்டுமே உண்டு;இதைச் செய்யாதவர்களுக்குத் தான் பித்ரு தோஷம் மூலமாக பூர்வீகச் சொத்தினைப் பிரிக்க முடியாமல் வழக்காக உருமாறுகின்றது;

ஜோதிடம் ஒரு முழு அறிவியல் என்பதை மதுரை ஜோதிடர்கள் குழுவின் ஆராய்ச்சி உறுதி செய்தது;

ஓம் அருணாச்சலாய நமஹ

ஓம் அண்ணாமலையே போற்றி! போற்றி!! போற்றி!!!

No comments:

Post a Comment