45 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்
கிழச்சிவந்திப்பட்டித் தெருவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் எமலோகம் இருப்பதை உறுதி
செய்திருக்கின்றது;
மாரியம்மாள் என்ற பாட்டி இறந்துவிட்டாள்;அடுத்த ஆறு மணி நேரத்தில் அந்தப்
பாட்டியின் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றிடத் தயார் செய்தனர்;அப்போது,ஏப்பம் விட்டவாறு
மாரியம்மாள் தூக்கம் கலங்கி எழுந்திருப்பது போல,கண் விழித்துவிட்டாள்;துக்கத்திற்கு
வந்தவர்கள் பயந்து நடுங்கிவிட்டனர்;
அதேசமயம்,அதே தெருவின் இன்னொரு முனையில் வாழ்ந்து வந்த இன்னொரு மாரியம்மாள்
என்ற பாட்டி இறந்துவிட்டாள்;
இரண்டு கறுப்பு உருவங்கள் முதல் மாரியம்மாளை ‘அழைத்து’ச் செல்ல வந்தார்கள்;சில
நிமிடமா?அல்லது சில மணி நேரமா? என்று தெரியவில்லை;
எமலோகத்தில் முதலாவது மாரியம்மாளை அந்த இரண்டு கறுப்பு உருவங்கள் கொண்டு
போய்சேர்த்தன;
சித்திரகுப்தனும்,எமதர்மராஜாவும் அந்த இரு கருப்பு உருவங்களை திட்டித்
தீர்த்தனர்;
“கோவிந்தராஜ் மனைவி மாரியம்மாளின் உயிரை எடுத்து வரச் சொன்னால்,கோவிந்தசாமி
மனைவி மாரியம்மாளின் உயிரை எடுத்து வந்துவிட்டீர்களே! இந்த ஆத்மாவை உடனே அவள் உடலுக்குள்
விட்டுவிட்டு,அந்த மாரியம்மாளை அழைத்து வாருங்கள்”
முதலாவது மாரியம்மாளைப் பார்த்து, “எப்போதாவது இப்படி எமது ஊழியர்கள்
தப்பு செய்வதுண்டு;எம்மை மன்னித்துவிடு அம்மா!” என்று கூறிவிட்டு, “தாங்கள் தற்போது
எமது விருந்தினர்;சாப்பிடுங்கள்;ஆனால்,பூலோகம் சென்றப் பின்னர்,இங்கே நடந்ததை அங்கே
யாரிடமாவது நீங்கள் தெரிவித்தால்,உங்களுக்கு ஆயுள் முடியும் போது நோயாளியாகி,உடல் எல்லாம்
புழு வைத்து இறப்பீர்கள்” என்று எச்சரிக்கையும் விட்டார் எமதர்மராஜா;
அறுசுவையுடன் விருந்து சாப்பிட்டுவிட்டு பூமிக்குத் திரும்பிய மாரியம்மாள்,தமது
உடலுக்குள் புகுந்த உடனே ஏப்பம் விட்டது இதனால் தான்;
மாரியம்மாளால் எமலோக ரகசியத்தை மறைக்க முடியவில்லை;அனைத்தையும் அனைவரிடமும்
சொன்னதால்,அடுத்த சில ஆண்டுகளில் இறக்கும் போது நோயாளியாகி புழுவைத்து இறந்தார்;
பூமியில் எவரது உயிரை எடுப்பதற்கு எமதூதர்கள் வந்தாலும்,அவர்கள் முதலில்
அண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் எமலிங்கத்தை வழிபட்டுவிட்டு அதன் பிறகே
உரிய ஆத்மாவின் உயிரை எடுக்கச் செல்வார்கள்;
இச்சம்பவம் 1970 முதல் 1975க்குள் நடைபெற்றது;
ஓம் அருணாச்சலாய நமஹ
No comments:
Post a Comment