க்ருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்று நான்கு யுகங்களாக
காலத்தை நமது முன்னோர்கள் பிரித்துள்ளனர்;இது அறிவியல் பூர்வமான உண்மை என்பதை எதிர்கால
விஞ்ஞானம் நிரூபிக்கும்;அப்படி நிரூபிக்கும் போது உலகமே இந்துமயமாகிவிடும்;
நாம் வாழ்ந்து வரும் பாரத நாட்டில் பிறப்பதற்கே பெரும் புண்ணியம் செய்திருக்க
வேண்டும்;இது நம்மில் பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை;காரணம் அவர்களுக்கு கிடைக்கும்
மிதமிஞ்சிய செல்வ வளம் அல்லது மிதமிஞ்சிய துன்பங்களும்,துயரங்களுமே!
ஒருபோதும் “கடவுளே என்னை அடுத்த பிறவியிலாவது வெளிநாட்டில் பிறக்க வைத்துவிடு
என்று வேண்டிக் கொள்ளாதீர்கள்;ஒருமுறை வெளிநாட்டில் பிறக்க ஆரம்பித்துவிட்டால்,மீண்டும்
நமது ஆன்மீக பூமியான பாரதத்தில் பிறக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமலேயே போய்விடலாம்”
என்று சித்தர்களின் தலைவரும்,தமிழினத்தின் தந்தையும்,பூமியில் தமிழ் மொழியை பரப்பியவருமாகிய
அகத்திய மகரிஷி நம்மை எச்சரித்திருக்கின்றார்;
க்ருதயுகத்தில் 10 ஆண்டுகள் முயற்சி செய்து பெறும் புண்ணியத்தை,திரேதாயுகத்தில்
ஓர் ஆண்டு வரை விடாமுயற்சி செய்து பெற்றுவிடலாம்;அதையே,துவாபரயுகத்தில் ஒரு மாதத்தில்
பெற்றுவிடமுடியும்;ஆனால்,கொடூரமானது என்று சொல்லக் கூடிய கலியுகத்தில் ஒரே ஒரு நாளில்
அத்தைகைய புண்ணியத்தைப் பெற்றுவிடலாம்;
யோகநிஷ்டை/வேள்விகள்,அர்ச்சனைகளின் அவசியமின்றி அன்னை அரசாலையின் 12
பெயர்களை உச்சரித்ததுமே அந்தப் பலன்கள் அனைத்தும் கிட்டிவிடும்;(வராகியின் அருளைப் பெற்றுத் தரும் சித்தரின் பெயர் வாத்தியாரைய்யா! இவர் சிங்கம்புணரி என்ற கிராமத்தில் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கியமாகி அருள்பாலித்து வருகின்றார்;இவரது இயற்பெயர் அருள்நிறை முத்துவடுகநாதர் ஆகும்)
ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்னி
என்பவையே அந்த 12 பெயர்கள்;
திருமந்திரம் என்ற நூலில் திருமூலர், ‘உரு
ஏறத் திரு ஏறும்’ என்று தெரிவித்துள்ளார்;இதற்கு என்ன அர்த்தம்?
தொடர்ந்து ஒரு இறைசக்தியின் பெயரை உச்சரிக்க,உச்சரிக்க,உச்சரிப்பவரின்
முகத்தில் வசீகரம் அதிகரிக்கும் என்று அர்த்தம்!!!
மேலும்,துவாதசி திதி அன்று அண்ணாமலையில் செய்யப்படும் அன்னதானத்தின்
மூலமாகவும் பெற்றுவிடலாம்;யாருடைய முன்னோர்கள்,பித்ருக்களின் உலகத்தில் கடுமையான ஜபம்
செய்திருந்தார்களோ,அவர்கள் மட்டுமே இப்பிறவியில் ஒரே ஒரு முறை அண்ணாமலையில் கிரிவலம்
வரமுடியும்! அல்லது துவாதசி திதி அன்று அன்னதானம் செய்ய முடியும்!!
அண்ணாமலையாரின் பெருமைகளையும்,அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளையும் விவரிக்க
100 ஆண்டுகள் போதாதது;ஏனெனில்,ஈரேழு பதினாலு உலகங்களின் இணைப்பு மையமாகவும்,பிறவியற்ற
முக்தியை விரும்புவர்களாலும் மட்டுமே அண்ணாமலை கிரிவலம் வந்து அதன் அருமை பெருமையை
உணர்ந்திடமுடியும்;
என்ன தான் பக்கம் பக்கமாக எழுதினாலும் நேரடியாக முகம் பார்த்து உபதேசிப்பதற்கு
ஈடாகுமா?
ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் வராகி சிவசக்தி ஓம்
No comments:
Post a Comment