Thursday, May 19, 2016

செல்வ வளம் தரும் சனிப்பவுர்ணமி கிரிவலம்!!!


சைவத்தின் தலைநகரம் அண்ணாமலை;ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் (சித்திரை பவுர்ணமி,வைகாசி பவுர்ணமி. . .) கிரிவலம் வந்தால் என்ன மாதிரியான பலன் மற்றும் புண்ணியம் நமக்குக் கிட்டும்;அப்படி புண்ணியம் கிட்டுவதற்கு எந்த விதமான முறையில் கிரிவலம் செல்ல வேண்டும் என்பதைப் பற்றி அகத்தியமகரிஷி விரிவாகவே உபதேசித்துள்ளார்;


அதே போல,திங்கட்கிழமையன்று கிரிவலம் வந்தால் என்ன பலன்? செவ்வாய்க் கிழமையன்று கிரிவலம் வந்தா, என்ன மாதிரியான புண்ணியம் நமக்குக் கிட்டும்? புதன் கிழமை கிரிவலம் நமக்கு எப்படி நன்மை செய்யும்? என்று ஒவ்வொரு கிழமைவாரியாகவும் கிரிவலத்தின் மகிமைகளை விவரித்துள்ளார்;


அதே போல,பிரதமை திதியன்று கிரிவலம் சென்றால் என்னவிதமான புண்ணியம் கிட்டும்? துவிதியை திதியன்று கிரிவலம் சென்றால் என்னவிதமான புண்ணியம் நமக்குச் சேரும்? த்ரிதியை திதியன்று கிரிவலம் சென்றால் எப்படிப்பட்ட புண்ணியம் நமக்கு வரும்? என்று திதிவாரியாகவும் விவரித்துள்ளார்;


அதே போல,சித்திரை 1 ஆம் நாளில் இருந்து சித்திரை 2,சித்திரை 3 என்று 12 மாதங்களில்(வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐப்பசி,
கார்த்திகை,மார்கழி,தை,மாசி,பங்குனி)ஒவ்வொரு நாளும் கிரிவலம் சென்றால் என்ன மாதிரியான பலன் கிட்டும்? எப்படி கிரிவலம் சென்றால் அந்த புண்ணியங்கள் சேரும்? என்பதையும் விவரித்துள்ளார்;


அதே போல,தமிழ் ஆண்டுகள் 60 ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு நாளும் கிரிவலப் பலன் களை எழுதியுள்ளார்;


12 தேய்பிறை சிவராத்திரிகளுக்கு அண்ணாமலை கிரிவலம் சென்றால்,நமது அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிடுவோம் என்பது தமிழ்முனியின் வாக்கு!


சனிக்கிழமையும் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் யார் அண்ணாமலை கிரிவலம் வருகின்றார்களோ,அவர்கள் செல்வ வளத்தை அடைவார்கள் என்பதும் கும்பமுனியின் வாக்கு ஆகும்;


21.5.2016 சனிக்கிழமை விடிகாலை 1.33(முதல் நாள் வெள்ளிக்கிழமை பின்னிரவு) முதல் 22.5.2016 ஞாயிற்றுக்கிழமை விடிகாலை(சனிக்கிழமை பின்னிரவு) 3.17 வரை சனிக்கிழமை பவுர்ணமி திதி அமைந்திருக்கின்றது;

(சனிக்கிழமை பகல் முழுவதும்)

இந்த பவுர்ணமியன்று அண்ணாமலை கிரிவலம் செல்வோம்;அகத்தியரின் உபதேசப்படியும்,அருணாச்சலேஸ்வரின் ஆசியாலும் செல்வ வளத்தைப் பெறுவோம்;



ஓம் அண்ணாமலையே போற்றி!!!

No comments:

Post a Comment