சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த ஒருவர்,தனது வாழ்நாளில்
96 கோடி தடவை ராமா என்ற மந்திரத்தை ஜபித்து முடித்திருந்தார்;அவரது 10 வது வயதில் அவரது
அம்மாவின் உபதேசத்தின்படி ஆரம்பித்த ராமா மந்திர ஜபம்,அவரது 98 வது வயதில் ஜப எண்ணிக்கை
96 கோடியைக் கடந்திருந்தது;ஆமாம்! ஒரு நாளுக்கு 5 மணி நேரம் மட்டுமே தூங்குவார்;
விழித்திருக்கும் நேரம் முழுவதும்,நடக்கும் போதும்,சாப்பிடும் போதும்,எழுதும்போதும்,பணிபுரியும்
போதும் ராமா ராமா ராமா என்று ஜபிப்பதை தனது கடமையாக வைத்துக் கொண்டார்;அவரைப் பெற்ற
அன்னையின் உபதேசம் அப்படி அவரது ஆழ்மனதில் பதிந்தது;
96 கோடி தடவை ராமா என்று ஜபித்து முடித்ததும் அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது;
ஸ்ரீராமர்,ஸ்ரீசீதா,ஸ்ரீலட்சுமணர்,ஸ்ரீமாருதி என்று அனைவரும் ஒரே நேரத்தில்
ப்ரசன்னமானார்கள்;ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் படமாக நமது வீடுகளில் இருப்பதை பார்த்திருப்போம்;அதில்
எப்படி வரையப்பட்டிருக்கிறதோ,அதே போல அவருக்கு தரிசனம் கிடைத்தது;
நாம் வாழ்ந்து வரும் உலகத்திற்கும்,இங்கேயே சூட்சுமமாக இருக்கும் உலகத்திற்குமான
தொடர்புப் புள்ளி மந்திர ஜபம் தான்;
(இதையே தான் ஒஷோவும் விவரித்திருக்கின்றார்=ஒரே
ஒரு கதவுதான் நமக்கும்,அந்த சூட்சும உலகிற்கும் இடையெ இருக்கின்றது;அந்த கதவைத் திறக்கும்
சாவி முறையான மந்திர ஜபமே)ஆமாம்! சில உக்கிரமான தெய்வங்களின் மந்திரங்களைத் தவிர மற்ற
அனைத்து கடவுள்களின் மந்திரங்களை எப்போதும் எங்கும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்;
கலியுகத்தில் பிறந்து,பணத்தை நோக்கித்தான் பெரும்பாலானவர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்;பணம்
அவசியம் தான்! ஆனால்,பணம் மட்டுமே தேவை என்று வாழ்வதால் ஏராளமான பாவங்களைச் செய்து
விடுகிறோம்;
அடுத்தவர்களை மனம் நோகவைத்து சம்பாதிக்கும் பணம் கடுமையான கர்மவினையை
நமக்குள் உருவாக்குகின்றது;
அடுத்தவர்களை ஏமாற்றி சம்பாதிக்கும் பணம்,ஏற்கனவே நேர்மையாக சம்பாதித்த
சொத்துக்களையும் கரைந்து காணாமல் போக வைக்கின்றது;
அண்ணாமலை கிரிவலம் மட்டுமே முறையற்ற விதத்தில் சேர்த்த பணத்தில் உருவான
கர்மவினையை நீக்கும் ஒரே சுயபரிகாரம் ஆகும்;
சிவாய நம என்ற மந்திரத்தை 28 கோடி முறை ஜபித்துவிட்டு,செம்பைப் பார்த்தால்
அது தங்கமாக மாறிவிடும் என்ற தேவரகசியத்தை சித்தர்களின் தலைவர் அகத்தியர் நமக்கு உபதேசமாகக்
கூறியிருக்கின்றார்;
நாம் அல்லது நமது மகன்/ளை தினமும் சிவாய நம என்ற மந்திரத்தை ஜபிக்க வைக்கலாம்;சில
லட்சம் முறை ஜபித்ததும் நமக்கு பொன்னாசை,பணத்தாசை போய்விடும்;அதே சமயம் பணம் சார்ந்த
பற்றாக்குறையும் நம்மைவிட்டு அகன்றுவிடும்;
அதனால் தான்,சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு ஒரு நாளும் துன்பம்
இல்லை என்று பாடியுள்ளனர்;
மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்த சில மாதங்களுக்கு நமது மன வைராக்கியத்திற்கும்,நமது
விதிக்கும் இடையே பெரும் போராட்டம் நடைபெறும்;அது நம்மை சோம்பலாக்கி தொடர்ந்து ஜபிக்க
விடாமல் தடுக்க பலவிதமான சோதனைகள் வரவழைக்கும்;அசராமல் இருந்தால் நாம் ஜெயித்துவிடலாம்;
முயற்சி செய்வோமா?
No comments:
Post a Comment