Sunday, May 8, 2016

அட்சய த்ரிதியை அன்று(9.5.16 திங்கள்) நாம் செய்ய வேண்டியவை


அட்சய த்ரிதியை அன்று தங்கம் வாங்கினால்,அது வாழ்நாள் முழுவதும் தங்கம் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று ஜோதிடர்களும்,தங்கக் கடை வியாபாரிகளும் இணைந்து தமிழ்நாட்டில் இரு புது ட்ரெண்டை உருவாக்கிவிட்டார்கள்;


அட்சய த்ரிதியை அன்று நாம் செய்யும் எந்த ஒரு புண்ணியக் காரியமும் அடுத்த ஒருவருடம் வரை=அடுத்த வருட அட்சய த்ரிதியை வரை=வளர்ந்து கொண்டே செல்லும் என்பதுதான் புராதன நூல்களில் இருக்கும் கருத்து;

தங்கம் வாங்குவதற்கு அட்சய த்ரிதியை அன்றுதான் நல்ல நாள் என்று நம்புவதே தப்பு;ஒவ்வொரு நாளும் லக்னத்தில் குரு இருக்கும் போது,அதாவது ஆடி 18 வரை(2.8.16 வரை) சிம்ம லக்னம் இருக்கும் போது தங்கம் வாங்கிட,அப்புறம் காலம் பூரா தங்கம் வாங்கிக் கொண்டே இருக்கலாம்;

அது சரி;நாம் காலம் பூரா தங்கம் வாங்கி என்ன செய்யப் போகிறோம்?

அதற்குப் பதிலாக பின்வரும் புண்ணியக் காரியங்களில் ஒன்றை மட்டுமாவது செய்வது நன்று;

தெரியாத்தனமாக கலியுகத்தில் பிறந்துவிட்டோம்;இருக்கும் கர்மவினைச் சுமைகளை கரைக்க இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்வோமே!

1.அன்னதானம் சிவாலயத்தின் வாசலில் செய்தல்;முடியாவிட்டால், பசியோடு இருக்கும் ஏழை எளியவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் அன்னதானம் செய்தல்(சாப்பாடு பார்சல் வாங்கிக் கொடுக்கலாம்)

2.சிவாலயத்தை சுத்தப்படுத்துதல்(உழவாரப் பணி)

3.ருத்ராட்ச தானம் செய்தல்

4.குலதெய்வம் கோவிலுக்கு அரிசி,எண்ணெய்,காய்கறி,பருப்புவகைகள் வாங்கித் தருதல்

5.குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்குச் செல்லுதல் அல்லது அண்ணாமலை கிரிவலம் செல்லுதல் அல்லது உள்ளூரில் இருக்கும் சிவாலயம் செல்லுதல்

6.கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் சாதுக்கள்,வறியவர்களுக்கு ஆடை தானம் செய்தல்

7.பசுவுக்கு கீரை,வாழைப்பழம் தருதல்

8.பசுமடத்தில் சுத்தம் செய்தல்

9.பசுவை குளிக்க வைத்து,சீராட்டுதல்

10.வில்வக் கன்று நடுதல்

11.வீட்டிலேயே காசிவில்வம் நட்டு வளர்க்கத் துவங்குதல்

12.ஏழை மாணவ,மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்துதல் அல்லது புத்தகம்,நோட்டு வாங்கித் தருதல்

13.ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்யத் தேவையான தாலி தங்கத்தில் செய்து தானம் தருதல்

14.மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்திட நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படுதல்

15.மதமாற்றத்திற்கு எதிராகப் போராடுபவர்களை ஆதரித்தல்

16.நமது தெருவில் திருவிளக்கு பூஜை செய்தல்;செய்பவர்களுக்கு பக்கபலமாக இருப்பது;

17.விவேகானந்த கேந்திரம் நடத்தும் பண்பாட்டு பயிற்சி வகுப்புகளை நமது பகுதியில் நடத்துதல்;அந்த வகுப்புகளுக்கு நமது மகன்/ளைஅனுப்புதல்

18.தேவாரப் பதிகங்கள் அச்சடித்து விநியோகித்தல்

19.உண்மையான விபூதி தயார் செய்து விநியோகித்தல்/ஏற்கனவே தயார் செய்பவர்களிடம் வாங்கி ஒரு கால பூஜை நடைபெறும் சிவாலயங்களுக்கு மாதம் தோறும் அன்பளிப்பாக வழங்குதல்

20.பாழடைந்த சிவாலயத்தைக் கண்டறிந்து ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்தல்;அந்தக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்தல்,பிரபலப் படுத்துதல்;

21.ஆன்மீக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தல்;

22.ஆலயத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடுதல்;

23.ஜோதிடர்களுக்கு அண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் ஸ்ரீலோபமுத்ரை சமேத அகத்தியர் ஆசிரம வெளியீடுகளை மொத்தமாக வாங்கி அன்பளிப்பாக வழங்குதல்

24.சிவமந்திரங்களின் பெருமைகளை அச்சடித்து வெளியிடுதல்;


ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment