Sunday, May 8, 2016

ஆன்மீகமும்,பக்தியும்,ஆன்மீகப் படைப்புகள் அனைத்தும் இளைய தலைமுறைக்கே!!


மூங்கிலானது பசுமையாக இருக்கும்போது எளிதாக வளைத்துவிடலாம்;முற்றிப் போனால் அதை வளைப்பது முடியாத காரியம்;

அதுபோலத்தான்,நம் மனமும்!

சிறுவயதில் தெய்வீக நாட்டத்தை ஏற்படுத்துவது மிகவும் எளிது; சிறுவயதிலேயே நமது குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;

ஒருபோதும் காதலையோ,தாம்பத்தியத்தையோ முழுமையாக தவிர்த்துவிட்டு,ஆன்மீகத்தேடலில் யாரும் இறங்கக்கூடாது;இல்லறத்தில் இருந்து கொண்டே தான் ஆன்மீக முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்;ஒரு கோடி மனிதர்களில் ஒருவருக்கு மட்டுமே காதலையும்,காமத்தையும் தவிர்த்துவிட்டு நேரடியான துறவு வாழ்க்கை வாழமுடியும்;அவரே ரமண மகரிஷி,சுவாமி விவேகானந்தருக்கு இணையானவர்கள்;


லிங்கோத்பவரின் மிகவும் பழைய பெயர் அண்ணாமலை ஆகும்;பல தமிழ்நாட்டு சிவாலயங்களில் லிங்கோத்பவர் சன்னதி இருப்பதில்லை;இந்த ஆலயங்கள் அனைத்தும் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை;

எப்படியெனில்,பூமியில் விஷ்ணு வழிபாடு உருவாகி 6000 ஆண்டுகள் தான் ஆகின்றன என்பதை இந்த ஆலயங்கள் மறைமுகமாகத் தெரிவிக்கின்றன;

அண்ணாமலையில் அருணாச்சலத்தின் அடிமுடியைத் தேடி பிரம்மனும்,விஷ்ணுவும் போனது 6000 ஆண்டுகளுக்கு முன்புதான்;

இந்த தெய்வீகச் சம்பவம் நிகழ்ந்தப் பின்னரே,சிவாலயங்களில் லிங்கோத்பவர் சன்னதியை உருவாக்கத் துவங்கினர்;

சண்டேஸ்வரரை தரிசித்து,மெதுவாக கைத் தட்ட வேண்டும்;இப்படிச் செய்தால் தான் சிவாலயத்திற்கு நாம் வருகை தந்தது அந்த ஆலயத்தில் இருக்கும் ஈசனுக்கு தகவலாகச் செல்லும்;பலர் அறியாமையால் சண்டேஸ்வரரை வழிபடுவதில்லை;இதனால்,அந்த சிவாலயத்திற்குச் சென்ற புண்ணியம் அவர்களுக்கு சூட்சுமமாக வந்து சேருவதில்லை;


பல சிவாலயங்களில் துர்கையின் கையில் சங்கும்,சக்கரமும் இருக்கும்;கூர்ந்து கவனித்தால் தான் இதை நாம் புரிந்து கொள்ள முடியும்;இம்மாதிரியான துர்கைக்கு விஷ்ணு துர்கை என்று பெயர்;


கங்காளநாதர் என்ற பெயரில் ஒரு சன்னதி இருக்கின்றது;இவரை எப்படி வழிபடவேண்டும்? எதற்கு வழிபடவேண்டும்? என்று ஒரு நடைமுறையே இருக்கின்றது;

வீரபத்திரர் வழிபாடு முழுவதும் நேர்மையாக வாழ்பவர்களால் மட்டுமே பின்பற்றிட முடியும்;வீரபத்திரர் வழிபாட்டின் மூலமாக எப்பேர்ப்பட்ட நோய்,கடன்,வறுமை,சிக்கல்களையும் தீர்க்க முடியும்;அதன் பிறகு,வீரபத்திரர் உபாசகர் எந்த ஒரு அன்பளிப்பும் வாங்காமல் இருக்க வேண்டும்;இதனால் தான்,இன்றைக்கு வீரபத்திரர் வழிபாடு செய்பவர்களைத் தேட வேண்டியிருக்கின்றது;

அறுபத்து மூன்று நாயன்மார்களை கண்டிப்பாக சிவமந்திரம் ஜபித்து வழிபடவேண்டும்;

பாரத தேசம் முழுவதுமே எல்லா சிவாலயங்களும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும்;சில சிவாலயங்கள்(சுமாராக 150 சதுர கி.மீ,.க்கு ஒரு சிவாலயம்) மேற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன;இவைகள் அனைத்துமே பரிகார சிவாலயங்கள்! இங்கே செய்யப்படும் அனைத்துப் பரிகாரங்களும் உடனடியாக பலன் தரும்;(அசைவம்,மது இவைகளைக் கைவிட்டிருந்தால்!)

சில சிவாலயங்களில் ஈசன் கிழக்கு நோக்கியும்,அம்பாள் தெற்கு நோக்கியும் அமைக்கப்பட்டிருக்கும்;இங்கே நமது கடினமான கர்மவினைகளைப் போக்கும் வழிபாட்டுமுறைகளையும்,பரிகாரங்களையும் செய்யலாம்;

பல முற்பிறவிகளாக ஈசனை மட்டும் வழிபட்டுவந்தவர்களுக்கு,இப்பிறவியில் குறிப்பிட்ட அளவுக்கு சிவமந்திரம் ஜபித்தப் பின்னர்,சிவாலயத்தினுள் இருக்கும் சிவலிங்கங்கள் லிங்கமாகத் தெரியாது;அதனுள் புதைந்திருக்கும் தெய்வீக சக்தியாக,உருவமாக,அளவற்ற பிரகாசம் நிறைந்த ஒளியாக அல்லது தேவ உருவாகத் தெரியும்;

லெமூரியா என்ற குமரிக் கண்டத்தில் மிகவும் பிரம்மாண்டமான சிவாலயங்கள் இருந்திருக்கின்றன;இங்கே நாம் கற்பனை செய்ய முடியாத சில தெய்வீக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன;இவைகளை ஒருமுறை தரிசித்தாலே,நம்மால் கனவில் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பயணித்து வரமுடியும்;

ஓம் அருணாச்சலாய நமஹ

ஓம் சிவாய நம


ஓம் ரீங் சிவசிவ

No comments:

Post a Comment