அலைபேசியும்,இணையமும் நமது தினசரி வாழ்க்கையை படுவேகமாக மாற்றிவிட்டன;நம்
ஒவ்வொருவருக்கும் குடும்பப் பொறுப்பு,வேலை/பணிப்பொறுப்பு/தொழில் பொறுப்பு என்ற சுமைகளுடன்
சொந்த ஆன்மீக லட்சியத்தை அடையும் பொறுப்பு என்று ஏராளமான சுமைகளை மனதுக்குள் சுமந்து
கொண்டு தான் தினசரி வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது;
இந்த சூழ்நிலையில் உடனடி உணவு,உடனடி வேலை என்று நமது வாழ்க்கைப் பயணம்
மாறிவிட்டதால்,உடனடி பலன் கிடைக்க வேண்டும் என்ற மனோபாவமும் நம்மிடையே பரவி விட்டது;இதற்கு
பேராசை என்று சொல்வது சரியா?
உடனடியாக அல்லது மிகவும் குறுகிய காலத்திற்குள் வரங்களை அள்ளித் தருபவர்கள்
பைரவரும்,வராகியும் ,லட்சுமி நரசிம்மரும் மட்டுமே!
முறைப்படி மந்திரஜபம் ஜபித்தாலே இவர்களின் அருள் கிட்டிவிடும்;இன்னும்
விரைவாக கிட்டிட நாம் செய்ய வேண்டியது பின்வரும் ஆலயங்கள் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கலாம்;அல்லது
இந்த ஊரில் நீங்கள் வசிக்கலாம்;இந்த ஆலயங்களில் காலையில் 6 மணிக்குள்ளாகவும்,மாலை
6 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள்ளாகவும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்கள் மற்றும்
வராகி மாலை(வராகி பரணி)யை ஜபிப்பது நன்று;
தேய்பிறை பஞ்சமி மற்றும் பவுர்ணமி நாட்களில் இவைகளை ஐந்து அல்லது ஐந்தின்
மடங்குகளில் ஜபிப்பது அவசியம்;
இந்த ஆலயங்களைத் தவிர,நமது ஊர்களில் இருக்கும் பழமையான ஆலயங்களிலும்
ஜபிக்கலாம்;உள்ளூரில் வசிப்பவர்கள் தினமும் வசிக்கலாம்;தற்போது மார்கழி மாதம் என்பதால்
அதிகாலையிலும் ஜபிக்கலாம்;
இந்த பூமியில் நாம் கேள்விப்படும் அனைத்து பெண் தெய்வங்களும் அன்னை அரசாலை(வராகி)யின்
அம்சங்களே!சிவனும்,பார்வதியும் இணைந்த ஒரே வடிவம் அரசாலை(வராகி);மஹாவிஷ்ணுவின் வராக
அவதாரமும் அன்னை அரசாலை(வராகி)யே!
1.காசி
2.திருவிடந்தை(சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் 45
வது கி.மீ.தொலைவில்) அருள்மிகு லட்சுமி வராகப் பெருமாள்+கோமளவல்லித் தாயார் ஆலயம்
3.அரியலூர் ஆலந்துறையார் ஆலயம்(இங்குள்ள போர்க்காளி அன்னை அரசாலையே!)
4.செங்கண்மால் அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர்+பெரிய நாயகி( சென்னையில்
இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் கேளம்பாக்கத்தை அடுத்துள்ளது)
5.திருப்பன்றிக்கோடு,கன்னியாக்குமரி மாவட்டம்
6.அரித்துவாரமங்கலம் அருள்மிகு பாதாளவரதர்+அலங்காரவல்லித் தாயார்
7.குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர்+பாலகுஜாம்பாள்(கடம்பவன நாதர்+மற்றிலா
முலையாள்)
8.தஞ்சை பிரகதீஸ்வரர்(அன்னையின் பெயர் பிருகத் வராகி)
9.உத்திரகோசமங்கை(ராமநாதபுரம் மாவட்டம்)
10.பள்ளூர் அரசாலை(காஞ்சிபுரம் டூ அரக்கோணம் சாலையில் 15 வது கி.மீ.)
11.அண்ணாமலை(அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்)
12.காளஹஸ்தி அருள்மிகு காளஹஸ்திநாதர் என்ற குடுமிநாதர்
13.ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீவராகப் பெருமாள் ஆலயத்தில் பூவராகர்!
14.திருமலை திருப்பதியில் ஆதிவராகர்
15.ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வைத்தியநா
தசுவாமி+சிவகாமி அம்பாள்
16.காஞ்சிபுரம் அன்னை சன்னதிகள் அனைத்தும்
17.கும்பகோணம் அன்னை சன்னதிகள் அனைத்தும்
18.திருச்சி திருஆனைக்கா அகிலாண்டேசுவரி
19.பழைய சமயபுரம்
20.இருக்கன் குடி
21.கன்னியாக்குமரி அம்மன் கோவில்
இந்த ஆலயங்களில் சிவம் அல்லது பெருமாள் சன்னதியின் முன்பாக 15 நிமிடமும்,அம்பாள்/தாயாரின்
சன்னதி முன்பாக 15 நிமிடமும் தினமும் ஜபிக்க வேண்டும்;செல் போனை இந்த சமயத்தில் அணைத்து
வைக்கவும்;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment