எமது ஜோதிட அனுபவங்கள் -2
2001 ஆம் ஆண்டு அது;ஒரு நண்பரின் மூலமாக இன்னொருவர் ஜாதகம் பார்க்கத்
தேடி வந்தார்;சுமாராக இரண்டு மணி நேரமாக அவரது ஜாதகத்தை ஆராய்ந்து,கணிதம் கணித்து,உங்களுக்கு
இந்தத் தேதியில் இருந்து இந்தத் தேதிக்குள் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருக்கின்றது;இதில்
இருந்து தப்பிக்க உங்கள் குலதெய்வத்தை தினமும் வழிபடுங்கள்;என்று கூறினோம்;
அவரோ,எனது குலதெய்வக் கோவில் 120 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கின்றது;நாங்கள்
ஆண்டுக்கு ஒருமுறைதான் அங்கே செல்வது வழக்கம்;என்ன செய்ய? என்று வினவினார்;
வீட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் போட்டோ இருக்கின்றதா? என்று கேட்டதற்கு,தெரியவில்லை;என்றார்;
இருந்தால்,தினமும் காலையில் 15 நிமிடம் வரை அந்த படத்தின் முன்பாக வழிபட்டுவிட்டு
வேலைக்குச் செல்லுங்கள்;இல்லாவிடில், இரண்டு வார்த்தைகள் சொல்லி இதைச் சொல்லிவிட்டு
உங்கள் குலதெய்வத்தின் பெயரை இரண்டு முறை கூறவும்;இது ஒருவரி;இந்த ஒருவரியை தினமும்
108 முறை ஜபிக்கவும்;காலையில் குளித்து முடித்ததும் ஜபிக்கவும்;என்று விவரித்தோம்;
8 ஆம் நாளில் அவர் மீண்டும் எம்மை நேரில் சந்தித்தார்;வீட்டில் அவருடைய
குலதெய்வத்தின் போட்டோ இருக்கிறது;மிகவும் அழுக்காகவும்,பழையதாகவும் இருக்கின்றது;அந்தப்
படத்தை வைத்து பிரார்த்தனை செய்யலாமா? என்று கேட்டார்;நமது தாத்தாவுக்கு உரிய மரியாதையை
குலதெய்வத்துக்குத் தரவேண்டும்; என்றோம்;
ஒரு வருடம் கடந்தது;திடீரென அவர் மீண்டும் எம்மைத் தேடி வந்தார்;அப்போது
இரண்டு மூன்று வீடுகள் மாறிவிட்டதால்,சுமாராக நான்கு மாதங்களாக எம்மைத் தேடிக் கொண்டே
இருந்தார் என்பது புரிந்தது;மிகவும் கஷ்டப்பட்டு எம்மைத் தேடிக் கண்டுபிடித்தது புரிந்தது;
வித்தையில் சூரனாக இருப்பவர்கள் எப்போதும் வறுமையில் தான் இருப்பார்கள்
என்பது கலியுக விதி;வித்தையில் கவனம் செலுத்துபவர்கள் பணம் சம்பாதிக்கும் ஆசையின்றி
இருப்பார்கள்;பழகுபவர்களின் நலனில் அக்கறையுடன் இருப்பார்கள்;இதை சிலபல மந்திரவாதிகள்
பயன்படுத்திக் கொண்டு,இவர்களுக்கு சிறு உதவி செய்து,தம்மை வளப்படுத்துவது வழக்கம்;இதுவும்
காலம் காலமாக இருந்து வரும் துரோக சரித்திரமே!
ஜோதிடம்,சித்தமருத்துவம்,கைரேகை,சரக்கலை,பஞ்சபட்சி
வாஸ்து,யோகாசனம்,சாமுத்ரிகா லட்சணம் கற்றறிந்த நிமித்திகன்,பிரபஞ்சசக்தியை
கையில் தேக்கி வைத்து பிறரின் நோய்களைக் குணப்படுத்தும் ஹீலிங் மாஸ்டர்கள் இவர்கள்
அனைவருமே வித்தைக்காரர்கள் தான்;
கையோடு எம்மைக் கட்டாயப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்;அவரது
வீடு சிறிய மாளிகை போல இருந்தது;தனது கையால் எமக்குப் பரிமாறி,எம்மை கட்டாயப்படுத்தி
சாப்பிட வைத்தார்;
சாப்பிட்டப் பிறகு,அவர் எமது அருகில் அமர்ந்து கொண்டு,அவருக்கு நாம்
சொன்ன ஜோதிடக் கணிப்பு பலித்ததை விவரித்தார்;நாம் குறிப்பிட்டுக்கூறிய தேதிக்குள் அவருக்கு
விபத்து நடந்திருக்கிறது;இவர் மட்டும் அந்த விபத்தில் இருந்து தப்பியதையும் தெரிவித்திருக்கிறார்;விபத்து
நடைபெற்ற போது யாரோ ஒரு தாத்தா(அவரது குல தெய்வம்) வாகனத்தில் இருந்து எகிறி விழுந்த
இவரை,தமது இருகைகளால் தாங்கியதைத் தெரிவித்தார்;எமக்கு ஆச்சரியமும்,பெருமையுமாக இருந்தது;எமது
ஜோதிடப் புலமை மீதான நம்பிக்கை இதன் மூலமாக இன்னும் பலமடங்கு அதிகரித்தது;
அதன்பிறகு,நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்;இரண்டு ஆண்டுகள் கடந்தன;அவருக்கு
விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்ததை தெரிவித்ததோடு,அது எப்போது முடிவுக்கு வரும்? என்று
கேட்டார்;அவரது ஜாதகப்படி அதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று தெரிந்ததால்,சரியான சந்தர்ப்பம்
வரும்போது தெரிவிக்க முடியும் என்று மட்டும் தெரிவித்தோம்;
இறுதிகட்ட விசாரணை அவருக்கு வந்தது;அந்த தேதியில் அவர் நீதிமன்றவளாகத்தில்
அவமானப்பட வேண்டும் என்பது தெரிந்தது;எனவே,அவரை எச்சரித்து,என்ன சம்பவம் நீதிமன்றத்தில்
நடந்தாலும்,தாக்குதல் பாணியில் செயல்பட வேண்டாம்;தற்காப்புப் பாணியில் செயல்படும்படி
ஜோதிட அறிவுரை கூறினோம்;
அன்றைக்கு இருதரப்பு வாதங்களும்,விசாரணைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த
போது,இவரது மனைவி வீட்டார் நீதிமன்றத்திலேயே இவர் மீது செருப்புடன் பாயத் துவங்கினர்;இவரோ
தன்னைத் தற்காத்துக் கொள்ள கூண்டில் இருந்து தாவிக் குதித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடத்
துவங்கினார்;இவரது மனைவி வீட்டார் இவரை கேவலமாகத் திட்டிய படியும்,கத்தியபடியும் ஓட
இவரோ நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி வரத் துவங்கினார்;இதனால் கோபமுற்ற நீதிபதி இவரது மனைவியின்
வக்கீலை அழைத்து செம திட்டு,திட்டி அவர்களை அழைத்து வரச் செய்தார்;நீதிபதியும் அவர்களைக்
கண்டித்தார்;
விளைவு?
அடுத்த சில வாரங்களில் இவருக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தது;மேலும்,இவரது
மனைவி தரப்புக்கு இவர் வழக்குச் செலவு உள்பட எதுவும் தரவேண்டியதில்லை;என்றும் தீர்ப்பானது;சுமாராக
12 முதல் 14 ஆண்டுகளாக இந்த வழக்குடன் போராடியிருந்தார் என்பது பின்னர் தெரிந்தது;
அன்று மாலையே எம்மிடம் தேடிவந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்;அன்று
முதல் அவர் எனது அண்ணன் ஆனார்;ஆமாம்! அவரது கடந்த கால வாழ்க்கைச் சோகங்களைத் தெரிவித்தார்;எமக்கே
கண்ணீர் வந்தது;நாம் மட்டும் தான் பலவிதமான அவமானங்களைச் சந்தித்தோம்;என்று எண்ணியிருந்தோம்;இவரது
வாழ்க்கை அதைவிட கொடூரமாக இருக்கின்றதே? என்று வருந்தினோம்;இவரது ஜாதகத்தில் இருக்கும்
அனைத்து தோஷங்களையும் நீக்கி இவரை இப்பிறவியிலேயே பரிசுத்த ஆத்மாவாகவும்,மகத்தான செல்வந்தர்
ஆக்கவும் அக்கணமே மனதிற்குள் சபதம் எடுத்தோம்;
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது நட்பு வட்டம் எமது ஜோதிட வாடிக்கையாளர்களாக
ஆனது;
அவருடைய நெருங்கிய நண்பர்கள் எமது ஆத்மார்த்தமான நண்பர்கள் ஆனார்கள்;
அந்த அண்ணன் தமது ஆருயிர் நண்பர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார்;அவருக்கு
11 குழந்தைகள்;அவரோ தினக்கூலி;எமக்கோ ஆச்சரியம்;இவரும்,இவரது மனைவியும் தினசரி வேலைக்குப்
போய் எப்படி 11 குழந்தைகளுக்கு உணவு தருகிறார்கள்? என்று;ஆனால்,அவரிடம் இதைக் கேட்க
முடியவில்லை;11 குழந்தைகளுக்கும் ஒரே நாளில் ஜாதகம் பார்த்து முடித்தோம்;அதில் 7 வது
குழந்தையாக ஒரு மகன் இருக்கிறான்;இந்த மகனின் ஜாதகப்படி நீங்கள் இன்னும் 4 வருடம்,19
நாட்களுக்குப் பிறகு கோடீஸ்வரர் ஆவீர்கள்;புதையல் கிடைப்பது போல உங்களுக்கு திடீரென
சிலபல கோடிகள் கிடைக்கும்;என்றோம்;அவர் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்;போய்விட்டார்;எனது
அண்ணனோ,அவரிடம் என்னை விட்டுக் கொடுக்காமல் வாதாடியிருக்கிறார்;
காலங்கள் கடந்தன;இந்த தினக்கூலியின் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல்
மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்;ஆனால்,அவரை கவனிக்க உறவினர்கள்
யாரும் செல்லவில்லை;இவரை இவரது மனைவி கட்டாயப்படுத்தி,அந்த மருத்துவமனையில் கவனிக்கச்
சொல்லி கொண்டு போய்விட்டுவிட்டு வந்திருக்கிறார்;இவரும் சில மாதங்கள் இருந்து அவருக்கு
துணையாக இருந்திருக்கிறார்;இவர் வந்ததாலோ என்னவோ,அந்த உறவினர் குணமாகிவிட்டார்;இவருக்கு
தினசரி சம்பளம் மட்டும் தந்திருக்கிறார்;குணமான சில வாரங்களில் அந்த உறவினர் உயில்
எழுதியிருக்கின்றார்;அவரது சொத்துக்கள் பல கோடி ரூபாய்கள் பெறும்;உயில் எழுதிய சில
மாதங்களில் அந்த உறவினரின் ஆயுள் நிறைவடைந்தது;சிவபதம் அடைந்துவிட்டார்;முறைப்படி உயிலை
பதிவு செய்திருந்தபடியால்,இவருக்கு மட்டும் சில கோடி ரூபாய்கள் சொத்து கிடைத்தது;தினக்கூலியாக
இருந்தவர் இன்று கோடீஸ்வரர் ஆகிவிட்டார்;ஆனால்,இதை அந்த தினக்கூலி எம்மிடம் கூறவில்லை;இதை
உடன் இருந்து கவனித்த எமது அண்ணன் தான் தெரிவித்தார்;ஜோதிடத்தின் மீது எமது அண்ணனுக்கு
நம்பிக்கை அதிகமாகிவிட்டது;இப்போது எமது அண்ணன் எம்மை ஜோதிடம் கற்றுத் தரச் சொல்லி
நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்;
நேர்மையான ஜோதிடர்கள் இதைப் போல தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்;அவர்களால்
தான் பல குடும்பங்கள் வசதியாகவும்,நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றன;எமக்கு கொஞ்சம்
எழுத்தாற்றலும்,இணையம் பற்றிய அறிவும் இருப்பதால் எம்மைப் பற்றி எமது ஜோதிட அனுபவம்
பற்றி எழுத முடிகிறது;
இப்படிக்கு
சுப ஜோதிடர் கை.வீரமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர்.
9092116990 9364231011
No comments:
Post a Comment