8.1.2016 அன்று கன்னிராசியில் இருந்து சிம்மராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி
ஆகிறார்;அதே நாளில் மீன ராசியில் இருக்கும் கேதுபகவான்,கும்பராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்;
இதனால் எந்த எந்த ராசிக்கு என்னென்ன பலன் கள் ஏற்பட இருக்கின்றன? என்பதை
புத்தகங்களிலும்,வார இதழ்களிலும்,இணையத்திலும் எமது ஜோதிட உடன்பிறப்புகள்
எழுதி குவித்துவருகிறார்கள்;அவைகளில் தங்களுக்கு விருப்பமானவைகளை தாங்களே வாசித்து
அறிந்து கொள்ளுங்கள்;
நமது ஜாதகப்படி நாம் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சரி;நமது வாழ்க்கையில்
வர இருக்கும் கஷ்டங்களையும்,அவமானங்களையும் பக்தியால் தடுத்து நிறுத்திவிடமுடியும்;
சிம்மத்திற்கு ராகு பெயர்ச்சி ஆகி,சிம்மத்தைக் கடக்க 18 மாதங்கள் எடுத்துக்
கொள்வார்;அதேபோல,கும்பத்திற்கு கேது பெயர்ச்சி ஆகி ,கும்பத்தைக் கடக்க 18 மாதங்கள்
எடுத்துக் கொள்வார்;
இதில் அதிகமான பாதிப்பு கடகராசிக்கும்,சிம்மராசிக்கும் அடுத்த 18 மாதங்களில்-1.5
ஆண்டுகளுக்கு (8.1.16 முதல்) ஏற்பட இருக்கின்றது;அது என்ன பாதிப்பு?
ராகு பகவானே நமது அவமானத்தை ஏற்படுத்தும் காரகத்துக் கிரகம்!
கண் இமைக்கும் நேரத்திற்குள்
அவமானத்தைத் தருவதில் ராகு பகவானை மிஞ்ச யாராலும் முடியாது;அதே போல,திடீர் என்று பெரிய
புகழை அள்ளித் தருவதிலும் ராகுவுக்கு நிகர் ராகுவே!
கடகராசி(புனர்பூசம் 4 ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்கள்)யில்
பிறந்தவர்கள் விளையாட்டாகப் பேசுவதை பிறர் இந்த 1.5 வருடத்தில் ஒருமுறையாவது தவறாக
எடுத்துக் கொண்டு இவர்களை அவமானப்படுத்துவார்கள்;எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும்! மே
2016 குருப்பெயர்ச்சி ஆனப் பின்னரே இந்த சம்பவம் நிகழும்;
சிம்மராசி(மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம்) இந்த 1.5 வருடத்தில் ஒருமுறையாவது
காவல் நிலையம் செல்லக் கூடிய சூழ்நிலை உருவாகும்;அல்லது மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
பேய் பிடிக்கும் சூழ்நிலை உருவாகும்;மே 2016க்கு முன்பு உருவாக வாய்ப்புகள் அதிகம்;
இவையெல்லாம் அனுபவ ஜோதிடப் பலனே! இதில் இருந்து மீள ஒரே வழி:- ஒரு பக்தி
மார்க்கம் உள்ளது;
அதுதான் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு,அன்னை அரசாலை(வராகி)யைச்
சரணடைவதே!
இவரும் ப்ளாக் மெயில் பண்ணி,இப்படி அன்னை அரசாலை(வராகி) வழிபாட்டை பரப்புகிறாரோ?
என்று எண்ண வேண்டாம்;அது எமது சுபாவம் அல்ல;நான் அப்படிப்பட்ட ஆளும் அல்ல;எமது எழுத்துக்களின்
மீது மதிப்பு கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்
தான் இந்த கட்டுரையை உங்களுக்கு வழங்குகிறோம்;
8.1.2016 முதல் 1.5 வருடங்களுக்கு சிம்மராசி,கடகராசிக்காரர்கள் செய்ய
வேண்டியது என்ன?
(அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு)தினமும் உங்களுடைய இருப்பிடத்திற்கு
அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்;அருகில் அம்மன் கோவில்
இல்லாவிடில் பழமையான சிவாலயம் செல்ல வேண்டும்;
அங்கே அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை காலையில் 30 நிமிடமும்,இரவில்
30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;
இருவேளையும் கோவிலுக்குச் செல்ல முடியாவிடில்,ஒருவேளையாவது(காலையாக இருந்தாலும்
சரி;இரவாக இருந்தாலும் சரி;உங்கள் வசதிப்படி!)
சென்று மூலவர் சன்னதி முன்பாக 15 நிமிடமும்,அம்பாள் சன்னதி முன்பாக
15 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;
அம்மன் கோவில் எனில்,அம்மன் சன்னதி முன்பாக அமர்ந்து கொண்டு அல்லது நின்று
கொண்டு 30 நிமிடம் ஜபித்து வரவேண்டும்;
12 பெயர்களும் மனப்பாடம் ஆனப் பின்னர்,எப்போதும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்;(பேசும்
நேரம் & தூங்கும் நேரம் தவிர)இது மட்டுமே வரவேண்டிய அவமானத்தில் இருந்து மீள வழி!
அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச்
சேர்த்தால் 13 பெயர்கள்!!!)
ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
18 வயதைவிடக் குறைவான கடகராசி மற்றும் சிம்மராசிக்காரர்களும் இந்த மந்திரத்தை
ஜபிக்கலாம்;முறைப்படி தீட்சை வாங்கவேண்டிய அவசியம் இல்லை;வாய்விட்டு சொல்லக் கூடாது;மனதிற்குள்
ஜபிக்கலாம்;
சிலருக்கு மனதுக்குள் ஜபிக்கும் திறன் இருக்காது;அவர்கள் தினமும் ஓம் வராகி சிவசக்தி ஓம் என்ற மந்திரத்தை 108 முறை எழுதி
வரலாம்.
No comments:
Post a Comment