Tuesday, December 29, 2015

காஞ்சிப் பரமாச்சாரியாரின் உபதேசம்


“நவீன ஸயன்ஸின் அபிவிருத்தியினால் எல்லா சவுகர்யங்களையும் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம்;மதமும்,அனுஷ்டானமும் எதற்கு வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள்;ஸயன்ஸினால் பல சவுகரிய சாதனங்களை உண்டாக்க முடிவது உண்மையே; ஆனால்,இதனால் ஆனந்தம் வந்துவிட்டதா என்பது தான் கேள்வி;

ஆனந்தம் என்பது மனதிருப்தியை,உள்ள நிறைவைக் குறித்த விஷயம்;சவுகரிய வாழ்வுக்கு இதெல்லாம் தேவை.இன்னமும் தேவைகள் இருக்கின்றன என்ற அடிப்படையில் ஓயாமல் திரவியங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதில் மக்கள் அதிருப்தியா அடைந்து வருகிறார்கள்?
ஏற்கனவே இருந்த திருப்தியும் போய்விட்டதைப் பார்க்கிறோம்.அதோடு இதில் போட்டா போட்டி,வர்க்க பேதம்,துவேஷம் எல்லாமும் வளர்ந்துவிட்டன;மனுஷ்யனின் ஆசையை பூர்த்தி செய்வது முடியாத காரியம்;ஆசைகளைக் குறைத்துக் கொண்டாலே உண்மையான ஆனந்தம் காண முடியும்.இதற்கு வழிகாட்டுவது மதம் தான்;ஆனபடியால்,ஸயன்ஸ் அபிவிருத்தி ஆகியிருப்பதாலேயே மதத்தின் தேவையும் அதிகமாயிருக்கிறது எனலாம்;

லெளகீக,விஞ்ஞான அபிவிருத்தியால் ஆத்மசாந்தி காணமுடியவில்லை என்று அமெரிக்கா,ருஷ்யா ஆகிய இரு தேசங்களும் நிதரிசனமாகக் காட்டுகின்றன;முதலில் ஸ்புட்னிக் செய்து உலகைச் சுற்றவிட்ட நாடு ருஷியா;அது கம்யூனிஸ நாடு;அங்கு மத போதனை கிடையாது;இருந்தாலும் டெக்னாலஜி அபிவிருத்தி மட்டும் அந்த நாட்டுக்கு உள்ள நிறைவை அளிக்கவில்லை;அதனால் தான் நமது மகாபாரதத்தை ருஷிய மொழியில் மொழி பெயர்த்துத் தங்கள் பள்ளிகளில் அவர்கள் போதிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்;அமெரிக்க மக்களுக்கு ஆத்ம சந்துஷ்டி(Emotional Satisfation) இல்லாததாலேயே அவர்கள் யோகம்,வேதாந்தம்,சங்கீர்த்தனம் இவற்றில் திரும்பியிருக்கிறார்கள்;ஸயன்ஸில் மிக முன்னேறிய தேசங்கள் நம் பாரத தேசத்தின் பக்கம் திரும்பிப் பயனடைய முயலும்போது, நாமே நமது புராதன தர்மத்தை மறந்து வெறும் இந்திரிய சவுக்கியத்தில்(fashion,amazing,complete enjoy) இறங்கினால் அது ரொம்பவும் பரிதாபமானது;

நம் தேசத்தில் லெளகீக ஆசையும்,நாஸ்தீகமும்,தெய்வ நிந்தனையும் தலைதூக்கினால் கூட,ஜீவசக்தி வாய்ந்த நம்முடைய ஸநாதன தர்மத்துக்கு எந்நாளும் அழிவு வராது என்று நம்பலாம்;அப்படி அழிவு வராமல் காப்பது நம்முடைய கடமை.

‘காப்பது’ என்றால் என்ன செய்ய வேண்டும்? 

நாஸ்திகர்களோடு,மத நம்பிக்கையில்லாதவர்களோடு சண்டை போடுவதா? இல்லை;ஹிந்து மதம் சண்டையின் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டதாகச் சரித்திரமே கிடையாது;

No comments:

Post a Comment