புத்தகவாசிப்பு என்பது இலக்கு இல்லாத நெடும்பயணம்! நமது வாழ்க்கையில்
நமது தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் சக்தி திரைப்படத்தைவிடவும்,டிவி சீரியலை விடவும்,விளம்பரப்
படங்களை விடவும் புத்தக வாசிப்புக்கு மட்டுமே உண்டு;
கடந்த 200 நூற்றாண்டுகளாக நூல்களை(காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு 200 ஆண்டுகள்
தான் ஆகின்றன;அதற்கு முன்பு ஓலைச்சுவடிகள்) வாசித்து வந்தமையால் தான் நமது முன்னோர்கள்
அளவற்ற தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருந்தனர்;
மற்றவர்களின் அனுபவங்கள் நமக்கு வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ள
கைகொடுக்கின்றன;சுயமுன்னேற்றம்,தன் வரலாறு,வரலாற்றுப் புராணங்கள்,நாவல்கள்,க்ரைம் நாவல்கள்,பயண
வரலாற்று நூல்கள்,அரசுகள் உருவான வரலாறும்,வீழ்ச்சியடைந்த விதங்களையும் நாவல்களாகவும்,கதைகளாகவும்
எழுதியுள்ளனர்;
இன்றைக்கு திரைப்பட இயக்குநர்கள்,டிவி சீரியல் இயக்குநர்களில் யாரெல்லாம்
மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றார்களோ அவர்கள் அனைவருமே புத்தக வாசிப்பின் மூலமாகவே
இந்த புகழை எட்டினர்;
12 வயதில் புத்தகவாசிப்புக்கு நமது குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்;உதாரணமாக,சுட்டி
விகடன் வாரம் இருமுறை வெளிவரும் இதழ்! அதை தொடர்ந்து வாங்கிவந்து நமது குழந்தைகளுக்கு
வாசிக்கப் பழக்கப்படுத்த வேண்டும்;
எப்போது பார்த்தாலும் டிவி பார்ப்பதையும்,செல்போனை நோண்டுவதையும் தடுத்து,எப்போது
பார்த்தாலும் புத்தகம் வாசிப்பதைப் பழக்கப்படுத்திடவேண்டும்;
15 வயது முதல் 20 வயது வரை இருக்கும் மகனை அடிக்கடி ஆனந்த விகடன்,கலைமகள்,கல்கி,கல்கண்டு
முதலிய பருவ இதழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்தவேண்டும்;புத்தகம் வாங்கிட வசதி இல்லாதவர்கள்
அருகில் இருக்கும் அரசு நூலகத்திற்கு நமது மகனை அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்துக்கு
அடிமைப்படுத்துவது அவசியம்;
மேதைத்தனம் என்பது ஒரே நாளில் வருவதில்லை;படிப்படியாக உருவாக்கப்படுவது!
போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் வெறும் டிப்ளமோ அல்லது டிகிரி அல்லது
பி.ஈ., அல்லது பி,டெக்.,படித்தால் மட்டும் வேலை கிடைத்துவிடாது;
ஒருவேளை கிடைத்தாலும் அதைத் தக்க வைக்கும் சாமர்த்தியம் இல்லாவிடில்,லோக்கல்
வேலைக்கு(படித்த படிப்பிற்கு சிறிதும் பொருந்தாத)த்தான் செல்ல வேண்டியிருக்கும்;இதை
மாற்றிட நமது குழந்தையின் 12 வயது முதல் 21 வயது வரை படிப்படியாக படிப்பு மற்றும் பொது
அறிவு சார்ந்த மேதையாக மாற்றிடவேண்டும்;
பயம் உள்ள மகனை அடிக்கடி கபடி விளையாட அனுப்புவதன் மூலம் துணிச்சல் உள்ளவனாக
மாற்றிவிடலாம்;இந்தக் கருத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் யாராவது நிச்சயமாக மனோதத்துவ
முனைவர் பட்டம் பெறுவர் என்பது உறுதி!
அப்பா அல்லது அம்மாவாக இருப்பவர்கள் தமது மகனை/ளை தமது நிராசைகளைத் திணித்து
வளர்ப்பது மகத்தான முட்டாள்த்தனம்;ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும் போதே சில தனித்தன்மைகள்
இருக்கும்;அதற்கு உரிய துறையில் வளர்த்தால் 30 வயதிற்குள் உலகச்சாதனைகள் புரிவது உறுதி;செமத்தியாக
சம்பாதிக்கப் போவதும் நிச்சயம்;
No comments:
Post a Comment