Monday, December 21, 2015

பலபிறவிக் கர்மாக்களை அழிக்கும் அன்னைஅரசாலை(வராகி) வழிபாடு!


யாரெல்லாம் இப்பிறவி முழுவதும் வயதுக்குரிய மெச்சூரிட்டி இல்லையோ,அவர்கள் அனைவருமே 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு இப்பிறவியில் மனிதராகப் பிறந்துள்ளார்கள் என்று அர்த்தம்;

பல முறை மனிதப் பிறவி எடுத்தவர்களே ஜோதிடர்களாக,பிரபல தொழிலதிபர்களாக,சக மனிதர்களை பார்த்தவுடனே புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்களாக (திரைப்பட இயக்குநர்,பஞ்சாயத்து போருட் தலைவர்,அரசியல் கட்சியில் முக்கியப் பதவி,வங்கி அதிகாரி,காவல்துறை அதிகாரி,கோடிகளைக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள்,ஜவுளிக்கடை விற்பனையாளர்,கள்ளக் கடத்தல் தலைவர்கள்,மருத்துவர்கள்,பேருந்து ஓட்டுனர்கள்,ஆசிரியர்கள்,உடற்பயிற்சி ஆசான்கள்,யோகா மாஸ்டர்கள்,ரெய்கி மாஸ்டர்கள்,பெட்டிக்கடை நடத்துபவர்கள்,கோவில் பூசாரிகள்) இருக்கின்றார்கள்:இதை நீங்கள் நம்பாவிட்டாலும்,உண்மைகள் எப்போதுமே உண்மைகள் தான்!

விநாயகர் உபாசனை,முருக உபாசனை,சிவ உபாசனை,ஆஞ்சனேய உபாசனை,ஹயக்ரீவர் உபாசனை,குபேர உபாசனை,லக்ஷ்மீ நரசிம்மர் உபாசனை,பைரவ உபாசனை,காளி உபாசனை,நீல சரஸ்வதி உபாசனை,துர்கை உபாசனை,நவக்கிரக உபாசனை,சித்தர்கள் உபாசனை,துறவிகள் உபாசனை,மகான் உபாசனை,பிரம்மா உபாசனை,குலதெய்வ உபாசனை என்று எத்தனை இருந்தாலும், மீண்டும் இந்த பூமியில் பிறக்காமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு யார் வருவார்கள் தெரியுமா?

ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்கள் தான்!

அது எப்படி?

நம்மை நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியச் செயல்களுக்கு ஏற்ப யோகங்களையும்,அவமானங்களையும்,பணச் சிக்கல்களையும் அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;கஷ்டம் தாங்கமுடியாத போது கடவுளை கண்டமேனிக்குத் திட்டுகிறோம்;கடவுளுக்கு வேறு வேலையே கிடையாதா?(குணங்களைக் கடந்தவர் ஈசன்/கடவுள் என்று சொல்வது இதற்குத்தான்;அவருக்கு பழிவாங்குவது தெரியாது)
இந்த நவக்கிரகங்கள் பஞ்சபூதங்களின் குறிப்பிட்டச் சேர்க்கைகளால் செயல்படுகின்றன;

இந்த பஞ்சபூதங்களினை இயக்குவது பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற மும்மூர்த்திகளே!

இந்த மும்மூர்த்திகளுக்கு சக்தியளிப்பது இவர்களின் மனைவிகளான கலைவாணி,மகாலட்சுமி,ருத்ரி;
இவர்களுக்கும் மேலே இருப்பவர்கள் 11 ருத்ரர்கள்;
இவர்களையும் இயக்குபவர்கள் ஐந்து விதமான சிவபெருமான் கள்:

இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்துவது அண்ணாமலையார்!!!
அண்ணாமலைக்கும் சக்தியளிப்பது தான் அன்னை அரசாலை என்ற வராகி!

வராகி யார் தெரியுமா?

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராஜராஜேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணியின் படைத்தளபதி!

அன்னை அரசாலை என்பது வராகியின் 1000 பெயர்களில் ஒன்று;

அரசாலையை 10 வயது முதல் 100 வயது வரை யார் வேண்டுமானாலும் வழிபடலாம்;இரண்டு கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றினால் வழிபாடு வெற்றிபெறும்;

முதல் கட்டுப்பாடு: அசைவம்(முட்டை,புரோட்டா மற்றும் அனைத்துவிதமான அசைவ உணவுகளும்) ஒரு போதும் சாப்பிடக் கூடாது;

இரண்டாவது கட்டுப்பாடு:இந்த வழிபாடு செய்வதை நமது வீட்டில் இருப்பவர்களிடம் மட்டும் தெரிவித்தால் போதும்;ஒரு போதும் பிறரிடம் காட்டிக் கொள்ளக் கூடாது;(ஏன் காட்டிக் கொள்ள கூடாது? இதற்கான விளக்கம் நாம் எப்போது நேரில் சந்திக்கிறோமோ அப்போது விவரிப்போம்)

நமது அன்னை அரசாலை(வராகி)யை வழிபட ஏற்ற நாள் எது?
ஒரு வருடத்தில் 365 நாட்களுமே ஏற்றதுதான்;

தினமும் காலை(அதிகாலை 4.30 முதல் 6க்குள்)யில் 15 நிமிடமும்,இரவில்(மாலை 6 மணிக்கு மேல் நள்ளிரவு 11 மணிக்குள்) 15 நிமிடமும் பின் வரும் 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;



 பின்வரும் 12 பெயர்களை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஒருபோதும் வாய்விட்டுச் சொல்லக்கூடாது;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

ஒரு மாதம் ஆனதும்,காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;
இரண்டு மாதம் ஆனதும் காலையில் 45 நிமிடமும்,இரவில் 45 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;
மூன்றாவது மாதம் ஆனதில் இருந்து நமது ஆயுள் முழுக்கவும் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் ஜபிக்க வேண்டும்;

அன்னை அரசாலை(வராகி)யின் அருள் சீக்கிரம் கிட்டிட பின் வரும் நாட்களில்(தேய்பிறை பஞ்சமி இரவு) அதிக நேரம் ஜபிக்க வேண்டும்;அவ்வளவுதான்;

முதல் மாதம் முழுக்கவும் இருவேளை 15 நிமிடம் ஜபிப்பீர்கள் அல்லவா? இந்த நாளில் மட்டும் உங்களால் முடிந்தவரையிலும் 15 நிமிடத்தைவிடவும் அதிகமான நேரம் ஜபிக்க வேண்டும்;அதுவும் இரவில் மட்டும் தான் இப்படி ஜபிக்க வேண்டும்;

எப்படி ஜபிக்க வேண்டும்?
வீட்டுப் பூஜை அறையில் மஞ்சள் துண்டு விரித்து(புதியதாக வாங்கிக் கொள்ளவும்)செம்புத் தட்டில் பச்சரிசியைப்பரப்பி அதன் மீது 2 விளக்குகள் ஏற்ற வேண்டும்;இரண்டில் ஒன்றில் நெய் நிரப்பி,தாமரைத் தண்டுத் திரியாலும்,மற்றதில் இலுப்பை எண்ணெயில் பஞ்சுத்திரியாலும் விளக்குகள் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றிடவேண்டும்;

அன்னை அரசாலை(வராகி) வடக்கு நோக்கி இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும்;

இந்த மன்மத ஆண்டின் தேய்பிறை பஞ்சமீ நாட்கள்;மற்றும் அடுத்த ஆண்டின்(துர்முகி) நாட்களும்!!!

29.12.2015 செவ்வாய்
28.1.2015 வியாழன்
27.2.2016 சனி
28.3.2016 திங்கள்
26.4.2016 செவ்வாய்
26.5.2016 வியாழன்
9.6.2016 வியாழன்
24.6.2016 வெள்ளி
24.7.2016 ஞாயிறு
22.8.2016 திங்கள்
20.9.2016 செவ்வாய்
19.10.2016 புதன்
18.11.2016 வெள்ளி
17.12.2016 சனி
16.1.2017 திங்கள்
15.2.2017 புதன்
16.3.2017 வியாழன் இரவு 12.58 முதல் 17.3.2017 வெள்ளி நள்ளிரவு 2.36 வரை(இந்த இரண்டு நாட்களிலும் இரவு நேரத்தில் ஜபிக்கலாம்;வியாழக்கிழமை இரவு 1 மணிக்குப் பிறகு ஜபிக்க வேண்டும்)

மற்ற நாட்களில் மாலை 6 மணிக்குப் பிறகு எப்போது உங்களுக்கு வசதியோ அப்போது இரவில் ஜபிக்கலாம்;

தொடர்ந்து அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுபவர்கள்,ஒருமுறை எம்மை நேரில் சந்திப்பது அவசியம்;

சரி! எப்போது இந்த வழிபாட்டை(ஜபத்தை) ஆரம்பிப்பது?
இன்றை விட சிறந்த நாள் உண்டா! இன்று இரவிலேயே ஆரம்பிக்கலாம்;

அன்னை அரசாலை(வராகி) அருள் புரிய காத்திருக்கிறாள்;அவளைச் சரணடைவோம்;அருள் பெறுவோம்;


தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமியில் வழிபட்டு நமது பிறவிகளின் எண்ணிக்கையையும்,இப்பிறவிகளின் கர்மாக்களையும் காணாமல் போகச் செய்வோம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;


No comments:

Post a Comment