உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரே ஸ்ரீகால பைரவர் ஆவார்.இவரது சுவாசமே வாக்கிய மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கங்களாக விரிவடைகிறது.ஸ்ரீகால பைரவர் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகே விநாயகரும்,முருகக் கடவுளும் தோன்றினார்கள்.அப்படித் தோன்றுவதற்கு முன்பே ஸ்ரீகால பைரவர் தனது சாகசச் செயல்களால் பிரபஞ்சத்தில் மனிதர்கள்,தேவர்கள்,மும்மூர்த்திகளின் துயரங்களைத் தீர்த்துவைத்தார்;அவ்வாறு தீர்த்து வைத்துவிட்டு,தனது தந்தையாகிய சிவலிங்க வடிவத்திலேயே எட்டு இடங்களில் மறைந்திருந்து அருளாட்சி புரிய ஆரம்பித்தார்;அந்த எட்டு இடங்களே அட்டவீரட்டானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அஷ்ட வீரட்டானங்களில் நான்காவதாக இருப்பது திருப்பறியலூர் ஆகும்.இந்த வீரட்டானம் மயிலாடுதுறை என்ற மாயவரம் அருகே பரசலூர் என்ற பெயரில் ஒரு சிற்றூராக இருக்கிறது.இந்த பரசலூரில் இருக்கும் வீரட்டானம் சாலைப்போக்குவரத்திலிருந்து விலகியே அமைந்திருக்கிறது.
அட்டவீரட்டானங்களில் சாலையோரம் அமைந்திருக்கும் வீரட்டானங்கள் திருக்கடையூர்,திருவதிகை,திருக்கண்டியூர்,திருக்கோவிலூர். சாலையிலிருந்து விலகி,சற்றுத் தொலைவில் இருக்கும் வீரட்டானங்கள் வழுவூர்,பரசலூர்,திருக்கொறுக்கை,திருவிற்குடி ஆகும்.
மயிலாடுதுறையில் இரண்டு நாட்கள் தங்கினாலே நான்கு வீரட்டானங்களைத் தரிசித்துவிடமுடியும்.அப்படி தரிசிக்க நமக்கு கார் அல்லது ஆட்டோ அல்லது பைக் வசதி இருக்க வேண்டும்;இந்த இரண்டு நாட்களுமே அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும்.விசாரித்து,விசாரித்துச் சென்றால் மட்டுமே இந்த வீரட்டானங்களை குறித்த நேரத்தில் சென்றடைய முடியும்.பெரும்பாலான வீரட்டானங்கள் மிகப்பிரம்மாண்டமான ஆலயங்களாக அமைந்திருக்கின்றன;அப்படி அமைந்திருந்தாலும் சாதாரண நாட்களில் வெறும் பத்து பேர்கள் இந்த ஆலயங்களுக்கு வந்தாலே அது அதிகமாம்;பிரதோஷ நாட்களில் ஐம்பது பேர்கள் வருவது அதிகம் என்று கேள்விப்படுகிறோம்.காரணம் கலியுகத்தில் பாவ ஆத்மாக்கள் இந்தக் கோவில்களில் ஏதாவது ஒன்றுக்கு மட்டும் ஒரே ஒருமுறை வருவதே அபூர்வமாம்!!!
இங்கே மூலவராக சிவலிங்கம் இருந்தாலும்,அந்த சிவலிங்க வடிவத்தில் இருந்து அருளாட்சி புரிபவர் ஸ்ரீகாலபைரவப் பெருமானே! எனவே, நீங்கள் இந்த ஆலயங்களுக்குச் செல்லும்போது ஆர்வக் கோளாற்றினால் மூலவரை போட்டோ எடுக்க முயலாதீர்கள்;எடுத்தப் பின்னர்,கேமிராக்கள் பழுதாகியிருக்கின்றன;பலருக்கு உடல்நிலை சீர்குலைந்து போயிருக்கிறது;மீண்டும் பூரண உடல் ஆரோக்கியம் பெற ஒரு வாரமாவது ஆகும்.எச்சரிக்கை! கம்யூட்டர் யுகம் வந்தாலும் கம்யூட்டரால் நல்ல ஆட்சியாளர்களைத் தர முடிந்ததா? நமது மனநிலையில் மன ஒருமைப்பாட்டை உருவாக்கிட முடிந்ததா? யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாத மனநிலையை மட்டுமே தந்திருக்கிறது;நம் ஒவ்வொருவரையும் காமக் கோட்டிகளாக மாற்றியிருக்கிறது.திமிரை நிஜமான ஆன்மீகவாதிகளிடம் காட்டி சீரழியவேண்டாம்.
மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந் தண்புனல் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறியலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே(சம்பந்தர்)
மயிலாடுதுறைக்கு அருகில் செம்பொன்னார் கோவில்(திருச்செம்பொன் பள்ளி) என்ற திருத்தலத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது.விசாரிக்காமல் போனால்,வேறு சில கிராமங்களுக்குச் சென்று தடுமாற வேண்டியிருக்கும்.
பிரம்மாவின் மகன் தட்சன் ஆவார்.இவரது மகளாகப் பிறக்க சதாசிவன் தனது மனைவியான பராசக்திக்கு வரமருளினார்;சிவபூஜையும்,தவமும்புரிந்து வளர்ந்த தாட்சாயணியை பரமேஸ்வரன் தனது தேவியாக்கிக்கொண்டு அருளினார்.
வேள்விகளின் நாயகனாக பரம்பொருளான சிவனையே ஆவாஹனம் செய்வது யுகம்,யுகமாக இருந்து வரும் வழக்கம் ஆகும்.கிருதயுகம், திரேதாயுகம்,துவாபரயுகம் மற்றும் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்திலும் வேள்விகள் செய்யும் போது அவிர்ப்பாகத்தை முதலில் சதாசிவன் என்ற பரமேஸ்வரனுக்கு தருவதே வழக்கம்;
ஆனால்,சர்வேஸ்வரனின் மாமனார் என்ற அகங்காரத்தினால் தாம் நடத்தும் வேள்விக்கு பிரம்மன் முதலான தேவர்களை அழைத்து வந்து நாத்திக வேள்வி நடத்தினான் தட்சன்.இந்த வேள்வியில் கேட்காமலேயே கலந்து கொண்டாள் பரமனைத் திருமணம் செய்த தாட்சாயணி!
இதனால் கோபமுற்ற பரமேஸ்வரன் தனது நெற்றிக்கண்ணிலிருந்து ஸ்ரீகாலபைரவரைத் தோற்றுவித்தது போல வீரபத்திரரையும் தோற்றுவித்தார்;
திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்
ஆயிரம் மணிக்கரத்து அமைத்த வாள் படையுடன்
சயம் பெறு வீரனைத் தந்து அவன் தன்னால்
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த
இருள் மனத் தக்கன் பெருமகம் உண்ணப் புக்க
தேவினர் தம் பொரு கடற்படையினை
ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய கூடல் பெருமான்
என்று சங்கப்புலவர் கல்லாட தேவ நாயனார் பாடுகிறார்.
அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே
வருமதி வாலை வன்னி நல் இந்திரன்
சிரம் முகம் நாசி சிறந்த கை தோள் தாள்
அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே
என்று திருமந்திரம் அரன் அருள் இல்லாமல் தட்சயாகம் அழிந்ததைப் பாடுகின்றது.
வீரபத்திரர் தனது படைகளோடு சென்று தட்சனது யாகத்தை அழித்தார்;தட்சனது தலையைத் துண்டித்தார்;இந்த யாகத்தில் கலந்து கொண்ட அனைத்து தேவர்களும் தண்டிக்கப்பட்டனர்;
மிருகத் தலை நினைந்து வருந்திய தட்சன் பல தலங்களையும் தரிசனம் செய்து வழிபட்டு சென்னையை அடுத்துள்ள அரக்கோணம் அருகே உள்ள திருவூறல் என்னும் திருத்தலத்திற்குச் சென்றான்.நந்தியின் வாயிலிருந்து சாதாசர்வ காலமும் நீர் ஊறிக் கொண்டிருப்பதால் திருவூறல் என்று பெயர் உண்டானது;இந்தத்திருத்தலத்திற்கு ஆட்டுத்தலையோடு வந்த தட்சன்,ஓலமிட்டு தனி லிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்டான்.
அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை விதித்து வைக்கும் விதி நாயகன் தட்சனுக்கு மீண்டும் பழைய வடிவை வழங்கியருளினார்;ஒப்பில்லாத கருணைக் கடலின் மாபெரும் கருணைக்கு தட்சன் வியந்து மகிழ்ந்தான்;தட்சன் சிவபூஜை செய்து பழைய வடிவம் கொண்ட திருத்தலமே தக்கோலம் எனப்படும் திருவூறல் ஆகும்.தட்சன் ஓலமிட்டு அலைந்து திரிந்ததால் இத்தலம் தக்கன் ஓலம் என்று பெயர் பெற்றது.அதுவே காலப்போக்கில் தக்கோலம் என்று ஆயிற்று.
ஆலகால விஷத்தினால் இளமை நீங்கி முதுமை அடைந்த பராசக்தி பல திருத்தலங்களை வழிபட்டு திருபறியலூரை அடைந்தாள்;திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் பராசக்தியின் முதுமையைப்போக்கி இளமையை அருளச் செய்து பாலாம்பிகை ஆக்கினார்.
சிவபூஜையும் தவமும் புரிந்த அம்மன் திருக்கரங்களில் ருத்ராட்சமாலையும்(பெண்கள் எப்போதும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் என்ற மரபு இங்கே தான் உருவானது;இப்படித் தான் உருவானது) தாமரைப்பூவும் தாங்கி பாலாம்பாள்,இளங்கொம்பு அணையாள் என்ற பெயர்களுடன் தனிச் சந்நிதியில் இங்கே அருள்பாலித்து வருகிறாள்.
நால்வகைச் சாதிகளில் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதிமக்களாக அந்தணர்களே இருந்தார்கள்;பல ஊர்களின் பெயர்களின் அந்தணர்கள் என்ற பெயர் இதனாலேயே உண்டானது;தொல்காப்பியத்தில் பார்ப்பன வாகை என்று ஒரு தனித் துறையே கூறப்பட்டுள்ளது.
பசு உண்ணும் புலைச் சமயங்களான முகம்மதிய,கிறுஸ்தவ அந்நிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது மக்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்;தீய பழக்க வழக்கங்கள் தலைவிரித்து ஆடியதாலும் நல்லோர்களின் எண்ணிக்கை குறைந்து போனது;இதனால் அந்தணர்களின் எண்ணிக்கையும் குறைந்துபோய்விட்டது.
திருப்பறியலூர் வீரட்டேஸ்வரரை வழிபடுபவர்களுக்கு ஆணவம் குறையும்;நாத்திக இருள் மறையும்;ஞான ஓளி பிறக்கும்;பக்தி பெருகும்;பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.
கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திருப்பறியலூரில்
விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment