Thursday, December 13, 2012

இந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ரூ. 125 கோடி செலவிட்ட வால்மார்ட்


வாஷிங்டன்: இந்தியாவில் தனது சூப்பர் மார்க்கெட்டை திறக்க ஆதரவளிக்கக்கோரி, இதுவரை அமெரிக்க எம்.பி.,க்களுக்கு மட்டும் சுமார் ரூ. 125 கோடி (25 மில்லியன் டாலர்) செலவழித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.
இந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சில்லரை வணிக ஜாம்பவான் என கருதப்படும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம், இந்தியாவில் கால்பதிக்கும் தங்களது முயற்சிகளுககு ஆதரவளிக்கக்கோரி, பேரம் பேசியுள்ளது வால்மார்ட். இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ. 18 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வால்மார்ட் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது கடைகள் மூலம் ஆண்டுக்கு 444 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 50 ஆயிரம் கோடி). அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும் 2020ம் ஆண்டில் இந்த தொகை 1 டிரில்லியன் டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளமே, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடை விரிக்க ஆவலுடன் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.thanks:dinamalar 9.12.12

No comments:

Post a Comment