சிவனுக்கு மேல் எவனுமில்லை;என்பது சித்தர்களும்,மகான்களும்,துறவிகளும்,ரிஷிகளும் உணர்ந்த அனுபவ வாக்கு ஆகும்.ஆதியில் உலகம் முழுவதும் சிவ வழிபாடு இருந்தது;எனவே தான் இன்றும் சிவவழிபாட்டின்போது “தென்னாடுடைய சிவனே போற்றி,எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று போற்றப்பட்டு வழிபாடு நிறைவடைகிறது.
எப்படி ஜோதிடத்தின் அடிப்படைக் கற்றப்பின்னர்,அதிலேயே ஆழ்ந்து அமிழ்ந்து புதுப்புது ரகசியங்களைக் கண்டறிய முடியுமோ; எப்படி அரசியல் அதிகாரத்தை ஒருமுறை(வார்டு கவுன்சிலராக இருந்தாலே) ருசி பார்த்துவிட்டால்,அடுத்தடுத்து உயர்ந்த பதவியைத் தேடி முன்னேறுவோமோ; எப்படி ஆன் லைன் டிரேடிங்/ஆன்லைன் வணிகத்தில் ஒரே ஒரு முறை ரூ.10,000/-ஐ அள்ளிவிட்டால் அடுத்தடுத்து அள்ளத் துடிப்போமோ; எப்படி ஷேர் மார்கெட்டில் குறைந்த முதலீட்டில் அதிமாக ஒரே ஒருமுறை பணம் சம்பாதித்துவிட்டால் அடுத்தடுத்து கோடிகளைக் குவிக்கத் திட்டமிடுவோமோ அதே போல சிவவழிபாட்டில் ஒரே ஒரு முறை சிவ உணர்வைப் பெற்றுவிட்டால் அதன் பிறகு நம்மால் சும்மா இருக்கவே முடியாது.
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் வெறும் மூன்றே மூன்று மாதங்களுக்கு ஓம்சிவசிவஓம் ஒரு நாள் கூட விடாமல் ஜபித்துவிட்டோமானால் அதன்பிறகு நம்மால் சும்மா இருக்க முடியாது;அதை ஜபித்தவர்களுக்குத் தான் அதன் சிவதெய்வீக உணர்வு புரியும்.மற்றவர்களால் ஒருபோதும் உணர்ந்து கொள்ளவே முடியாது.
அல்லது
ஒரு நாளுக்கு அரை மணி நேரம் வீதம் மூன்று மாதங்களுக்கு ஸ்ரீகாலபைரவர் மந்திரத்தையோ /ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரத்தையோ ஜபித்தவர்களுக்கு ஸ்ரீபைரவரின் அருளாற்றல் புரியும்.அப்படிப்புரிந்தவர்கள் அதன் பிறகு,அந்த உணர்வை தன்னைச் சுற்றியுள்ளவர்களும் உணர வேண்டும் என்றே துடிப்பார்கள்;நாம் தான் இது ஒரு லூஸு என்று ஒதுக்கிவிடுவோம்;
மஹாவிஷ்ணுவின் தொப்புளிலிருந்து(நாபியிலிருந்து)உதித்தவர் பிரம்மா.பிறந்ததுமே தனது தந்தையிடம் வாக்கு வாதமும் சண்டையும் போட ஆரம்பித்தார்;இவர்களது சண்டையை நிறுத்தவே இவர்கள் சண்டையிட்ட இடத்தில் சதாசிவனாகிய அண்ணாமலையார் ஒரு மகத்தான ஜோதிப்பிழம்பாக வானுக்கும்பூமிக்கும் எழுந்தார்;இருவரின் சண்டையும் நின்றது;
யார் இந்த ஜோதியின் அடியையும் முடியையும் காண்கிறார்களோ அவரே பெரியவர் என்று அந்தக் காலத்திலேயே பெட் கட்டினார்கள்;உடனே,மஹாவிஷ்ணுவானவர் வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிக்கொண்டே பாதாளம் நோக்கிச் செல்லத் துவங்கினார்;பிரம்மா என்ற அயனோ அன்னப்பறவை வடிவம் பூண்டு வானை நோக்கிப் பறந்தார்;இதை உணர்த்தும் சிற்பமே லிங்கோத்பவர் ஆவார்.
இந்த லிங்கோத்பவரை கூர்ந்து நோக்கினால் இந்த சம்பவத்தை அழகிய சிற்பமாக செதுக்கி,சிவபெருமானின் மூலஸ்தானத்துக்கு நேர்பின்புறம்(முதுகுப்பக்கம்) ஸ்தாபித்திருப்பது தெரியும்.இந்த சாதாரண புராண உண்மை கூட இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை;இந்த சிற்பம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் ஆலயத்தில் அமைந்திருக்கிறது;கலியுகத்தில் இந்த லிங்கோத்பவரை வழிபட்டப்பின்னர்,இவருக்கு நேராக இருக்கும் லிங்கத்தை வழிபட வேண்டும்;கலியுகத்தில் லிங்கோத்பவருக்கு நேர் எதிராக இருக்கும் சிவலிங்கத்தை வழிபட்டால் மட்டுமே ஆழ்ந்த மனநிம்மதி கிட்டும் என்பது சிவரகசியங்களில் ஒன்றாகும்.
அதுவும் மார்கழிமாதத்தில் 29 நாட்களும் இவ்வாறு தரிசனம் செய்துவிட்டால்,நாம் அடுத்த ஒரு வருடம் வரையிலும் ஆழ்ந்த மனநிம்மதியை அடைவோம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.(சந்தர்ப்பம் அமைந்தால்,லிங்கோத்பவருக்கு எதிரே அமைந்திருக்கும் சிவலிங்கத்தின் முன்பாக மஞ்சள் துண்டு விரித்து சுமார் 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,மிகவும் உன்னதமான சிவ அனுபவமும்,காட்சிகளையும் உணரலாம்;இப்படி மார்கழி மாதம் முழுவதும் ஜபித்து வந்தால் மார்கழியின் கடைசி நாளில் அல்லது தை முதல் நாளன்று நாம் உணரலாம்.மார்கழி மாதத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தான் ஜபிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;காலை 11 மணி அல்லது மாலை 4 மணி என எந்த நேரத்திலும் ஜபிக்கலாம்;பெரும்பாலான கோவில்களில் இதற்கு அனுமதிப்பார்களா? என்பது சந்தேகமே!!!)
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment