Thursday, August 16, 2012

தமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்!!!



1980களில் ஆங்கில வழிக்கல்வி நமது தமிழ்நாட்டில் மூன்று தமிழ் அறிஞரால்(?!) அறிமுகப்படுத்தப்பட்டது.கல்வித்துறையானது ஒருநாட்டின் தலையெழுத்தையே மாற்றும் சக்தியுடையது;ஆனால்,நமது தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் மொழியே தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கும் விதமாக சீரழிக்கப்பட்டிருக்கிறது.

எந்த ஒரு குழந்தைக்கும் அதன்  ஐந்து வயது முதல் பத்து வயது வரை தாய்மொழி வழியாகத்தான் கல்வி புகட்ட வேண்டும்;அப்படிச் செய்தால்தான் அது தனது இயல்பான திறமைகளை வெளிக்கொண்டுவர உதவியாக இருக்கும்;அதே சமயம்,பத்துவயது வரையிலான குழந்தைகள் எதையும் வேகமாகவும்,நுணுக்கமாகவும் கற்கும் திறனுள்ளவைகளாக இருக்கின்றன;புதிய விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது.இந்தக் கால கட்டத்தில் பயமுறுத்துவது,அடிப்பது போன்றவைகளை எப்போதாவது மட்டுமே குழந்தைகளிடம் காட்ட வேண்டும்.எனவேதான் ஆரம்பப் பள்ளிகளில் பெண்களை ஆசிரியராக்குவது சிறந்தது என்ற மனோதத்துவ பரிந்துரையை தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது.


ஆனால்,அதே தமிழ்நாடு அரசு வேறு சில முக்கியமான பரிந்துரைகளை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டது என்பது வேதனைக்குரிய விஷயம் மட்டுமல்ல;தமிழை தமிழ்நாட்டிலும் அழிக்க செய்திருக்கும் ஏற்பாடோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.



தமிழ்வழிக்கல்வியை தொடர்ந்து கற்றுவரும்போது தமிழ்க்குழந்தைகள் தமது வட்டார திருவிழாக்களின்  உள்ளார்ந்த மதிப்பீடுகளை சுலபமாக உணர்ந்து கொள்கின்றன;மனித உறவுகளின் பலத்தைப் புரிந்து கொள்கின்றன;குடும்பம் என்ற அமைப்பின் வலிமையையும்,நெகிழ்ச்சித் தன்மையை அனுபவித்துக் கொள்வதால்,அவைகள் மேல்நாட்டு  நாகரீகத்தாக்கங்களால் பெருமளவு பாதிக்கப்படுவதில்லை;

மேல்நாட்டு (கிறிஸ்தவ) நாகரீகத்தின் தாக்கங்கள்:        சரளமாக ஆங்கிலம் பேசுவது: 


 இன்று தாவணி காணாமல் போய்,துப்பட்டாவுடன் சுடிதார் அணிவது குறையத் துவங்கிவிட்டது.கிராமங்களில் இருக்கும் 9ஆம் வகுப்பு,பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்புபள்ளி மாணவிகள் துப்பட்டா எனப்படும் ஷாலை அணியாமலேயே  பள்ளிக்கு  வர ஆரம்பித்திருக்கின்றனர். கல்லூரிக்குப் போக ஆரம்பித்ததும் ஜீன்ஸ்க்கு தாவ ஆரம்பித்துவிட்டனர்;இந்த ஜீன்ஸ் அணியும் கலாச்சாரம்(அலங்கோகலம்) தற்போது சிறு நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது.ஆகஸ்டு 2 ஆம் வாரம்,2012=தினமலரில் வெளிவந்த மதுரை ஷாப்பிங் திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இதற்கு ஆதாரம்;


கோக்குடன் ஹோட்டலில் சாப்பிடுவது;பிஸ்ஸா,பர்கர்,கெண்டகி சிக்கன் இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் ஒருவேளை உணவாக சாப்பிடுவது;


ஹாலிவுட் படங்கள் மட்டும் பார்ப்பது.சன் டிவியில் வரும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஹாலிவுட் படங்களைப் பார்க்காமல் இருப்பது;


தினமும் இணணயத்தில் மேய்வது;ஏழாம் வகுப்பிலிருந்தே முகநூலில் கணக்கைத் துவங்கி,தினமும் முகநூலில் அதிக நேரம் செலவழிப்பது;முகநூல் என்றால் Facebook என்று பொருள்;கேலியாக மூஞ்சிப் புஸ்தகம் என்றும் கொ(சொ)ல்லலாம்!



அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்,ஆசிரியைகளே தங்களுடைய மகன்கள்,மகள்களை மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்;அப்படிப் படிக்க வைப்பதை ஒரு கடமையாகவே செய்கின்றனர்.இந்த பழக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் சகஜமாகிவிட்டது;இதை பல ஆண்டுகளாக கவனித்து வந்த பாமர அப்பாவித் தமிழர்கள் தங்களுடைய குழந்தைகளையும் வட்டிக்கு கடன் வாங்கியோ,தோட்டம்/வீட்டை அடமானம் வைத்தாவது ஆங்கில வழிக்கல்வியில் முதல் வகுப்பிலிருந்தே சேர்த்து படிக்க வைக்கத் துவங்கிவிட்டனர்.இந்த சூழ்நிலை 1995 முதல் பரவலாகி,இன்று நடைமுறையாகிவிட்டது.இதன்விளைவாக,2013-2014 கல்வியாண்டு  முதல் தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் தமிழ்நாடு கல்வித்துறையே ஆங்கிலவழிப்பள்ளிகளைத் திறக்கப்போகிறது.இதனால்,தோல் மட்டும் தமிழராகவும்,பண்பாடு கிறிஸ்தவ ஆங்கிலேயராகவும் மாறுவதற்கு தமிழ்நாடு அரசு கல்வித்துறையே உதவிசெய்கிறது.(மெக்காலேயின் திட்டம் நிறைவேறிவிட்டது;பார்க்கவும் ஸ்கேனிங் பக்கம்)



நல்ல வேலை,நிறைவான சம்பளம் என்ற ஒரே நோக்கத்துக்காக துவக்கப்பட்ட ஆங்கிலவழிப் பள்ளிகள் இன்று தமிழ்ப்பண்பாட்டையே சிதைக்கத் துவங்கியிருக்கின்றன.எப்படியெனில்,13.7.2012 முதல் 12.7.2013 வரையிலும் நமது  ஊரில் அல்லது நமது தெருவில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ,மாணவிகளில் யாரெல்லாம் தனது காதலி/காதலனுடன் ஓடிப் போய் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்தால்,அதில் 80% ஆங்கிலவழிக்கல்வியை தனது 1 ஆம் வகுப்பு முதல் கற்றவர்களே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.மேலும்,அந்த மாணவ,மாணவிகளின் வீட்டு அம்மாக்களில் பெரும்பாலானவர்கள் தமது மகன்/ள் தினமும் பள்ளி/கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்ததும்,படிக்கும் இடத்தில் என்ன நடந்தது? யார் பாடம் நடத்தினார்கள்? படிக்கும் படிப்பின் பெயர்? அங்கே தனது மகன்/ள் செய்த சாதனை அல்லது தவறுகளை விசாரிப்பதே இல்லை;இதனால்,பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான நெருக்கம் பெருமளவு குறைந்துவிட்டதால்தான் இவ்வாறு திருட்டுத் திருமணம் நடைபெறுகிறது என்பதையும் கண்டுகொள்ளலாம்.காலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 11 மணி வரையிலும் ஓடி ஓடி உழைத்து,சம்பாதிக்கும் அம்மாவும்,அப்பாவும் யாருக்காக சம்பாதிக்கிறார்களோ,அவர்களிடம் அன்பு செலுத்த நேரமில்லை;அவர்களது அன்பு,ஏக்கம்,துக்கம்,துயரம்,சாதனைகளை பகிர்ந்துகொள்ள நேரமில்லை;



உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல்,முதலாளித்துவமயமாக்கல் போன்ற தத்துவங்களால் கலப்புப்பொருளாதாரமாக இருந்த நமது பாரத மணித்திருநாடு,இன்று முதலாளித்துவநாடாக  பரிணமித்துவருகிறது.இதன் தாக்கம் குடும்பம் என்ற அமைப்பைத் தகர்த்துவருகிறது;பணத்துக்காக என்ன செய்தாலும் தப்பில்லை;எப்படி வாழ்ந்தாலும் தப்பில்லை;வசதியாக வாழ பெற்ற மகளையே களத்தில் இறக்கினாலும் தப்பில்லை என்ற மனோபாவம் விரைவாகப் பரவி வருவதால்,இன்று தமிழ்வழிப்பள்ளிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்துவருகிறது;கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா? என்பது பழமொழி! கண்ணை விற்று டிவிடி வாங்குகிறோமே;எப்படி நாம் கவுரவமாக வாழ முடியும்? என்பது நவீன அனுபவ மொழி!


அரசாங்கத்தாலோ,சட்ட திருத்தத்தினாலோ எந்த ஒரு சமுதாய மாற்றத்தையும் உருவாக்கிட முடியாது;எனவே தான் சமுதாயத்தின் அங்கமாகிய உங்களிடம் இது போன்ற கருத்துக்களை பரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.உங்கள் குழந்தையை தயவு செய்து தமிழ்வழிக்கல்வியில் சேருங்கள் என்று உங்களின் கால்களில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்.இப்படிச் செய்தால் மட்டுமே நமது தமிழ்ப் பண்பாடும்,பக்தியும்,இந்து தர்மமும் உயிர் வாழும்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment