Wednesday, August 29, 2012

அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசர கவனத்திற்கு!!!




ஒரு வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உங்களது பிறந்த நட்சத்திரமான அவிட்டத்தில் பவுர்ணமி உருவாகிறது.இந்த வருடம் அவிட்டத்தில் வரும் பவுர்ணமி30.8.12 வியாழன் இரவு 8.36 க்கு ஆரம்பித்து 31.8.12 வெள்ளி இரவு மணி 8.04க்கு நிறைவடைகிறது.இந்த நேரத்துக்குள் இங்கே  கூறப்பட்டிருக்கும் தானங்களில் ஏதாவது ஒன்றையாவது செய்துவிடுவது அவசியம்;(தவிர கும்ப ராசியில் பிறந்த சதய நட்சத்திரக்காரர்களும் இதைச் செய்யலாம்;ஏனெனில்,சதயத்தில் ஒரு போதும் பவுர்ணமி வராது;ஆனால், அவிட்ட பவுர்ணமியின் தாக்கம் 60% சதயத்துக்கும் உண்டு)


இந்த நாளில் அவிட்டத்தில்(மகர ராசியில் அவிட்டம்1 ஆம் மற்றும் 2 ஆம் பாதங்கள்;கும்பத்தில் அவிட்டம் 3 ஆம் மற்றும் 4ஆம் பாதங்கள்)பிறந்த எவரும் பின்வரும் புண்ணிய காரியங்களைச் செய்யலாம்;

1.திரு அண்ணாமலை அல்லது பழமையான சிவாலயங்களில் அன்னதானம் செய்யலாம்;உங்களால் எத்தனை பேர்களுக்குத் தர முடியுமோ அவ்வளவு பேர்களுக்கு அன்னதானம் செய்தால்,அதன் பலன் மறுநாளே பல மடங்கு திரும்பி வரும்;அப்படி வருவதால் மறுநாளே உங்களுடைய நீண்டகால மற்றும் சிக்கலான பிரச்னை தீர்ந்துவிடும் அல்லது தீர வழிபிறக்கும்.இது கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ந்து கண்டறிந்த ஜோதிட உண்மை ஆகும்.

2.உங்களுடைய விருட்சமான வன்னி மரக்கன்றை வாங்கி உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் கோவில் வளாகத்திலோ நடலாம்.நட்டு தினமும் தண்ணீர் ஊற்றலாம்.அதுவும் இந்த ஆவணி அவிட்டத்தன்று விருட்சம் நட்டால்,அப்படி நடுவதற்கே பூர்வபுண்ணியம் தேவை;நட்டுவிட்டால் உங்களுடைய அத்தனை தோஷங்களையும் அது வாங்கிக் கொள்ள வேண்டும்;ஒரே ஒரு நிபந்தனை :நீங்கள் அப்படி நட்டுவிட்ட நொடியிலிருந்து பிறரை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது;மனதாலோ,உடலாலோ ஏமாற்றக் கூடாது;இப்படி இருக்கத் துவங்கினால் உங்களுக்கு நியாயமான வழிமுறைகளிலேயே வருமானம் பெருகத் துவங்கும்;உங்களது தேவைக்கு மேலேயே வருமானம் கொட்டத் துவங்கும்;இப்படி வருமானம் அதிகரிக்க நீங்கள் குறைந்தது 90 நாட்கள் காத்திருக்க வேண்டும்;அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை கைவிட வேண்டும்;அதுவும் எப்படி? நிரந்தரமாக!!!


3.ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் மந்திர ஜபத்தை உங்கள் ஊரில்  இருக்கும் ஜீவசமாதிகளில் ஏதாவது ஒன்றில் ஜபிக்க வேண்டும்;குறைந்தது 30 நிமிடம்,அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு ஜபிக்க வேண்டும்;


4.அருகில் இருக்கும் மலைக்கோவிலுக்கோ அல்லது காட்டுப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கோ செல்ல வேண்டும்;அப்படிச் செல்லும் போது குறைந்தது ஐந்து கிலோ நவதானியங்களை(நவ தானியங்கள் அனைத்தும் கலந்தது) உங்கள் கையால் வாங்கிச் செல்ல வேண்டும்;வாங்கிச் சென்று அந்தக் கோவிலுக்குச் செல்லும் பாதையில் மனித காலடி படாத இடங்களில் உங்கள் கைகளால் தூவ வேண்டும்;தற்போது மழைக்காலம் துவங்கியிருக்கிறது;எனவே,அடுத்து வரும் லேசான சாரல் பெய்தாலே அந்த நவதானியங்கள் முளைக்கத் துவங்கும்;அப்படி துவங்கியதும்,அவிட்டநட்சத்திரக்காரர்களின் அத்தனை பிரச்னைகளும் தீர்ந்துவிடத் துவங்கும்.

5.உங்கள் ஊரில் இருக்கும் சாதுக்களுக்கு காவி துண்டுகள்,வேட்டிகள் எடுத்து தானம் செய்யலாம்.


6.உங்கள் ஊரில் இருக்கும் கோவிலுக்கு நெய் அல்லது எண்ணெய் குறைந்தது ஒரு டின் வாங்கி தானமாக தரலாம்.மேலும் நைவேத்தியத்துக்குத் தேவையான உணவுப்பொருட்களை வாங்கித்  தரலாம்.(ரூபாயாகத் தரக்கூடாது)தொலை தூர இடங்களில் வாழ்ந்து வரும் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தமது ரத்த உறவுகள் அல்லது நெருங்கிய நட்பு மூலமாக இவ்வாறு எந்த தானமும் செய்யலாம்;



ஓம்சிவசிவஓம்


No comments:

Post a Comment