மும்பையில் மிகவும் வசதியான குடும்பங்கள் வாழும் மலபார் ஹில் பகுதியில் 1600 சதுர அடி பிளாட்டில் வசிப்பவர் கிரிஷ் ஷா.இவரது வயது 45.வைர வியாபாரியான இவரது வீடு வித்தியாசமானது;தரை முழுவதும் அரை அங்குல உயர களிமண் பூசப்பட்டு அதற்கு மேல் ஒரு அங்குல கனத்திற்கு பசுஞ்சாணம் முழுமையாக நேர்த்தியாக பூசப்பட்டுள்ளது.இந்த தரையில் படுத்தால் சுறுசுறுப்பு உண்டாகிறது என்று ஷா சொல்கிறார்.இவரது வீட்டுச் சுவர்களில் சுண்ணாம்பும் சாணமும் கொண்ட கலவை பூசப்பட்டிருக்கிறது.இதற்கு ஆன செலவு ரூ.4000/-மட்டுமே.
இந்த சுதேசிப் பூச்சு பூசியதன் விளைவாக இவரது வீட்டில் மூட்டைப்பூச்சி,கரப்பான் தொல்லை,எலி தொல்லை இருப்பதில்லை;காய்ந்த வேப்பிலை,காய்ந்த மாட்டுச்சாணம்,கொஞ்சம் கற்பூரம் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் இவற்றைச் சேர்த்து எரித்து வீடு முழுவதும் புகை மூட்டம் போடுவதால் மும்பை முழுவதும் கொசுத்தொல்லை இருந்தாலும் ஒரு கொசு கூட இவர் வீட்டில் நுழைவதில்லை;ஷாவின் வீட்டில் மின்சார விளக்கோ,மின் விசிறியோ,ஏ/சியோ கிடையாது;டைனிங் டேபிள் கிடையாது;தரையில் அமர்ந்தபடி சமையல் செய்கிறார் ஷாவின் மனைவி கிரண்.இதற்கெல்லாம் மேலாக இவர் வீட்டில் இயற்கை விவசாய உணவுப்பொருட்கள்தான்.குடும்பத்துடன் தினமும் தியானம் செய்த பின்னரே அந்த நாள் துவங்குகிறது.
இதே போல அறிய ஆரோக்கியச் சந்தையை அணுகவும்.
நன்றி:பஞ்சாமிர்தம்பகுதி,விஜயபாரதம் பக்கம்16,வெளியீடு 24.8.12
No comments:
Post a Comment