Thursday, August 16, 2012

இந்தோனோஷியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்ட சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள்!!!




இந்தோனோஷியாவை டச்சுக்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்போராடியவர் திரு.சுகர்ணோ ஆவார்.இந்தோனோஷியா சுதந்திரம் அடைந்தப் பின்னர் அந்த நாட்டின் அதிபராகவும் பதவியேற்றார்.இந்தோனோஷியாவின் சுதந்திரப்போராட்ட காலத்தில் சுகர்ணோவும்,அவரது கூட்டாளிகளான பிற சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் தனித்தனியாக தீவுகளில் கைது செய்யப்பட்டு,தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.தனிமையில் வாடிய சுகர்ணோவுக்கு மன பலம் குறையத் துவங்கியது;அந்த சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் அடங்கிய ஒரு புத்தகம் கிடைத்தது.அது டச்சுமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சுவாமிவிவேகானந்தரின் உபதேசங்கள் ஆகும்.அந்தப்புத்தகம் சுகர்ணோவின் மனதில் ஒரு புதிய உற்சாகத்தை உருவாக்கியது.அதிலிருந்து சிலவற்றை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்:

“போதும் அழுகை! புலம்பலை நிறுத்து.தலை நிமிர்ந்து ஆண்மையுடன் செயல்படு!!.
உங்களுக்கு அருகில் உள்ள கடமைகளை முடித்துக் கொண்டே செல்லுங்கள்;
கடமையைச் செய்;பலனை எதிர்பாராதே!!!(ஒரு வேலையை முடித்துவிட்டால்,அந்த வேலைக்கான பலனை உடனே எதிர்பார்த்து காத்திருந்து,அடுத்தடுத்து முடிக்க வேண்டிய கடமைகளை தேங்க வைத்துவிடாதே)
ஒரு வேலையைச் செய்யும் போதே அதற்குரிய முடிவு எப்படி இருக்குமோ? என்று பயந்து,பயந்து வேலை செய்யக் கூடாது;அதனால்,அந்த வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.அதற்குரிய பலன் எப்படியிருந்தாலும் அதை எதிர்கொள்ளும்விதமாக உன்னைத் தயார் செய்துகொள்;அது போதும்.இதுதான் கர்மயோகத்தின் அடிப்படை!
****       ****      ****    ****         ****
ஒரு வருட பலனுக்கு நெல் பயிரிடுங்கள்;
பத்து வருடப் பலனுக்கு தென்னையை பயிரிடுங்கள்;
மூன்று தலைமுறை சிறப்பாக வாழ மனிதர்களை திறமையுள்ளவர்களாக உருவாக்குங்கள்;
####      ####       ####       ####      ####
நீங்கள் எந்த வேலையைச் செய்கிறீர்களோ,அந்த வேலையைச் செய்வதில் ஆர்வத்தோடு இருங்கள்;அந்த வேலையை முடிக்கும் வரையிலும் வேறு எதிலும் கவனம் செலுத்தாதீர்கள்;அந்த வேலையில் முழுக் கவனம் செலுத்துங்கள்;
$$$$      $$$$      $$$$     $$$$       $$$$
உங்களுடைய ஒவ்வொரு சிந்தனையும் உங்களது ஒவ்வொரு பேச்சையும் வடிவமைக்கிறது;
உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் நீங்கள் யார் என்பதை இந்த உலகிற்குக் காட்டுகிறது;

உங்களுடைய ஒவ்வொரு செயலும் உங்களை,உங்களுடைய ஆளுமைத்திறனை உருவாக்குகிறது;
நீங்கள் எப்படி ஒரு பிரச்னையை எதிர்கொள்கிறீர்களோ,அதைப் பொறுத்து நீங்கள் சம்பாதிக்கும் பணத்தின் அளவு மாறுபடும்;நீங்கள்  எப்படி ஒரு பிரச்னையை எதிர்கொள்கிறீர்களோ அதை பலர் உங்களுக்குத் தெரியாமலேயே கவனிக்கிறார்கள்.அந்த கவனமே உங்களை தலைவனாகவோ,சாதாரணத் தொண்டனாகவோ மாற்றுகிறது.
எனவே,சிந்தனையிலிருந்து நீங்கள் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

சுவாமி விவேகானந்தரின் இந்த உபதேசங்கள் சுகர்ணோவை வீறிட்டு எழச் செய்தது;அவர் மீண்டும் சுதந்திர வேட்கையை இந்தோனோஷியா முழுவதும் பரப்பத் துவங்கினார்;இந்தோனோஷியா சுதந்திரம் அடைந்தது;      சுகர்ணோ அவர்களே இந்தோனோஷியாவின் அதிபரானார்.

பிற்காலத்தில் தன்னுடன் சுதந்திரப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற பகவான் தாஸீக்கு ஒரு கடிதம் எழுதினார்.அந்தக் கடிதத்தில்,
தேசத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மனோதிடம் தரக்கூடிய விவேகானந்தர் அருளுரைகள் அடங்கிய நூல்களை அனுப்பி வைக்கிறேன்.படியுங்கள்
என்று குறிப்பிட்டார்.

ஆன்மீகக்கடலின்கருத்து: தேசத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மட்டுமல்ல;நம் ஒவ்வொருவரின் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கும் சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம் என்ற நூலை தினமும் 10 பக்கம் வாசிக்க வேண்டும்.

நன்றி:கிளிம்ப்ஸ் ஆப் ஹிந்து ஜீனியஸ் என்ற நூலில்  இருந்து;தொகுத்தவர் பிரச்சாரக் ரவிக்குமார்.
விஜயபாரதம்,பக்கம் 24,17.8.2012

No comments:

Post a Comment