Wednesday, August 29, 2012

ஆவணி மாத பவுர்ணமியைப்(30.8.12 வியாழன் இரவு) பயன்படுத்துவோம்;


ஆவணி மாத பவுர்ணமியானது எதிர்வரும் 30.8.12 வியாழன் இரவு 8.36க்குத் துவங்கி,வெள்ளி இரவு(31.8.12) 8.05 மணி வரை இருக்கிறது.நவக்கிரகங்களில் முதன்மையானதும்,முக்கியமானதுமாகிய ரவி எனப்படும் சூரியன் ஆட்சியாகி,அதற்கு நேர் ஏழாம் ராசியில் சந்திரன் முழு பலம் பெறும் நாளே ஆவணி மாத பவுர்ணமியாகும்.இதையே ஆவணி அவிட்டம் என பல நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகிறோம்.

இந்த நாளில்,வியாழன் இரவு  முதல் நம்மால் எவ்வளவு நேரம் முடியுமோ,அவ்வளவு நேரத்துக்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.
எவ்வளவு உயரமான இடத்திலிருந்து நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமக்கு மந்திர ஜபம் விரைவான பலனைத் தரும்.



இதுவரையிலும்,ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள்,இன்று   ஜபிக்கத் துவங்கலாம்;


பல நாட்கள்/வாரங்கள்/மாதங்களாக ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்து,இடையில் பல்வேறு காரங்களால் அதை ஜபிக்க முடியாமல் நிறுத்தியவர்கள்,இந்த நாளில்-  மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

தொலைதூர நாடுகளில் வாழும் தமிழ் வாசகர்கள்,ருத்ராட்சம் இல்லாமலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;வைஷ்ணவத்தைப் பின்பற்றும் வாசகர்கள் ஓம்ஹரிஹரிஓம் என ஜபிக்கலாம்;ஓம்சிவசிவஓம் ஜபித்தால் என்ன பலனோ,அதே பலன் ஓம்ஹரிஹரிஓம் ஜபித்தாலும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை!

ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. ஆவணி மாத பௌர்ணமியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதற்கு மிகவும் நன்றி.

    கோவையில் உள்ள ஜீவசமாதி பற்றிய இடங்களை அறிய ,
    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete
  2. அய்யா வணக்கம் . தகவலுக்கு நன்றி .

    ReplyDelete