Thursday, August 13, 2009

CHINA'S WROND DREAM

சீனாவின் பேராசையும் இந்தியாவின் நிலையும்

சீனாவுக்கு எப்போதுமே ஆதிக்க மனப்பான்மை உண்டு. சீனா உலக வல்லரசாக வேண்டுமாம். அதற்காக அந்த நாட்டு ஆட்சியாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.இது அவர்களது சொந்த விருப்பம்.
அதற்காக நமது பாரதத்தை 30 துண்டுகளாக உடைத்துவிட நீநீநீநீண்ட கனவு கண்டுகொண்டு இருக்கிறது.கனவை நிஜமாக்கிட தனது உளவுத்துறையை முடுக்கிவிட்டுள்ளது. உளவுத்துறையின் அறிக்கைப்படி பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலத்தீவு நாடுகள் மூலமாக அதை நிறைவேற்றத் துடிக்கிறது.இதில் தற்போது இலங்கையின் பங்கு மகத்தானது.
அப்படி நமது பாரத நாட்டை 30 நாடுகளாக உடைத்துவிட்டால் சீனா வல்லரசாகத் தடையேதும் கிடையாதாம்.(பாம்பைத் தின்பவனுக்கே இவ்வளவு திமிர் இருந்தால் நமக்கு எவ்வளவு இருக்கும்)

ஒரு வேளை அப்படி நமது நாட்டை துண்டாட முடியாவிட்டால் அணுகுண்டுகள் வீசியாவது நம்மை வளரவிடாமல் செய்யும் முடிவுக்கு சீனா தற்போது வந்துள்ளது.

முதல்கட்டம் ஜெயிப்பதற்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினை வாத இயக்கங்களாகிய உல்பா, பங்களாதேஷ் முஸ்லீம் ஊடுருவல், காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள், ராஜபக்ஷேக்கு உதவுதல், இலங்கையில் சீனாவுக்கு என ராணுவதளம் அமைத்தல், மாலத்தீவில் ராணுவத்தளம் அமைத்தல் என 1960 முதலே வெட்டி வேலை செய்து வருகிறது.
நமது பாரத நாட்டு ராணுவத்தில் 4,00,000 படைவீரர்கள் உள்ளனர். சீனாவின் ராணுவத்திலோ 22,00,000 படைவீரர்கள் உள்ளனர்.
நமது கடற்படைத் தளபதி ‘சீனாவின் ராணுவ வலிமையை நம்மால் எட்டமுடியாது’ எனக் கூறியிருப்பது தேசபக்தியுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு வேளை நாம் இன்றே முடிவு செய்து சீனாவைப்போல வலிமை பெற நினைத்தால் இன்னும் 20 ஆண்டுகள் கழித்தே அந்த நிலையை அடைய முடியுமாம்.
தவிர,2004 ஆம் ஆண்டு பாரத் சஞ்சார் நிக்காம் லிமிடெட் என்ற நமது பி।எஸ்.என்.எல். லின் அகில பாரத தொலைபேசித்துறையில் தொழிற்சங்கத்தேர்தலில் சீனாவின் வாலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் வெற்றி பெற்றுள்ளது. அதாவது நமது நாட்டின் தொலைத்தொடர்புத் துறை சீனாவின் வசமாகிவிட்டது. ஆதாரம்:தினகரன், தமிழ்நாளிதழ்,பக்கம்२,தலையங்கம்।நாள்: ஆகஸ்டு பதிமூன்று,இரண்டாயிரத்து ஒன்பது,வியாழக்கிழமை.
கடவுளே! இந்த தேசத்தைக் காப்பாற்று!!!

No comments:

Post a Comment