
தமிழ்ப் பண்பாட்டை ஆராய்ச்சி செய்யும் மெக்சிகோ நாட்டு நடிகை
ரெனே லெஃபோரி மெக்சிகோவில் பிறந்து ஹாலிவுட்டில் கலக்கிய ஒரு நடிகை.தவிர சிறந்த ஹெர் டிரஸ்ஸர், ஒளிப்பதிவாளினி, நடன ஆசிரியை, யோகா நிபுணர், இயக்குநர், மேக் அப் உமன், தயாரிப்பாளர்.இவர் தனது பெயரை மாதவி என மாற்றியுள்ளார்.வயது 40.
நமது வாஸ்து நிபுணர் கணபதி ஸ்தபதி அவர்களால் தத்தெடுக்கப்பட்ட வளர்ப்பு மகள்.
இவர் ஏன்சியந்த் சீக்ரெட் ஆப் தி பைபிள் பார்ட்-2 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு குவிந்த விருதுகள் ஏராளம்.
இவர் கூறுவது : 4 வயசுலேயே டான்ஸ் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சாங்க என் அம்மா.அடுத்து யோகா. இப்படி பல திறமைகளோட என்னை வளர்த்தாங்க.ஹாலிவுட்ல மிகப்பெரிய வெற்றிப் படமான ‘செரோனிமா’ படத்துல மேக் அப் உமனா காலடி எடுத்து வைச்சேன்.பல பரிணாமங்களைப் பார்த்தாச்சு.ஆனாலும் மனசு எதையோ தேடிக்கிட்டே இருந்துச்சு.
இந்தியப்பண்பாடு பற்றி சின்ன வயசுலயே படிச்சுருக்கேன்.அதை நேரா பார்த்து தெரிஞ்சுக்கணும்ங்கற ஆர்வம். ஏழு வருஷத்துக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.இங்கிருக்கும் கோயில்கள், மக்கள், ஆன்மீகக்குருக்கள், பக்தி எல்லாத்தையும் பார்த்துப் பிரமிச்சுப் போயிட்டேன். இனி நமக்கான களம் ஆன்மீகம்னு உணர்ந்தேன்.தமிழ்நாட்டுல இருக்கிற காலம்தான் என் வாழ்க்கையின் அர்த்ததை புரிய வச்சது- எனப் பரவசப்படும் ரெனே மூன்று குழந்தைகளின் தாய்.
அவர் மேலும் சொல்கிறார்: “ எந்த எதிர்பார்ப்பும் இல்லாம மனம், உடல், எண்ணம் எல்லாத்தையும் ஒருமுகப்படுத்தி கடவுளுக்காக தங்களையே அர்ப்பணிக்கக்கூடிய இந்த மக்களைப் பார்த்தா வியப்பா இருக்கு. இங்கிருக்கும் பழங்காலக் கோயில்கள், சிற்பங்களை அவ்வளவு தத்ரூபமா நுணுக்கமா வடிச்சிருக்காங்க.இதையெல்லாம் அர்ப்பணிப்பு இல்லாம செய்ய முடியாது.பண்பாடு பழக்கவழக்கங்கள் எல்லாமே கடவுள் நம்பிக்கையால் வந்தவை. அதனால்தான் அதெல்லாம் இன்னும் அழியாம இருக்கு.தப்பு செய்தா ‘கடவுள் தண்டிப்பார்’னு பயப்படுறாங்க.நன்மை செய்தாலும்,, இதை கடவுளுக்குச் செய்றோம்னு நினைக்கிறாங்க.இப்படி உன்னதமான மனநிறைவான வாழ்க்கையை இந்த மக்கள் வாழறாங்க” என்று சிலிர்க்கிறார்.
“இவற்றையெல்லாம் உலக நாடுகள் பின்பற்ற ஆரம்பிச்சா, குற்றங்கள் குறைஞ்சு உலகமே அமைதியாகிவிடும்(இதைத் தான் ஆன்மீகக்கடல் வலைப்பூ கொண்டுவர நினைக்கிறது)ங்கற நம்பிக்கை எனக்கு. அதனால தான் அழிந்து போன பழைய மரபுகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்துட்டு இருக்கேன். நானோ டெக்னாலஜியை அறிவியலாளர்கள் இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்காங்க.ஆனா, அந்த டெக்னாலஜியை வைச்சுத்தான் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கோயில்கள், சிலைகள் எல்லாம் செய்திருக்காங்க. இதையெல்லாம் ஹாலிவுட்ல படமா எடுத்து உலகம்முழுவதும் பரப்ப இருக்கேன். உலக அமைதியை நிலைநாட்ட கடவுள் அனுப்பிய அஸ்திரம்தான் நான்” என்கிற ரெனேயின் கண்கள் ஒளிர்கின்றன.
இந்துக்கலாச்சாராத்தை மையமாகக் கொண்டே ‘வேனிஷிங்க் ட்ரடிஷன்’ ‘ரிவைவல் அண்ட் சர்வைவல்’ ஆகிய இரு நிகழ்ச்சிகளை டிஸ்கவரிச் சேனலுக்காக தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
நன்றி:குங்குமம் 25.6.2009 ,பக்கம் 74-75.
No comments:
Post a Comment