Thursday, August 20, 2009

மதங்களுக்கு அப்பாற்பட்டது யோகா



சொல்லியிருப்பவர்:பிரோஸ் பக்த் அகமது, இஸ்லாமிய அறிஞர் மற்றும் விமரிசகர்

டேராடூனில் உள்ள அரசு அகாடமியில் பத்ருல் இஸ்லாம் என்பவர் யோகா பயிற்சியாளராக உள்ளார். யோகாவுக்கும், இஸ்லாமுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை ‘சலத்’ என்பதாகும்.
தினந்தோறும் 5 வேளை தொழுவதைத்தான் சலத் குறிப்பிடுகிறது. இந்தத் தொழுகை யோகாசனத்திற்கு ஒப்பானது.சலத் என்ற வார்த்தைக்கு பின்முதுகை வளைத்து வணங்குதல் என்பதுதான் அர்த்தமாகும்.நமாஸ் என்றாலே பின்முதுகை வளைத்து அல்லாவை வழிபடுவதைத்தான் குறிப்பிடுகிறது.
நமாஸ் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் சமஸ்க்ருதத்தில் உள்ள ‘நமஸ்தே’ என்பதாகும்.

உருது அல்லது அரபு நெடுங்கணக்குப் படி ஓம் என்பதற்கு முக்கியத்துவம் உள்ளது.ஆலிஃப், வோ, மீம் இந்த மூன்றின் சேர்க்கைதான் ஓம் என்பதாகும்.

ஆலிஃப் என்றால் அல்லா என்று அர்த்தம். வோ என்பது இரண்டு வார்த்தைகளை இணைக்கும் சொல்லாகும். மீம் என்றால் முகம்மது என்று அர்த்தம்.ஆலிஃப், வோ, மீம் என்றால் அல்லாவும் முகம்மதுவும் என்று அர்த்தமாகும்.

ஹக்கீம் ஜி.எம்.சிஷ்டி ‘சூஃபி ஹீலிங்’ குறித்து புத்தகம் எழுதியுள்ளார். யோகா என்பது மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டதுதான். “தாரிக்கத்-இ-நக் ஷ்பந்தி” என்ற சூஃபி வழிமுறை நூற்றுக்கு நூறு
யோகாவுடன் ஒத்துப்போகிறது.எகிப்தைச் சேர்ந்த அப்துல் பாசித் குயாரி மிகநேர்த்தியாக குரானை ஓதுபவர் ஆவார். யோகாப் பயிற்சி சேர்ந்ததுடான் குரான் ஓதுவதும் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.பிராணயாமம் குரான் ஓதும்போதும் அப்பியாசம் செய்யப்படுகிறது.

ஈரான், மலேசியா, இந்தோனோசியா என பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் யோகா பின்பட்டப்பட்டுவருகிறது. தாருல்-உலும்-தியோபந்த் என்ற இஸ்லாமிய அமைப்பும் யோகாவுக்கு ஆதரவாக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முஸ்லீம்கள் ஓம் என்பதற்குப் பதிலாக அல்லா என்று உச்சரித்துக்கொள்ளலாம் என சுவாமி ராம்தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘நமாஸ், த யோகா ஆஃப் இஸ்லாம்’ என்ற புத்தகத்தை அஷ்ரஃப் எஃப் நிசாமி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை டி.பி.தாராபூர்வாலா வெளியிட்டுள்ளார். அதில் யோகா என்பது சில தொழில்நுட்பங்களின் திரட்டு என்று குறிப்பிட்டுள்ளார். இது மதரீதியானவற்றை அனுசரிக்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.

சிஜ்ஜிடா என்பது அர்த்த சிரசாசனம் ஆகும். ‘கயாம்’ என்பது வஜ்ராச்னமாகும். ‘ருக்கு’ என்பது பச்சிமோதனாசம் ஆகும். கிறிஸ்தவ யோகா குறித்து ஃபாதர் எம்.டெக்கனல் ஒருபுத்தகம் எழுதியுள்ளார்.ஏசு கிறிஸ்துவின் போதனைப்படி நடப்பதற்கு யோகாசனம் உதவுகிறது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment