உலகின் எல்லா நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானிகளையும் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு மீண்டும் ஒரு முறை, ‘ ஆரியர்கள் இந்திய உபகண்டத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள்’ என்ற சித்தாந்தத்தை, ‘அண்டப்புளுகு’ என்று கூறி ‘டமார்’ என்று போட்டு உடைத்திருக்கின்றனர்.
இங்கேயுள்ள தி.க. ஆசாமிகளும், தி.மு.க.வினரும், வெள்ளைக்காரர்கள் இட்டுக்கட்டிச் சொன்ன புளுகு மூட்டைத் தரித்திரமான மெசபடோமியோ, சுமேரியாவிருந்து ஆரியர் என்ற இனம் இந்திய உபகண்டத்தில் படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தது என்பதை தங்கள் அரசியல் பிழைப்புக்கு உதவும் என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள் அல்லவா?
அதைத்தான் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, இந்தியா முழுவதிலும் எல்லா இனத்து மக்களின் 12,200 டி.என்.ஏ.,சாம்பிள்களை எடுத்து துல்லியமாக ஆராய்ச்சி செய்து, எல்லா இந்தியர்களும் அவர்கள் கருப்போ, சிவப்போ, வெளுப்போ என்ன ஜாதியோ எதுவானாலும்(இந்தியாவில் 6000 ஜாதிகள் உள்ளன), ஒரே ஜீன் ஒரே பாரம்பரியத்தைச் சேர்ந்த இனம் என்று அடித்துச்சொல்லிவிட்டனர்.
இங்கேயுள்ள வெள்ளைத்தோல் பார்ப்பனர்கள், கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் புளுகிக் கொண்டு இருக்கப்போகிறார்களோ?
எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த டார்டு யுனிவர்சிட்டியின், ‘இன்ஸ்டிடியூட் ஆப் மாலிக்யூலர் பயாலஜி’ என்ற விஞ்ஞானத்துறையின் தலைமையில் பல நாட்டு மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கருத்து , ‘திராவிட இந்தியன், ஆரிய இந்தியன் என்று சொல்வதெல்லாம் விஞ்ஞானரீதியானது அல்ல. வெறும் கப்ஸா! இங்குள்ள எல்லா இந்தியர்களும் இங்கே 60,000 முதல் 70,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவிலிருந்து குடியேறிய மக்களின் சந்ததிகளே’ என்கிறார்.
இந்த விஞ்ஞானக்குழுவின் உறுப்பினரான டாக்டர் தியானேச்வர் சவுபே ‘இங்கேயுள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகள், உபஜாதிகள், இங்கேயே உற்பத்தியாகிப் பரவிய வியாதிகள்’ என்கிறார்.இவர்கள் ஆராய்ச்சி, மரபியல் விஞ்ஞான ரீதியானது.
‘ஆரியன்’ என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு, கிட்டத்தட்ட , ‘ஜென் டில்மேன்’ என்பதே அர்த்தம்.
திராவிடம் என்பது டெக்கான் என்ற தட்சிணப்பீடபூமி என்றும், ஒரு பிரதேசத்தைக்குறிப்பது என்றும் மொழியியல் வல்லுநர்கள் கரடியாகக் கத்தி ஓய்ந்துவிட்டனர்.
இவர்கள் போற்றும் வெள்ளைத்தோல், ஐரோப்பிய விஞ்ஞானிகளே, ‘ஆரியர் படையெடுப்பு என்பதெல்லாம், ஆதாரமில்லாத கப்ஸா’ என்று சொல்லிவிட்டனர்.
இந்த கட்டுரை திரு.எஸ்.அனந்தராமன்,அண்ணாநகர்,சென்னை யிலிருந்து தினமலர் தினசரியின் இது உங்கள் இடம் பகுதியில் வெளிவந்தது. வருடம் 2009.
http://www.iranchamber.com/history/article...ple_origins.php
ReplyDeletehttp://www.livius.org/da-dd/darius/darius_i_0.html
ஆரியப் படையெடுப்பை உண்மையில்லை என்பவர்கள் ஈரானியர்களின் சரித்திரத்தையும், பாரசீகத்தின் சரித்திர ஆராய்சியாளர்களையும் பொய்யன்களாக்குகிறார்கள்.
[size=15]இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.