Thursday, August 20, 2009

மூலிகை ஆராய்ச்சி செய்ய வந்த ஆஸ்திரியப் பெண் இந்துவாக மதம் மாறினாள்

.


ஆஸ்திரியா நாட்டில் வியன்னாவைச் சேர்ந்தவர் மாரிஸ்கா.வயது 28. இந்தியக் கலாச்சாரம் குறித்து படித்ததால் நம் நாட்டின் மீது காதல் மலர்ந்தது.

குறிப்பாக அம்மன் வழிபாடு, இயற்கை வழிபாடு குறித்து அறிய விரும்பி 7 ஆண்டுகளுக்கு முன்பு கோல்கத்தா வந்தார்.ஒரு ஆண்டு அங்கு எதிர்பார்த்த அளவிற்கு அம்மன் வழிபாடு அங்கு இல்லை.

பிறகு மதுரை வாடிப்பட்டிக்கு வந்து அங்கும் அம்மன் வழிபாடு பற்றிய தேடலைத் துவக்கினார்.மூலிகைக் கண்காட்சியில் வைத்திய லிங்கசாமி என்பவரை சந்தித்தார்.இருவரும் மூலிகைகள் மீதான ஆர்வத்தால் நண்பர்களானார்கள்.மதுரையில் ஒரு ஆண்டு இருந்த பிறகு வைத்தியலிங்கசாமியைத் தேடி சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் சுருளிமலைக்கு வந்தார்.வைத்தியலிங்கசாமி அங்கு முருகன் கோயில் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் கொண்ட தோட்டம் அமைத்து வசித்து வருகிறார். அவர்டன் மாரிஸ்கா சேர்ந்து கொண்டார்.காவி உடை, துளசி மணி, வேப்பிலை மாலை,நெற்றியில் எலுமிச்சைபழ சைசுக்கு குங்குமம் என தன்னை அம்மன் பக்தையாக மாற்றிக் கொண்டார்.தனது மாரிஸ்கா என்ற பெயரை மாவனகாளி என இந்து பெயராக மாற்றிக் கொண்டார்.
காய்கறி, பழம்,இலைகளில் கிடைக்கும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்டி அவற்றை வெப்சைட்டில் வெளியிட்டுவருகிறார்.
இதே போன்ற ஓவியம் வரையக் கற்றுக் கொள்ள விரும்புவோர் 93605-71686 என்ற செல் எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.
நன்றி:தினமலர் 18.10.2007.

1 comment:

  1. http://www.sangatham.com/bhagavad_gita
    to read bhavat gita

    ReplyDelete