ஒரு கோவில் அறிவிப்பு பலகையில், . .தேதி அன்னதானம் நடைபெறும்.பக்தர்கள்,தங்களால் இயன்ற உதவியை பொருளாகவோ,பணமாகவோ செலுத்தி,அன்னதான நிகழ்ச்சி சிறப்புற ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.குறிப்பு:தயவு செய்து ரேஷன் அரிசியை அன்னதானத்திற்கு தர வேண்டாம்.
விசாரித்தபோது, “அன்னதானத்திற்கு உதவுவது,மிக புண்ணியமான,உன்னதமான விஷயம். ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசி பெரும்பாலும் நல்ல தரத்துடனேயே உள்ளது.ஆனால்,விஷயம் அதுவல்ல;இப்போது அனைத்து கார்டுகளுக்கும் 20 கிலோ இலவச அரிசி கிடைக்கிறது.அன்னதானத்திற்குக் கொடுப்பது பெருமைக்காக என்று நினைத்து அந்த அரிசியை வாங்கி கோவிலில் கொடுத்துவிட்டு, ‘ஓசியில் அரிசி கிடைத்தது; இங்கு கொடுத்தால் ஓசியில் புண்ணியமும் கிடைச்சிடும்ல’ என்று சிரித்த ஒரு மேதாவியால் எழுந்த ஞானதோயத்தில் எழுதப்பட்டதுதான் இந்த அறிவிப்புப் பலகை”என்று விளக்கினார் கோவில் ஊழியர் ஒருவர்.
அன்னதானத்திற்கு அரிசி கொடுப்பவர்கள் கவனத்திற்கு:
நாம் உழைத்தப் பணத்தில் ஒரு ரூபாய் கொடுத்தாலும் போதும்.இப்படி ஓசியில் கிடைக்கும் புண்ணியம் வேண்டாம்.
இலவசமாகவோ,குறைந்த விலையிலோ ரேஷனில் கிடைக்கும் பொருட்கள் உங்களுக்குத் தேவைப்படவில்லை எனில்,சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் எழுதிக் கொடுத்து,உங்கள் குடும்ப அட்டையிலும் பதிவு செய்து கொள்ளுங்கள்.இது அரசின் பற்றாக்குறையையும் நிதிச்சுமையையும் பெருமளவு குறைக்கும்; சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் ஏற்படும் சிறு சிறு ஊழல்களையும் தடுக்கும்.
ஆன்மீகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை;சிக்கனம் இல்லாமல் இந்து தர்மம் இல்லை;
ஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 16, வெளியீடு 25.1.13
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment