நேற்று 20.2.13 புதன் கிழமை;வழக்கம் போல எனது கடமைகளைச் செய்து கொண்டு இருக்கும் வேளையில் நமது ஆன்மீக குருவின் அலைபேசி அழைப்பினால் சுறுசுறுப்பானேன்.உடனே,வந்து சந்திக்கும்படி கூறினார்.அவரோடு,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அமைந்திருக்கும் அருள்நிறை பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றோம்.மாலை ஐந்து மணி இருக்கும்.சுமாராக ஒரு மணிநேரம் வரையிலும் அவரோடு பத்திரகாளியம்மனின் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தோம்.பிரார்த்தனையின் முடிவில்,வந்திருந்த எங்களுக்கு கோவில் பூசாரி காபி வழங்கினார்;சிறப்பு அர்ச்சனைகள் செய்தார்;பிரசாதம் வழங்கினார்;கோவிலின் வாசலை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவரின் சன்னதிக்கு நமது குரு வந்தார்;
சில நிமிடங்களில் அவர் ஒருவித உணர்ச்சிநிலையை எட்டினார்;அப்போது அவரது குரலில் மாற்றம் தெரிந்தது;உடன் இருந்தவரிடம் “உடனே,இரு நெய்தீபம் இங்கே ஏற்றுங்கள்.ஏற்றி உங்களது கோரிக்கையை வேண்டுங்கள்;உங்களது நியாயமான கோரிக்கை/ஏக்கம்/வேண்டுதல் எதுவாக இருந்தாலும் உடனே நிறைவேறும்.கூடவே,இந்தத் தெருவில் இருக்கும் அனைவரிடமும் இந்த செய்தியைச் சொல்லுங்கள்”என்றார்.கூடவே,வந்தவர் ஓடோடிச் சென்று இரண்டு நெய்தீபங்களைத் தயார் செய்து கொண்டுவந்தார்.நமது ஆன்மீக குரு தாம் கொண்டு வந்திருந்த டயமண்டு கல்கண்டுகளை ஸ்ரீகாலபைரவரின் பாதத்தில் வைத்தார்.அவர் வைப்பதற்கும்,நெய்தீபங்களைக் கொண்டு வந்தவர் அவைகளை ஏற்றுவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
உடனே,கோவில் பூசாரியிடமும் உடன் இருந்தவர்களிடமும் அந்த ஸ்ரீகால பைரவர் முகத்தை உற்றுநோக்கச் சொன்னார். செல்போனில் அந்த ஸ்ரீகால பைரவர் முகத்தை மட்டும் புகைப்படமாக எடுக்கச் சொன்னார்;அவரும் தனது செல்போனில் படமாக ‘க்ளிக்’கினார்;அவர் எடுத்த புகைப்படத்தை விரிவாக்கி காட்டினார்.அந்த ஸ்ரீகாலபைரவரின் போட்டோவில் கழுத்துக்கு அருகில் வெள்ளைக் கோடாக ஒரு சூலாயுதம் தெரிந்தது.
பூசாரியிடம் விடைபெற்றுவிட்டுப் புறப்பட்டோம்;திரும்பத் திரும்ப இந்த செய்தியை உடனே நமது வாசகர்கள்,வாசகிகள் அனைவருக்கும் சொல்லும்படி கூறிக்கொண்டே இருந்தார்;அந்த கணத்தில் அவருக்கு வந்த செல்போன் அழைப்புகள் அனைத்திற்கும் பின்வரும் தகவலை சொல்லிக் கொண்டே இருந்தார்.
இன்று மாலை 6.37 முதல் 8.37 வரை தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஸ்ரீகால பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகளிலும் அவரது அருளாற்றல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.எனவே,நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்குச் செல்லுங்கள்;சென்று இரண்டு நெய்தீபங்களை ஏற்றுங்கள்;உடன்,கால் கிலோவுக்குக் குறையாமல் டயமண்டு கல்கண்டு வாங்கி அவரது பாதத்தில் வைத்து குறைந்தது பதினைந்து நிமிடங்களுக்கு உங்களது நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் வேண்டுங்கள்;பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர்,அந்த டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள்;மீதியை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள்;அடுத்த சில மணித்துளிகள்/நாட்கள்/வாரங்களில் உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும்;
முடிந்தால் இத்துடன் மரிக்கொழுந்து,செவ்வரளி,அவல்பாயாசத்துடன் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.
பிரார்த்தனை நிறைவடைந்ததும்,என்ன உணர்ந்தீர்கள்?என்பதை உடனே எமக்குத் தெரிவியுங்கள்
இந்த பைரவ ஆசியை அப்போதுமுதல் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் அவரும் நானும் சொல்லிக் கொண்டே இருந்தோம்.கூடவே,பயணித்தவாறு சுமார் நூறு கி.மீ தூரத்தைக் கடந்தோம்.சரியாக மணி இரவு 8.25! அவரது சொந்த கிராமத்தை வந்தடைந்தோம்.அங்கே இருக்கும் கோவிலில் ஸ்ரீகால பைரவருக்கு இதே போல நெய்தீபங்கள் இரண்டை ஏற்றி,டயமண்டு கல்கண்டை அவரது பாதத்தில் வைத்து,செவ்வரளி பூக்களை ஸ்ரீகால பைரவரின் மீது தூவினோம்.அடுத்த பதினேழு நிமிடங்கள் வரையிலும் ஸ்ரீகால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து பிரார்த்தனை செய்தோம்.அப்போது ஸ்ரீகாலபைரவரின் காட்சி கிட்டியது.நான் ஆச்சரியத்தில் மிரண்டே போனேன்;ஸ்தம்பித்து உணர்வுப்பெருக்கை எட்டினேன்.
இதே போல் தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு வழிபாடு செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பைரவ ஆசிகளும்,காட்சிகளும் கிட்டியதை அடுத்தடுத்து வந்த அலைபேசிப் பேச்சுகள் தெரிவித்தன.
அடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளிலும் இதே போல ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல் வெளிப்பட இருக்கிறது.அவை அனைத்தும் ஒரு நாளுக்கு முன்னதாக ஆன்மீகக்கடலில் பதிவுகளாக வெளியிடப்படும்.
ஓம்சிவசிவஓம்
மிக்க நன்றி அய்யா
ReplyDelete"தென்னாடு உடைய சிவேன போற்றி என்னடவறக்கும் இறைவ போற்றி"
ReplyDeleteபைரவரின் ஆருளால் இவுலகில் அணைத்து மக்களும் பயனடைய உங்களின் சேவை என்றும் தொடர ஆன்மிக நண்பனின் நன்றி அய்யா
thanks for sharing
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
ReplyDelete