Wednesday, February 6, 2013

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!





ஒவ்வொரு தமிழ் வருடமும் இந்துக்களுக்கு மூன்று அமாவாசைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.இந்த மூன்று அமாவாசை நாட்களிலும் நாம் பழமையான சிவாலயங்கள் அல்லது நமது ஊரில் இருக்கும் சிவாலயம் அல்லது காசி அல்லது திருக்கையிலாயம் அல்லது திரு அண்ணாமலை= இந்த சிவாலயங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அன்னதானம் செய்ய வேண்டும்.அவ்வாறு அன்னதானம் செய்வதால் நமது முன்னோர் பரம்பரையினர் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.கடகராசியில் சூரியனோடு சந்திரன் சேரும் ஆடி அமாவாசை,கன்னி ராசியில் ரவியோடு மதி சேரும் புரட்டாசி அமாவாசை,மகர ராசியில் உருவாகும் தை அமாவாசை இம்மூன்றும் மிகுந்த புண்ணியம் தரும் அமாவாசைகள் ஆகும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் ஆவார்.


துன்பம் நிறைந்த கலியுகத்தில் நமது தினசரி வாழ்க்கையானது ஒவ்வொரு நாளும் சிக்கல் மேல் சிக்கல்களுடன் தான் நகர்கின்றது;ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்தாலும் கூட சிலருக்கே தினசரி வாழ்க்கையானது எந்தக் குறையுமின்றி நகர்கின்றது;அதற்குக் காரணம் அவர்கள் இந்த மூன்று அமாவாசைகளிலும் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வது மட்டுமே காரணம்.


எப்படி முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வது?


நந்தன ஆண்டின் தை அமாவாசையானது 9.2.13 சனிக்கிழமை மதியம் 2.38க்குத் துவங்கி மறு நாள் 10.2.13 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.04 மணிக்கு நிறைவடைகிறது.சனிக்கிழமை தை அமாவாசை துவங்குவதால், கடுமையான கர்மவினைகளை நீக்கிட விரும்புவோர்,நீண்ட காலமாக நிம்மதியில்லாமல் தவிப்போர்,ஒரு மகத்தான விடிவுக்கு ஏங்குவோர்,அனைத்து சாபங்களும் நீங்கிட விரும்புவோர் இந்த பொன்னான திதியைப் பயன்படுத்த முயற்சி செய்யவும்.



பக்தியும்,வசதியும்,ஓய்வு நேரமும் கொண்டவர்கள் காசி அல்லது ராமேஸ்வரம் அல்லது கொடுமுடி அல்லது காவிரிக்கரையோரம் இருக்கும் சிவாலயங்கள் சென்று அந்தணர்களைக் கொண்டு பித்ரு தர்ப்பண பூஜைகள் செய்து வஸ்திர தானம்,கோதானம்,சொர்ண தானம்,அன்னதானம் செய்யலாம்.


பக்தியும்,ஆர்வமும்,ஓரளவு வசதியும் உள்ளவர்கள் அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்;அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து கிரிவலம் செல்ல வேண்டும்;அவ்வாறு கிரிவலம் செல்லும்போது கிரிவலப்பாதையில் எதிர்ப்படும் சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.கிரிவலப்பாதை முழுவதும் டயமண்டு கல்கண்டு தூவலாம்;நவதானியங்களைத் தூவலாம்;அண்ணாமலையில் அன்னதானம் செய்தாலே முறைப்படி பித்ரு தர்ப்பணம் செய்தமைக்குச் சமம் என்று சித்தர்களின் தலைவர் கும்பமுனி தெரிவித்திருக்கிறார்.



பக்தியும்,ஆர்வமும்,ஓரளவு சேமிப்பும் உள்ளவர்கள் அண்ணாமலைக்கு 9.2.13 சனிக்கிழமை காலையிலேயே வருகை தந்து  ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விட்டு,பகல் முழுவதும் உபவாசம் இருக்கலாம்;பகல் முழுவதும் அண்ணாமலையாரின் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து மஞ்சள் துண்டு விரித்து காலையிலும்,மாலையிலும் குறைந்தது ஒரு மணி நேரம்(அதிக பட்சம் எட்டுமணி நேரம்) மூலவரை நோக்கியவாறு அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;அன்று இரவு ஒன்பது மணிக்கு கிரிவலம் புறப்பட வேண்டும்;அவ்வாறு கிரிவலம் புறப்படும் போது மேலாடை எதுவும் அணியாமல் மஞ்சள் நிற வேட்டி மட்டும் அணிந்து,கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணிந்து,உடல் முழுவதும் விபூதி பூசி,தலையில் வில்வதளத்தை ஒட்ட வைத்து,இரண்டு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு மனம் முழுக்க ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு செல்லவேண்டும்.கிரிவலப்பாதையான பதினான்கு கிலோமீட்டர்கள் முழுவதும் இவ்வாறு செல்வது மிக மிக மிக புண்ணியச் செயல் ஆகும்.மறு நாள் 10.2.13 ஞாயிற்றுக்கிழமையில் மூலவராகிய அண்ணாமலையாரை தரிசித்து விட்டு நேராக சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்.(வேறு எந்த ஊருக்கும்,எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது)


வீடு திரும்பிய மூன்று நாட்கள் வரையிலும் 14.2.13 வியாழன் காலை வரையிலும் கோபப்படாமல் இருந்தாலே தை அமாவாசை கிரிவலத்தின் முழுப்பலன்களையும் அடையலாம்.மிக நீண்டகால பிரச்னைகள் தீர்ந்து போயிருக்கும்.தீரவே தீராத வழக்கிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்;உங்களது கெட்ட சுபாவமே மாறிப்போயிருக்கும்;உங்களின் ரத்த உறவுகளின் சகிக்க முடியாத சுபாவமும் கரைந்து போய்,நீங்கள் ஒற்றுமையாக இருக்க ஆரம்பிப்பீர்கள்.


இதுவும் செய்ய இயலாதவர்கள்,9.2.13 சனிக்கிழமை இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரையிலும், 10.2.13 ஞாயிற்றுக்கிழமை காலை பதினோரு மணி முதல்  பனிரெண்டு மணி வரையிலும் ஏதாவது ஒரு ஜீவசமாதி அல்லது உயரமான மலைப்பகுதிக்குச் சென்று தனிமையில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.

இதுவும் செய்ய இயலாதவர்கள்,இதே நேரத்தில் நமது வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்பவர்கள் மேலே கூறிய நேரத்தில் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் மந்திர ஜபம் செய்யலாம். மிதமிஞ்சிய பூர்வபுண்ணியம் உள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும்.


இவைகளில் எந்த ஒன்றைச் செய்தாலும்,நீங்கள் ஞாயிறு காலை பதினோரு மணிக்கு மேல் பனிரெண்டு மணிக்குள் ஒரே ஒரு பசுவுக்கு ஆறு நாட்டு வாழைப்பழங்களை வாங்கித் தர வேண்டியது உங்கள் கடமையாகும்.இது உங்கள் குலதெய்வத்தை மகிழ்ச்சிப்படுத்தும் கடமை ஆகும்.குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இதை மட்டுமாவது செய்யலாம்.


இந்தப் பதிவினை வாசிக்கும் நீங்கள் ஒரு கோடியில் ஒருவர்;இந்தப் பதிவில் குறிப்பிட்ட வழிமுறையில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்திவிட்டால் நீங்கள் நூறு கோடியில் ஒருவர்.உங்கள் முன்னோர்களின் ஆசியும் , உங்கள் குல தெய்வத்தின் ஆசியும் உங்களுக்கு மட்டுமே இருந்ததால் தான் இதில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்த முடிந்திருக்கிறது.

ஓம்சிவசிவஓம்

5 comments:

  1. பெற்றோர் இல்லாதவர்கள் மட்டும் தான் இதை செய்ய வேண்டுமா?அல்லது யார் வேண்டுமானாலும் செய்யலாமா ?

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்

    கிரிவலம் விரதம் இருந்துதான் செல்ல வேண்டுமா அல்லது
    இரவு விரதம் இல்லாமலும் செல்லலாமா

    -- jana

    ReplyDelete
  3. விரதம் இல்லாமலும் செல்லலாம்.அன்னதானம் மட்டும் செய்யலாம்;உங்களால் எதைச் செய்யமுடியுமோ அதை மட்டும் செய்யுங்கள்.அதுவே போதும்.மனப்பூர்வமாகச் செய்வதே முக்கியம்.எண்ணிக்கை கூட அவசியம் இல்லை.

    ReplyDelete
  4. ஒரு 3 பேருக்கு அன்னதானம் செய்ய கிழக்கு கோபுர வாசலில் உள்ள விடுதில் பொங்கல் வாங்கி கொண்டு கோவில் வாசலில் ஒரு சாதுக்கு மட்டும் தான் கொடுக்க முடிந்தது. மீதி ஐ வாசலில் இருந்த பிட்சைகாரர்கள் ஓடி வந்து பிடுங்கி கொண்டார்கள். கிட்டத்தட்ட ஒரு வழிபரி தான். மனத்தில் கஸ்டமாகிவிட்டது. இதற்கு என்ன தான் வழி.

    ReplyDelete
  5. அண்ணாமலையில் இப்படி அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வுதான் இது.தாங்கள் நிறைய பேர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்பதையே குறிப்பால் உணர்த்துகிறது.வருத்தம் வேண்டாம்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete