அமிர்தசரஸ்:மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், நேற்று அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றார். நூற்றுக்கணக்கான இந்தியர்களை கொன்று குவித்த, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், தனது பயணத்தின் கடைசி நாளான நேற்று, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். கோவிலை சுற்றி பார்த்த பின், அருகில் உள்ள, ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்திற்கு சென்றார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பதிவேட்டில், "இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, பிரிட்டன் வரலாற்றில் மறக்க முடியாத தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது வெட்கத்திற்குரிய செயல். இந்த சம்பவம் மறக்க முடியாத ஒன்று. உலக அமைதிக்கு, பிரிட்டன் தொடர்ந்து பாடுபடும்' என, குறிப்பிட்டார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்று, 94 ஆண்டு முடிவடைந்த நிலையில், இங்கு வந்து பார்வையிட்ட, முதல் பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், 1997ம் ஆண்டு, இங்கு வந்து பார்வையிட்டார்.

ஆன்மீகக்கடலின் கருத்து:ஐயா டேவிட் கேமரூன் அவர்களே! மதரீதியான உணர்வுகளால் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு இஸ்லாமியர்களிடம் மதவெறியைத் தூண்டியதற்கு எப்போது மன்னிப்பு கேட்கப்போகிறீர்கள்? அதே மதவெறியால் இந்தியாவை இரண்டு நாடுகளாக உடைத்து,இரு நாடுகளிடமும் ஆயுத வர்த்தகத்தைச் செய்து வரும் நீங்களும்,உங்கள் உலக வாரிசு அமெரிக்காவும் எப்போது அந்த வழக்கத்தைக் கைவிடப் போகிறீர்கள்? இந்து தர்மத்தை நக்கல் செய்தும்,இழிவு படுத்தியும் கி.பி.1700 முதல் இன்று வரையிலும் உங்கள் பாதிரியார்கள் இந்தியா முழுக்க கிறிஸ்தவ மதமாற்றம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.அதற்கு எப்போது மன்னிப்புக் கேட்கப்போகிறீர்கள்? செய்தி ஆதாரம்: தினமலர் 21.2.13
No comments:
Post a Comment