பரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே
யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு
தண்ட முன் புரிதரு வடுகனைப் போற்றிச் செய்குவோம்(கந்த புராணம்)
தனம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற
உளம்பொலி காசிமேவும் உயிர்கள் செய்பாவமெல்லாம்
களம் பொலியாது தண்டங்கண்டற வொழிந்து முக்தி
வளம்பொலி வகைசெய் காலவயிரவற் கன்பு செய்வோம்(மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்)
சீரார் மதி சடையும் திருநீரும் திருமுகமும் கூரார்ந்த
முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில் மிகும் காராரிந்த மேனி
பிறவியிலேயே வருமுன் காட்சி வாரார்
வளர் தெட்சிணகைலாச வடுக பைரவமே
வஞ்சகர் அஞ்சத்தக்க வாள் நகை வதனம் வாழி
வெஞ்சமத்து அசுரர் செற்ற வீர அட்டகாசம் வாழி
புஞ்சவல் இருள்வெல்லோதி பொறியினை அடக்கு நல்லார்
நெஞ்சகம் கவரா நிர்வாணக் கோலம் வாழி
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல காலபைரவனாகி வேழம் உரித்து உமை
அஞ்சக்கண்டு ஒண்திருமேனி மணிவாய்விள்ள சிரித்தருள்
செய்தார் சேறைச் செந்நெறி செல்வனாரே(அப்பர் சுவாமிகள்)
ஓம்சிவசிவஓம்
great
ReplyDeleteசாதி,சமயம், மதம் போன்ற கொள்கைகளை மக்கள் மத்தியில் விதைத்து மக்களை பிரித்து வைத்துள்ளதுதான் ஆன்மீகம் என்னும் பக்தி மார்க்கமாகும்.அதனால் எந்த பயனும் மக்களுக்கு கிடைக்கவில்லை .பொருளை ஈட்டுவதற்கும் அதனால் வரும் துன்பங்களை அனுபவிக்கும் வழியைக் காட்டியது பக்தி மார்க்கமாகும்.ஒழுக்கம் என்ற வகையில் மக்களை மாக்கலாக்கியதுதான் பக்தி மார்க்கம் ,பல்லாயிரம் ஆண்டுகளாக பக்திமார்க்கம் நிலைப் பெற்றுக் கொண்டுள்ளது அதனால் என்ன பயன்.ஆன்மீகம் என்பது ஆன்மாவைத் தெரிந்து அருளைப் பெற்று வாழும் வாழ்க்கைதான் ஆன்மீகம் என்பதாகும்.அதற்கு ஞான மார்க்கம் என்பதாகும்.அவைதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கம் என்னும் சுத்த சன்மார்க்கமாகும்.அந்த மார்க்கத்தை வள்ளலார் தோற்றுவித்து உள்ளார் .அவர் காட்டிய மார்க்கம் அருளைப் பெற்று மரணத்தை வென்று இறைவனுடன் சேரும் மார்க்கமாகும்.சாகாக்கல்வியை கற்றுத் தரும் மார்க்கமாகும்.இன்னும் பழைய கற்பனைக் கதைகளை ,கற்பனைக் கடவுள்களை நம்பாமல் உண்மைப் பொது நெறியாக விளங்கும்,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து பேரின்ப பெருவாழ்வு வாழுங்கள்.இதுவே இறைவனின் கட்டளை சட்டமாகும்.கடவுள் நேரடியாக வந்து போதித்த உண்மை மார்க்கம் என்பதை அறிந்து தெரிந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வள்ளலார் உலக மக்களை அழைக்கிறார் .வாருங்கள் வடலூர் வந்தால் பெறலாம் நல்ல வரமே !அன்புடன் ;--ஆண்மநேயன் ...கதிர்வேலு.
ReplyDeleteஉலகத்தில் எந்த நாட்டையும் விடவும் மிக மிக மிக உயர்ந்த தேசம் நமது பாரத தேசம்.அதனால் தான் இறைவனே இங்கு அடிக்கடி வந்து,பிறந்து,மனிதர்களின் வாழ்க்கை நெறிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கிறார்.காலால் சாப்பிட முடியுமா? தலையால் சுவாசிக்கமுடியுமா? தாங்கள் இன்னும் நமது இந்து தர்மத்தின் அடிப்படையை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை;பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்களிடையே ஒற்றுமை,இறைவனாகும் வழிகளை போதித்த ஒரே தர்மம் நமது இந்து தர்மம் மட்டுமே.பக்தி மார்க்கம்,ஞானமார்க்கம்,ஆன்மீகம் அனைத்துமே மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்தப் பிறந்தவையே.ஒருபோதும் பிரிக்க உருவாக்கப்படவில்லை;தங்கள் சிந்தனையில் நிறைய கோளாறுகள் இருக்கின்றன.நமது ஒற்றுமையையும்,ப்ழமையையும் உணர்ந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் நம்மிடையே பிரிவினை உணர்வுகளை த் தூண்டினான்.தொலைநோக்குச் சிந்தனையுள்ள தலைவர்கள் நமது நாட்டில் உயர்ந்த பதவிக்கு எப்போதாவது வந்தமையால் தான் உங்களைப் போன்றவர்களுக்கு இப்பேர்ப்பட்ட குழப்பம்....ஒவ்வொரு மனிதனுக்கும் புரிந்து கொள்ளும் திறனில் வித்தியாசம் இருக்கிறது.அனைவராலும் சமரசசுத்த சன்மார்க்க சங்கத்தின் கோட்பாடுகளை புரிந்து கொள்ள முடியாது.படிப்படியாக வேண்டுமானால் ஊட்டலாம்.
ReplyDelete