கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட ஒரு சித்தவழிபாட்டுமுறையை பின்பற்றலாம்;இந்த சித்தவழிபாட்டுமுறையை பின்பற்றிட முதல் தகுதி:21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;இரண்டாம் தகுதி:அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;யார் இந்த சித்தவழிபாட்டுமுறையைப்பின்பற்றுகிறாரோ அவர் மட்டும் (தற்போதைக்கு) அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் போதும்;
முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்டிருக்கும் மாலை(இந்த மாலையில் வேறு எந்த ஒரு பூவும் கட்டப்பட்டிருக்கக் கூடாது.இது மிகவும் முக்கியம்)சில நேரங்களில்/சில ஊர்களில்/சில சந்தர்ப்பங்களில் ரோஜாப்பூமாலை கிடைக்காவிட்டால்,ஒரு தடவை மட்டும் இது இல்லாமல் சித்தர் வழிபாடு செய்யலாம்;
டயமண்டு வடிவிலான கல்கண்டு ஒரு கிலோ , விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழம் குறைந்தது அரைக்கிலோ; விதையில்லாத பேரீட்சைபழம் ஒரு பாக்கெட், நெய் தீபம் ஏற்றத்தேவையான பொருட்கள்,நாட்டுவாழைப்பழங்கள் ஆறு,வெற்றியும் கொட்டைப்பாக்கும்,ஒரு பத்திபாக்கெட் போன்றவைகளுடன் ஏதாவது ஒரு சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் உங்கள் ஊரில் இருக்கும் சித்தரின் ஜீவசமாதிக்குச் செல்லவும்.
முதலில் நீங்கள் வாங்கிய ரோஜாப்பூ மாலையை அவருக்கு அணிவிக்கவும்.நெய் தீபம் ஏற்றவும்;டயமண்டு கல்கண்டு மற்றும் பேரீட்சைப்பழங்களின் பாக்கெட்டுகளை கிழித்து வைக்கவும்;நாட்டு வாழைப்பழத்தின் மீது கொண்டு வந்திருக்கும் பத்தியை பொருத்தவும்;சுமார் 30 நிமிடம் வரை உங்களுடைய கோரிக்கை என்ன என்பதை மனதால் பிரார்த்தனை செய்யவும்.
அதன்பிறகு,அவரது சன்னதியின் முன்பாக விழுந்து வணங்கியப்பின்னர் டயமண்டு கல்கண்டுகளையும்,பேரீட்சைப்பழங்களையும் அங்கே இருப்பவர்களிடம் பாதி அளவுக்கு விநியோகம் செய்யவும்;மீதியை வீட்டுக்கு எடுத்துச் செல்லவும்;வீட்டுக்குக் கொண்டு சென்று நமது குடும்பத்தாரிடம் விநியோகம் செய்யவும்.
சில ஜீவசமாதிகளுக்கு நாம் செல்லும் நேரத்தில் ஆட்கள் வராமல் இருக்கலாம்;அப்படி இருந்தால் மொத்த இனிப்புகளையும் எடுத்துக்கொண்டு நமது வீட்டுக்கு வந்து நமது அண்டை வீட்டார் அல்லது நட்பு/உறவு வட்டத்திடம் பகிர்ந்து கொள்ளவும்.
இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் வழிபாடு செய்யவும்.எட்டு சனிக்கிழமை மட்டும் செய்யவும்;எட்டாவது சனிக்கிழமை வழிபாடு செய்து முடித்து 90 நாட்கள் வரை காத்திருக்கவும்;அந்த 90 நாட்களுக்குள் நமது கோரிக்கைகளில் பெரும்பாலானவை விரைவாக நிறைவேறியிருக்கும்;இந்த வழிபாடு துவங்கிய நாளிலிருந்து இந்த 90 நாட்கள் முடியும் வரையிலும் ஒருபோதும் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;அப்படி இருந்தால் மட்டுமே இந்த வழிபாடு பலன்களைத்தரும் என்பதை மறவாதீர்கள்;
திருப்பதி மலைமீது ஆகாய கங்கைக்கு செல்லும் வழியில் வேணுகோபால் சன்னதி இருக்கிறது.இந்த சன்னதியில் தான் கொங்கணரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;பழனி மலையில் போகரின் ஜீவசமாதி இருக்கிறது;மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சுந்தரரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;நாகப்பட்டிணம் அருகே சுனாமிபாலம் கடந்ததும் கோரக்கரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;திருஅண்ணாமலையில் இருக்கும் கோசாலையில் இடைக்காடரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;மயிலாடுதுறையில் இருக்கும் மாயூரநாதர் கோவிலுக்குள் இருக்கும் விநாயகர் சன்னதியே குதம்பைச்சித்தரின் ஜீவசமாதி ஆகும்;கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது;இதே போல தமிழ்நாடு முழுவதும் சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றன;சித்தர்களின் ஜீவசமாதிகளில் மட்டுமல்ல;மற்ற துறவிகளின் ஜீவசமாதிகளிலும் இதேபோல வழிபாடு செய்து நமது பணப்பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.
இந்த வழிபாட்டுமுறையை
ஓம்சிவசிவஓம்
Crores of Thanks to AANMIGA KADAL for the publication of Sidhargal Jeeva Samathi details.
ReplyDelete"SATHIYAM" ARDT.
Vellore-632009
Please let me the Siddhar Sannathis around Chennai. Seeking your blessing.
ReplyDelete