ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி வருமோ,அந்த நட்சத்திரத்தின் பெயரே அந்த தமிழ் மாதத்தின் பெயராக நமது முன்னோர்கள் வைத்துள்ளார்கள்:இந்த புரட்டாசி மாதத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது.இந்த நந்தன வருடத்தின் பூரட்டாதி நட்சத்திரம் 28.9.12 வெள்ளிக்கிழமை மதியம் 2.25 முதல் 29.9.12 சனிக்கிழமை மதியம் 3.11 வரை உதயமாகிநிற்கும்;அதே சமயம்,பவுர்ணமியானது 29.9.12 சனிக்கிழமை காலை 8.48 முதல் 30.9.12 ஞாயிறு காலை 9.18 வரை அமைந்திருக்கிறது.அதாவது,சனிக்கிழமை இரவில் புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி உதயமாகியிருக்கும்.
ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முழுபலம் பெறுவது பவுர்ணமியன்றுதான்.இந்த பவுர்ணமி நாளில் நாம் ஓம்சிவசிவஓம் ஒரு மணி நேரமாவது ஜபித்தால் நமது ஜபத்தின் சக்தி பல மடங்கு அதிகரித்து,நமது கர்மவினைகளை கரைத்துவிடும்;அப்படிக் கரைவதால் நமது நியாயமான ஏக்கங்கள் நிறைவேறும்;நீண்டகாலப்பிரச்னைகள் தீரும்;நமது ஆத்மபலத்தை அதிகரிக்கவும் இந்த பவுர்ணமி ஜபம் பக்கபலமாக இருக்கும்.
29.9.12 சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலும்,இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் குரு ஓரை வருகிறது.இந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;30.9.12 ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் 12 மணி வரையிலும் குருஓரை அமைந்திருந்தாலும்,சனிக்கிழமை ஜபிக்க இயலாதவர்கள் இந்த நேரத்தை ஓம்சிவசிவஓம் ஜபிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்;
நமது வீட்டு மாடியில் ஜபிப்பதால் மிக அதிகமான பலன்களை உணரமுடியும்;நமது ஊரில் இருக்கும் மலைக்கோவில்களில்(முடிந்தால்) இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ஜபிப்பதால் விரைவான ஜபசக்தி நம்மை வந்து சேரும்;நமது ஊரில் இருக்கும் ஜீவசமாதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ஜபிப்பதால்,இந்த மந்திரத்தின் ஆற்றல் அதிகளவில் நம்மை வந்து சேர்வதோடு,அந்த ஜீவசமாதிக்குள் மறைந்திருக்கும் மகானின் அருளாற்றலும் நமக்கு உடனே கிடைக்கும் என்பது ஆன்மீக ஆராய்ச்சி முடிவு ஆகும்.
மேலும் பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாளில் கண்டிப்பாக அன்னதானம் செய்வது மிகமிக நல்லது;இப்படி அன்னதானம் செய்த மறு நாளே சில ப்ரச்னைகள் தீருவதை அனுபவத்தில் உணரலாம்.
செய்வோமா?
No comments:
Post a Comment