Tuesday, September 11, 2012

ஐயப்பனே குலதெய்வமாக இருக்கும் சுந்தரபாண்டியம் பெரிய கோவில்!!!










சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சதுரகிரிக்கு பால்குடம் கொண்டு சென்றுள்ளார்கள்.அப்போது (இன்றைய விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,தாலுகா,சுந்தரபாண்டியம் கிராமம் அருகே இருக்கும் ஊத்தங்கல் பொட்டல் என்ற இடத்தில்)ஒரே ஒரு பால்குடம் மட்டும் கீழே விழுந்திருக்கிறது.அப்படி விழுந்தமைக்கான காரணமானது அடுத்த சில வருடங்களில் தெரிந்திருக்கிறது.ஆமாம்,அந்த இடத்தில் ஐயப்பன் விக்கிரகம் ஒன்று புதைந்திருக்கிறது.அக்கால வழக்கப்படி,அந்தப் பகுதியை ஆண்டுவந்த பாண்டியமன்னரிடம் இதைத் தெரிவித்துள்ளனர்.முதல்நாள் இரவில் பாண்டிய மன்னருக்கும் இது தொடர்பான கனவு தெரிந்திருக்கிறது.



ஐயப்பனின் ஆசைப்படி சுந்தரபாண்டியம் அருகில் இருக்கும் கண்மாயை ஒட்டி அவரை பிரதிஷ்டை செய்தார் பாண்டிய மன்னர்.பிற்காலத்தில் வந்த சுந்தரபாண்டியன் என்ற மன்னரும் இந்த கோவிலுக்கு மானியமாக பல கிராமங்களையும்,விவசாயநிலபுலன்களையும் தானமாக கொடுத்து கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்தியுள்ளார்.ஐயப்பனின் ஆசைப்படி,மண்பாண்டம் செய்பவர்களே பூசை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.பிராமணர் உள்ளிட்ட பனிரெண்டு சமுதாயத்தவர்களின் குலதெய்வமாக இருந்து அருள்பாலித்து வருகிறார் ஐயப்பன்.இந்த கோவிலில்  இவரது பெயர் அருள்நிறை வைகுண்டமூர்த்தி ஐயனார்! இவர் பூரணம் மற்றும் பொற்கொடியாள் சமேதமாக காட்சியளித்து அருள்பாலித்துவருகிறார்.


இவருடன் அருள்மிகு மான்பூண்டி கருப்பசாமி,        அருள்மிகு லாடதவசி என்ற லாடசன்னாசி,           அருள்மிகு பேச்சியம்மாள்,                         அருள்மிகு சப்தகன்னி,                            அருள்மிகு ராக்காச்சியம்மன்,                       அருள்மிகு பொன்மாடசாமி,                        அருள்மிகு பொன்மாடத்தி,                         அருள்மிகு சப்பாணிக் கருப்பசாமி,                  அருள்மிகு சுடலைமாடன்                         அருள்மிகு சுடலைமாடத்தி,                        அருள்மிகு பொன்வேட்டைஐயனார்,
,அருள்மிகுபத்திரகாளி,                            அருள்மிகு உத்திரகாளி,                           அருள்மிகு கழுவடி முத்தையா,                     அருள்மிகு கருப்பசாமி,
அருள்மிகு காலபைரவர் சன்னதிகளோடு முழுமுதற்கடவுள் விநாயர்,அவரது சகோதரர் முருகக்கடவுள் வள்ளிதெய்வானையோடு இருந்து அருள்பாலித்துவருகிறார்கள்.பல ஆண்டுகளாக பால்குடம் எடுத்து வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.சிவராத்திரிக்கு மறுநாள்  இரவு இங்கே நடைபெறும் ஊட்டுப்பறை நிகழ்ச்சி அபூர்வமானது ஆகும்.சுவாமிக்குப்படையல் போட்டு,அந்த படையல் சாதத்தை உருண்டையாக உருட்டி,இந்தக் கோவிலின் எதிரே இருக்கும் புளியமரத்தின் மேலே வீசுவார்கள்;ஒரு பருக்கைகூட கீழே விழாது;இந்த தெய்வீக சம்பவம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவருகிறது.இதன்மூலமாக இந்தக் கோவில் அருளாற்றலை உணர்ந்துகொள்ளலாம்;இந்தக் கோவிலின் ஸ்தலவிருட்சம் புளியமரம் ஆகும்.இந்தக் கோவிலிலைச் சுற்றி எட்டுக் காளியம்மன்கள் இருப்பதாகவும்,அவர்களே இந்தக்  கோவிலை பாதுகாப்பதாகவும் நம்பிக்கை;





மதுரை டூ செங்கோட்டை சாலையில் க்ருஷ்ணன் கோவில் என்ற சிற்றூரில் இறங்க வேண்டும்;இங்கிருந்து வத்ராப் செல்லும் நகரப்பேருந்து(டவுண் பஸ்) மூலமாக பயணித்தால் சுந்தரபாண்டியம் விலக்கு என்ற நிறுத்ததில் இறங்க வேண்டும்.இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு வடக்கு நோக்கி பயணித்தால் சுந்தரபாண்டியம் கிராமம் வரும்.(சுந்தரபாண்டியத்துக்கு மணிக்கொருமுறை பேருந்து வசதி உண்டு)இங்கிருந்து இன்னும் ஒரு கி.மீ.தூரம் வடக்கே பயணித்தால் பெரிய கோவிலை அடையலாம்.ஆட்டோ வசதிகள் க்ருஷ்ணன்கோவிலில் இருந்தும்,சுந்தரபாண்டியத்திலிருந்தும் கிடைக்கின்றன.



ஏராளமான பெரும்புள்ளிகள்,பிரபலமான டாக்டர்கள்,அரசியல்வாதிகள்,என் ஜினியர்கள்,அரசு  ஊழியர்கள்,சட்ட அறிஞர்கள்,தொழிலதிபர்களுக்கு இந்த பெரியகோவில் குலதெய்வமாக இருக்கிறது.மாமுண்டி,வைகுண்டமூர்த்தி போன்ற பெயர்களைக் கொண்டவர்களின் பூர்வீகக் கோவில் இதுதான்.பல வம்சாவழியினர் சில தலைமுறைகளாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து போனதால்,பலருக்கு இந்த பெரியகோவில் தான் குலதெய்வம் என்பது தெரியவில்லை;இந்த பெரிய கோவில் சைவம் மற்றும் வைஷ்ணவ ஒருங்கிணைப்பாக இருக்கிறது.


படங்களில் இருப்பது பெரியகோவிலில் முறையான அனுமதியோடு எடுக்கப்பட்டவை!!! குதிரையில் செல்லும் இந்த புகைப்படத்தை பலர் தமது தொழில் நிலையத்தில் வைத்து தினமும் வழிபட்டு வருவதன் மூலமாக தொழிலில் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பது நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.



ஓம்சிவசிவஓம்
ஓம்ஹரிஹரிஓம்

1 comment:

  1. சிவராத்திரிக்கு மறுநாள் இரவு இங்கே நடைபெறும் ஊட்டுப்பறை நிகழ்ச்சி அபூர்வமானது ஆகும்.சுவாமிக்குப்படையல் போட்டு,அந்த படையல் சாதத்தை உருண்டையாக உருட்டி,இந்தக் கோவிலின் எதிரே இருக்கும் புளியமரத்தின் மேலே வீசுவார்கள்;ஒரு பருக்கைகூட கீழே விழாது;இந்த தெய்வீக சம்பவம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவருகிறது.இதன்மூலமாக இந்தக் கோவில் அருளாற்றலை உணர்ந்துகொள்ளலாம்;

    இது போன்ற அற்புதங்கள் நடைபெறும் கோவில்களைப் பட்டியலிட்டு வெளியிடுங்கள். அருமை

    ReplyDelete