Wednesday, June 8, 2011

ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு

ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு இரண்டாம் காண்டத்தில் 13வது பாடலாக மலர்கிறது:-




ஆன்மா இல்லாத உடல் இனியும் புனிதமாகக் கருதப்படமாட்டாது

இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது

இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும்

என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.



‘இதர மதங்கள் மறுபிறவியை ஏற்பதில்லை. ஹிந்து மதம் ஒன்றே உடல் ஆத்மாவிற்கு ஒரு சட்டை தான்; நலிந்து கிழிந்த சட்டையை உதறுவது போல ஆன்மா பழைய சரீரத்தை உதறி விட்டு அடுத்த சரீரத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது. இறுதி வரியில் வரும் அக்ஷரம் ஓம் என்பதாகும். ஆக மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஹிந்து மதக் கொள்கை உலகில் ஓங்கி உயரும் என்பதை நாஸ்டர்டாமஸ் இந்தப் பாவில் தெளிவாக விளக்குகிறார்'.



இப்படி ஒரு விளக்கத்தைத் தருபவர் பெங்களூரைச் சேர்ந்த திரு ஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர் ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்டர்டாமஸ் என்ற நூலில் ஹிந்து மதம் பற்றி நாஸ்டர்டாமஸ் பல பாடல்களில் பூடகமாகக் கூறியுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார்.





நாஸ்டர்டாமஸின் பாடல்களை விளக்கி உலகின் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்!

No comments:

Post a Comment