உத்திரப்பிரதேசமாநிலம்,பிஜனூர் மாவட்டம்,தர்மபூரை அடுத்த லட்டாவாலா,மக்கள் தொகை 200 மட்டுமே!!! மூதாட்டிகள் மூவரைத் தவிர மற்ற எல்லோருமே படித்தவர்கள்.இந்தியா சுதந்திரமடைந்த 1947 முதல் இன்று வரையிலும் இந்த ஊரிலிருந்து காவல் நிலையத்தில் ஒரு வழக்கு கூட பதிவாக வில்லை;
இத்தனை ஆண்டுகளாக எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும்,எல்லோரும் கூடிப்பேசி,அவ்வூர்ப் பெரியவர்கள் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள்.எந்தத் தேர்தல் வந்தாலும்,எந்த அரசியல்கட்சியும் இந்த ஊர்மக்களின் ஓட்டுக்களைப் பிரிக்க முடியாது.கட்சிகளின் பிரமுகர்கள் வந்து தலைகீழாக நின்று அரசியல் செய்தாலும் பலிக்காது.காவல் துறை ஆய்வாளர் சுரேந்திரசிங்க்,தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட 109 ஊர்களில் லட்டாவாலா அமைதியானது என்கிறார்.
நன்ரி:திரிகுடா சங்கல்ப ஜம்மு ஹிந்தி மாத இதழ் பிப்ரவரி 2007
இதழியல் என்பது மேல்நாடுகளில் உண்டானது.குற்றங்களையும்,தவறுகளையும் விலாவாரியாக எழுதுவதே மேல்நாட்டு இதழியல் முறை;
நல்ல செய்திகளையும் சமூக நலத்தோடும் எழுதுவது இந்திய இதழியல் முறை;
No comments:
Post a Comment