போலந்து நாட்டின் தலைநகரம் வார்சாவில் கன்னியாஸ்திரி ஒருவர் அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கமாகிய இஸ்கானுக்கு எதிராக ஒரு வழக்கினைத் தொடர்ந்தார்.வழக்கும் விசாரணைக்காக வழக்காடும் மன்றத்தில் வந்தது.
“இஸ்கான் அமைப்பு தன் நடவடிக்கைகள் மூலம் இந்து மதத்தையும் கடவுள் கிருஷ்ணனையும் பற்றி விளக்கம் தந்து போலந்து மக்களைக் கவர வேலை செய்து வருகிறது.அது என்போன்ற கன்னியாஸ்திரிகளை மிகவும் புண்படுத்துகிறது.ஏனென்றால்,16,000 கோபிஸ்திரீகளை மணந்த கிருஷ்ணன் நன்னடத்தை இல்லாதவர்.அவரைப் பற்றி ஆகா,ஓஹோ என்று புகழ்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, ‘இஸ்கான்’ அமைப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதாடினார் வழக்கு தொடர்ந்த கன்னியாஸ்திரி.
‘இஸ்கான்’ அமைப்பின் சார்பாக வாதாடியவர் நீதியரசரிடம் சொன்னார்:
“மேன்மை தாங்கிய நீதிபதி அவர்களே,அந்த கன்னியாஸ்திரி,தான் கன்னியாஸ்திரியாக பதவிப் பிரமாணம் எடுத்த வரிகளை தயவு செய்து அவர் வாயாலேயே திருப்பிச் சொல்லச் சொல்லுங்கள்”
நீதியரசரும் அவ்வாறே கூறுமாறு,கன்னியாஸ்திரியிடம் கேட்டுக் கொண்டார்.ஆனால்,கன்னியாஸ்திரியோ மவுனம் காத்தார்.
இஸ்கானுக்காக வாதாடியவர், “நான் அதைப் படிக்கலாமா? நீதிபதி அவர்களே” என்று கேட்டார்.நீதிபதியும் அந்த பதவிப் பிரமாண வாசகங்களைப் படிக்க அனுமதி அளித்தார்.
அந்த பதவிப்பிரமாணத்தின் போது கன்னியாஸ்திரிகள் ஏசுபிரானை தாங்கள் மணந்து கொள்வதாகக்கூறியுள்ள வாசகங்களைப் படித்துக் காட்டிவிட்டு,பின்னர் நீதிபதியிடம் வினவினார்.
“ஐயா நீதிபதி அவர்களே! லட்சோப லட்ச கன்னியாஸ்திரிகள் தாங்கள் ஏசுவை மணந்துகொள்வதாக உறுதி பூண்டுள்ளனர்.அப்படியானால்? இதில் ஒழுக்கத் தளர்வு எவருக்கு? கண்ணனுக்கா? கன்யாஸ்த்ரீகளுக்கா?”
அதன் பின்னர் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.நன்றி: இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு,ஜனவரி 1,2011.
No comments:
Post a Comment