Tuesday, June 14, 2011

பிரிட்ஜ்,வாட்டர் கூலர் இந்தியத் தயாரிப்பு





பத்தாம் வகுப்பு கூட தேறாத திரு.மன்சுக் பாயி பிரஜாபதி மண்ணால் ஆன குளிர்சாதனப்பெட்டியை உருவாக்கியிருக்கிறார்.பிழைப்புக்காக இயந்திர செங்கல் சூளை தொழிலகத்தில் வெலைபார்த்த அனுபவம் இந்த மாதிரியான சுதேசிப் பொருளைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.



18 வயதில் ரூ.30,000 வங்கிக்கடன் பெற்று சொந்தமாகத் தொழில் தொடங்கினார்.மண்ணாலான வாட்டர் பில்டரை செய்து 1995 இல் சந்தைப்படுத்தினார்.விலை ரூ.350 முதல் 400க்குள் என்பதால் அமோக வரவேற்பு பெற்றது.



2005 இல் நான்ஸ்டிக் கடாய்(வாணலி)யை மண்ணால் செய்தார்.இதை டாடா கெமிக்கல்ஸ் ஆய்வு செய்து அதன் தரத்திற்கு சான்றிதழ் வழங்கியது.இதையடுத்து இவர் உருவாக்கிய மண்ணாலான,ஓசை எழுப்புகிற ‘பிரஷர் குக்கர்’ மத்திய,மாநில ஊரக வளர்ச்சித் துறைகளின் சான்றிதழ் பெற்றது.



கடைசியில் மிட்டி கூல் என்ர பெயரில் இவர் உருவாக்கிய மின்சாரமே இல்லாமல் இயங்கும் ஃபிரிஜ் அமோக வரவேற்பு பெற்றது.எனவே,மன்சுக் ரூ.10,00,000/-கடன் பெற்று உற்பத்தியைத் தொடர்ந்தார்.வங்கிக் கடன் தவணைகளை தவறாமல் செலுத்தி வருகிறார்.மிட்டி கூலில் பால் ஒரு நாள் முழுவதும் கெடாமல் இருக்கிறது.காய்கறிகள் ஒருவாரம் வரை பசுமை கெடாமல் இருக்கிறது.டிஸ்கவரி டிவி சேனல் இவரது சாதனைகளை உலகறியச் செய்தது.இது போன்ற சுதேசி தயாரிப்புக்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போம்.ஆம்! இதுபோன்ற சுதேசித் தயாரிப்புப் பொருட்கள் மனித நலத்தை மேம்படுத்துபவை ஆகும்.

(ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடப்படும் தண்ணீர்,உணவு போன்றவை நமது உடல் நலத்தைக் கெடுக்கின்றன.இது பற்றி யாரும் ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்.ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டால்,அவற்றின் விற்பனை படுத்துவிடும் இல்லையா?)

மன்சுக்கின் தொலைபேசி:02852-221156.அலைபேசி:098251-77249.மின் அஞ்சல் முகவரி:

info@mitticool.in, இணையதளம்:http://www.mitticool.in/

No comments:

Post a Comment