Tuesday, June 14, 2011

பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்கும் குடும்பத்தலைவி




குடும்பத் தலைவி என்ற இடம் சமுதாயத்தில் மிக உயர்ந்த பொறுப்புடையது.குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே மனப்பாங்கு உடையவர்களாக இருப்பதில்லை; இவர்கள் பலவிதமான பண்புகள்,வித்தியாசமான மனம்,குணம் படைத்தவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் அனைவரையும் அனுசரித்து,சமாளித்துத் திருப்திப்படுத்தி,எல்லோரிடமும் நன்மதிப்பைப் பெற வேண்டிய பெரிய பொறுப்பு இவர்களுக்கு உண்டு.இது தவிர, பலவித குணாதிசயங்களைக் கொண்ட உறவினர்களையும் அனுசரித்து மனம் கோணாமல் நடந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் பொறுப்பு கடினமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.



பெண்கள் மின்காந்தம் போன்று நடுநிலையில் இருந்து அனைவரையும் கவர்ந்து நற்பெயர் பெறுவது எவ்வளவு கடினமானது?



கணவன் ஒரு வகை,மகன் ஒரு வகை,மகள் ஒரு வகை என மாறுபட்ட குணங்கள் உடையவர்களிடம் பண்பு,பாசம்,நேசம்,அன்பு என்ற அனைத்தையும் தந்து அவரவர்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உணர்ந்து அதற்கேற்ப நடப்பது என்பது சாதாரண காரியமா? தன் அறிவுக்கூர்மையாலும் தனி ஒரு பெண் சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியமன்று.



இதற்கு மிகச்சிறந்த குணமும்,மனமும்,பொறுமையும்,அறிவும்,ஆற்றலும்,அடக்கமும்,பண்பும்,தெளிவான சித்தமும் எதையும் தன்னில் ஏற்றுக்கொண்டு தாங்கும் மனப்பக்குவமும் உடையவளாகப் பெண் இருக்க வேண்டும்.இப்படி இல்லாவிட்டால்,அந்தக் குடும்பமே குழப்பத்தில் வீழ்ந்து சீரழிந்து தெருவுக்கு வந்துவிடும்.அதனால்,இப்படி ஓர் உயர்ந்த,சிறந்த,கடினமான,பொறுப்பான பதவியை வகிக்கும் பெண்களுக்குத் தியானம் அவசியம் தேவை என மகரிஷி மகேஷ்யோகி வலியுறுத்துகிறார்.



தமிழ்நாட்டில் தற்போது இரண்டே இரண்டு இடங்களில் ஆழ்நிலை தியானம் சொல்லித் தருகின்றனர்.

1.மகரிஷி தோட்டம்,மகரிஷி வித்யா மந்திர்,டாக்டர் குருசாமி சாலை,சேத்துப்பட்டு,சென்னை



2.காந்தி மியூசியம்,மதுரை



ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இங்கு அறிமுக வகுப்புகள் மாலை 5 மணிக்குத் துவங்கும்.மறுநாள் ஞாயிறு துவங்கி ஐந்து நாட்களுக்கு தினமும் 90 நிமிடங்களுக்கு ஆழ்நிலை தியானம் ரூ.700/- குருதட்சிணையுடன் பயிற்றுவிக்கப்படுகிறது.



உலகிலேயே மிக எளிதான,சுலபமான ஆனால் சக்தி நிறைந்த தியானம் ஆழ்நிலைதியானமே!



நாமும் ஆழ்நிலை தியானம் செய்வோம்;சக்தி வாய்ந்த மனிதராவோம்.

No comments:

Post a Comment