Wednesday, June 8, 2011

அனைவருக்கும் பொதுவான சுலப பரிகாரம்





அளவற்ற கடன் அல்லது கடுமையான நோய் அல்லது குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டு/ புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வசிப்போர்களின் எண்ணிக்கை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையளவிற்கு உயர்ந்து கொண்டே செல்லுகிறது.(நமது தமிழ்நாட்டில்)

அவரவர் பிறந்த ஜாதகம் பார்த்து பலன் சொல்லி பரிகாரம் சொல்லி அதிலிருந்து மீள்வதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகலாம்;அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் கூட ஆகலாம்;இந்நிலையில் இரண்டே இரண்டு பரிகாரங்கள் மூலமாக நமது பிறந்த ஜாதகத்திலிருக்கும் தோஷங்களை நீக்கமுடியும்.

அவை :

1.அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 20 முறை (அதிகபட்சம் நூறு முறை)திருஅண்ணாமலை கிரிவலம் செல்லுதல்



2. தினமும் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை/இரவு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்தல்



இந்த இரண்டை மட்டும் செய்ய ஆரம்பித்தாலே நமது சிக்கல்கள் தீரத் துவங்கும்.



திரு அண்ணாமலை கிரிவலத்தை பவுர்ணமி அல்லது அமாவாசையில்தான் செல்லவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;மிகவும் சாதாரண நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்.இப்படிச் செல்லுவதாலும் நமது கடுமையான தோஷங்கள்,கடன்கள்,நோய்/கர்மநோய்/எதிர்ப்பு/எதிரி/அரசு சார்ந்த பிரச்னைகள் தீரத் துவங்கும் என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.



அதேபோல, தினமும் இருமுறை (காலை ஒரு மணி நேரம் மாலை/இரவு ஒரு மணி நேரம்) ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்.இப்படி ஓராண்டு வரை ஜபித்துவந்தால்,ஒரு மாதம் ஜபித்ததுமுதல் ஓம்சிவசிவஓம் மந்திரம் நமக்கு அற்புதமான அரிய வழிகளைக் காட்டும்.அது பணப்பிரச்னையாக இருந்தாலும் சரி; மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி; மானப்பிரச்னையாக இருந்தாலும் சரி; போலீஸ் பிரச்னையாக இருந்தாலும் சரி;வம்பு வழக்குகளாக இருந்தாலும்சரி; சொத்துத் தகராறாக இருந்தாலும் சரி; உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் ஜெயிக்கும்;நீண்டகால பிரச்னைகள் தீரும்.



இன்று தமிழ்நாட்டில் 5 க்கு 3 பேர்கள் தீராத மன உளைச்சலில் இருக்கிறார்கள்.கூட்டுக்குடும்பம் சிதைந்தது;அதிகரிக்கும் விலைவாசி; ஜனநாயகமாகும் கள்ளத் தொடர்பு; பணவெறி இன்று செல்போன் அளவுக்கு மலிவாகி விட்ட நிலையால் 100 தமிழ்க்குடும்பங்களில் 80 இந்தப் பிரச்னைகளில் ஏதாவது ஒன்றில் சிக்கிச் சின்னாபின்னமாகிவருகின்றன என்பது நிர்வாண நிஜம்.இந்தப் பிரச்னைகளிலிருந்து விலகிட ஓம்சிவசிவஓம் மந்திரமும்,திருஅண்ணாமலைகிரிவலமுமே ஒரே நிரந்தர அதே சமயம் உயர்ந்த தீர்வுகள்!!

No comments:

Post a Comment