Wednesday, October 13, 2010

ஜோதிடகணிதம் பற்றி பிரபல ஜோதிடர் வித்யாதரன் அவர்கள் சொன்னது:நன்றி:-தமிழ் வெப்துனியா

ஜோ‌திட‌ம் எ‌ந்த நேர‌த்தை வை‌த்து கண‌க்‌கிட‌ப்படு‌கிறது?
திங்கள், 11 அக்டோபர் 2010

ஒவ்வொரு ஜோதிடத்திற்கும் எடுத்துக்கொள்ளக் கூடிய காலம் என்ன? நாங்கள் ஆங்கில நாட்காட்டிப்படி நேரத்தைக் குறிப்பிடுகிறோம். ஆனால், நாங்கள் சொல்லக் கூடிய நேரத்தை நீங்கள் முற்காலம், பிற்காலம், முதல் சாமம், இரண்டாம் சாமம் என்று சாமக் கணக்கிற்கு கொண்டு சென்று நேரத்தை நிர்ணயிக்கிறீர்கள். நீங்கள் ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். விநாடியை உடைத்துப் உள்ளே பார்ப்போம் என்று. அது எப்படி செய்கிறீர்கள். என்ன அடிப்படை?

ஜோதிட‌த்‌தி‌‌ற்கு ஆரியபட்டர், பாஸ்கரர் இவர்களெல்லாம் கொடுத்துள்ள கணகீடுகள் மிகப் பிரமாண்டமான கணக்கீடுகள். சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒரு அயல்நாட்டு அறிஞர் ஒருவர், அதிகமான இலக்கங்கள் கொண்ட எண்கள், தொகைகளை இந்திய ஜோதிடர்கள் அந்தக் காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், என்ன காணரத்திற்காக அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.


இதில் பார்த்தீர்களென்றால் திதி, நட்சத்திரம், நாழிகை என்று அனைத்தும் முழுக்க முழுக்க அஸ்ட்ரானமிக்கல் கால்குலேஷன்தான். அஸ்ட்ரானமியில் இருந்துதான் அஸ்ட்ராலஜி வந்திருக்கிறது. அறிவியல் அறிஞர்கள் கோள்களின் இயக்கங்களை மட்டும் பார்க்கிறார்கள். நாங்கள் என்ன செய்கிறோம் எ‌ன்றா‌ல், கோள்களின் இயக்கங்களால் ஏற்படக்கூடிய மாற்றங்கள், தாக்கங்கள். அதாவது இந்த பூமியில் இருக்கக் கூடிய ஒவ்வொரு ஜீவராசியினுடைய மாற்றங்கள். உதாரணத்திற்கு அன்றைக்கு சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிற பறவைகளில் 20 விழுக்காடு கூட இப்போது கிடையாது. கிரக சுழற்சிகளில் அந்த மாதிரி மாற்றங்கள் வரும்போது தானாகவே இங்கு சில உயிரினங்கள் உருவாகிறது. சில உயிரினங்கள் அழிகிறது. இந்த மாதிரியான சில விஷயங்கள் இருக்கிறது.




அதனால்தான் ஜோதிடம் என்பது முற்றிலும் கால்குலேசன்தான். அதை அடிப்படையாக வைத்துதான் நாங்கள் அனைத்தையும் கொடுக்கிறோம். ஆங்கிலேயர் கணக்கில் நள்ளிரவு 12 மணி என்றால் மறுநாள் கணக்கு வந்துவிடுகிறது. நம்முடைய கணக்குப்படி 60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள். இன்று சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதிக்கும் வரையில் 60 நாழிகைகள். இன்று வியாழன் என்றால் மறுநாள் காலை சூரியன் உதிக்கும் வரையில் வியாழன்தான். அதாவது 24 நிமிடம் என்பது ஒரு நாழிகை.


அதேபோல சாமக் கணக்கு, பஞ்சபுத்தி சாஸ்திரத்தில் வருகிறது. நாங்கள் பஞ்சாங்கத்தில் கணித்து சூரிய கிரகண நேரத்தைக் கொடுக்கிறோம். அதையேதானே உலக அறிஞர்களும் கொடுக்கிறார்கள். இந்த நேரத்தில் சூரிய கிரகணம், இந்த நேரத்தில் சந்திர கிரகணம் என்று சொல்கிறார்கள். ஆகையால், கால்குலேசனுடன் இந்தக் கலை இருப்பதால்தான். இன்றைக்கு வரை இந்தக் கலை வாழ்ந்துக் கொண்டிருக்கிறது

1 comment: