குழந்தையின் வயது 12 முதல் 19க்குள் இருக்கிறதா?இந்தக் கட்டுரை உங்களுக்காக . . .
கி.பி.1999 ஆம் ஆண்டில் நம் தமிழ்நாட்டில் பருவ வயது எனப்படும் டீன் ஏஜ்களின் தற்கொலை முயற்சி எண்ணிக்கை ஒரு நாளுக்கு சராசரியாக 400 ஆக இருந்தது.
இன்று கி.பி.2009 இன் விளிம்பில் இருக்கிறோம்.உலக மயமாக்கலின் வேகத்தால் உலகமே அமெரிக்க மயமாகிவிட்டது.பணத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் சிறு நகரங்களிலும் பரவிவருகிறது.இந்த நிலையில் டீன் ஏஜ்கள் எனப்படும் பருவ வயதுகளில் இருப்பவர்களின் தற்கொலை முயற்சி ஒரு நாளுக்கு சராசரியாக 2500!
நீங்கள் வீட்டைவிட்டு வேலை அல்லது தொழில் நிமித்தமாகக் கிளம்புவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்கிக்கொண்டிருப்பான்/ள்.
நீங்கள் வேலை அல்லது தொழிலை விட்டு வீட்டுக்குள் களைத்துப்போய் வருவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்க ஆரம்பித்துஇருப்பர்.
சரி நாளைக்குப் பேசிக்கலாம் என பேசுவதற்குக்கூட நேரமில்லை.(அதான் செல் இருக்கே என உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள்)
பாசமோ,வியாபாரமோ நேரில் பேசுவது போன்ற பரிசு அல்லது வரம் எதுவும் கிடையாது.
நீங்கள் யாருக்காக பணத்தைத் தேடி ஓடுகிறீர்கள்?அவர்களின் நற்பண்புகளை உருவாக்குவதில் 50% நீங்களும் உங்களின் வாழ்க்கைத்துணையும்தான் என்பதை அறிவீர்களா?
அவர்களிடம் நீங்கள் வாரம் ஒரு முறையாவது மனம்விட்டு பேசுகிறீர்களா?
அவர்களின்(உங்கள் பருவ வயது மகன் அல்லது மகள்) தினசரி வாழ்க்கையில் என்ன நடந்துவருகிறது என தினமும் உங்களால் நேரடியாகக் கேட்கமுடிகிறதா?
அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?(ஆம் எனில் அந்த 2500 தற்கொலை முயற்சியில் நிச்சயம் உங்களின் குழந்தை இருக்காது)
சாப்பிடும் முன்பும்,சாப்பிட்டப்பின்பும் கை கழுவ கற்றுத் தருகிறோம்.காதல்,காமம்,ஏமாற்றுதல்,செல் போன் வழியே உருவாகும் பிரச்னைகள் இவற்றினை எப்படி எதிர்கொள்வது என்பதை உங்கள் மகன் அல்லது மகளுக்கு ஒரு நாளாவது சொல்லிக்கொடுத்ததுண்டா?(உங்களது அனைத்து செல் போன்களையும் அணைத்துவைத்துவிட்டு)
இதையெல்லாம் செய்யாமல் என் மகள் என் பேச்சைக் கேட்க மாட்டேங்குறா? சார் நீங்கதான் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க என டியூசன் ஆசிரியர்களிடம் கெஞ்சாதீர்கள்.
(உங்கள் மகளின் 5 வயது முதல் 15 வயது வரை அவள் கேட்கும் சந்தேகத்தை அவளின் கண்களை நோக்கிப்பார்த்து பொறுமையாகக் கேட்டிருந்தால் யாரோ ஒரு டியூசன் ஆசிரியரிடம் நீங்கள் கெஞ்ச வேண்டாம்)
ஆனால் உங்கள் மகள் உங்களது டியூசன் ஆசிரியர் வார்த்தைகளைக் கேட்பாள்.உங்களை மதிக்க மாட்டாள்.ஏனெனில் டியூசன் வாத்தியாரின் வேலையே மாணவியின் (மகளின் அல்ல) பேச்சுக்களைக் கூர்ந்து கவனிப்பதுதான்.
அதே மகளிடன் அந்தரங்கப் பிரச்னைகளை (பெற்றோராகிய)நீங்கள் பகிர்ந்ததுண்டா?
ஏன் டியூசன் ஆசிரியரை மகன் மற்றும் மகள்கள் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.?
சில இடங்களில் டியூசன் ஆசிரியரே தனது மாணவியைத் திருமணம் செய்யுமளவுக்கு வளர்ந்துவிட்டது .ஏன்?
உங்கள் மகன் அல்லது மகள் அல்லது இருவரும் இன்று முதல் உங்களை அதிசயமாகத் தான் பார்ப்பார்கள்.இன்றே மனம் திறந்து பேசமாட்டார்கள்.
பொறுப்புள்ள எதிர்காலத்தை எதிர்காலத் தலைமுறையை உருவாக்கிட உங்கள் குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாடுங்கள் அல்லது அரட்டையடியுங்கள்.
No comments:
Post a Comment