இலங்கைத்தமிழர்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் நமது தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு தோட்டவேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.அவர்களின் கடும் உழைப்பினால் இன்று இலங்கை சொர்க்கபுரியாக இருக்கிறது.தமிழ்நாட்டில் எத்தனை தமிழ்ஜாதிகள் உண்டோ,அத்தனை ஜாதிகளும் இலங்கையில் உண்டு.அவர்கள் அங்கே என்னென்ன சிரமப்பட்டார்கள்? என்பதை சி.மகேந்திரன் என்பவர் எழுதிய ‘தீக்குள் விரலை வைத்தேன்’ என்ற நாவல் விரிவாக விளக்குகிறது.இந்த நாவலை நாம் வாசித்தால்,இலங்கைத் தமிழர்களுக்காக நாம் ஒவ்வொருவருமே வீட்டுக்கு ஒரு குழந்தையை தமிழ் ஈழம் பெற்றுத்தர அனுப்பிவைப்போம்;அந்த அளவுக்கு கொதிக்கும் நிஜங்களை இந்த நாவல் விவரிக்கிறது.
எங்கு சென்றாலும் தமிழ் இனமக்கள் மொழி ஒற்றுமையோடு இருப்பதில்லை;தமிழினத்தின் வரலாற்றில் முதன் முதலில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் என்ற பெயரில் ஒற்றுமையாகச் செயல்படத்துவங்கினர்.அதையும் சீனாவின் ஆதிக்கப்பேராசை அரசியல்,இந்தியாவின் தொலைநோக்கற்ற அரசியல்,இலங்கையின் அரக்கத்தனமான அரசியல் சிதைத்துவிட்டது.இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இதிலும் மீன் பிடிக்கத்தான் பார்த்தார்களேயொழிய,உணர்வுபூர்வமான எதையும் செய்யவில்லை;
எப்படி இன்று தமிழ்நாட்டின் நடுத்தர,கீழ்மட்டக்குடும்பங்களில் திறமையும்,பொறுப்புணர்ச்சியும் உள்ள மகன் அல்லது மகளை அந்தக் குடும்பமே உதாசீனப்படுத்தி,அவமானப்படுத்தி வீட்டை விட்டே விரட்டுமோ,அதே போலத்தான் இலங்கைத்தமிழின விடுதலை வீரர்களை தாய் தமிழ்நாடு கைவிட்டு விட்டது.
சீறி எழும் தமிழ்நாட்டு மகன் மகள்களைப்போல, வெகு விரைவில் தமிழீழம் மலரும்போது இந்தியாவின் தமிழ்நாட்டின் அரசியல்தலைவர்கள் அதற்கும் அந்த வெற்றிக்கும் நான் தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளுவர்.
உண்மை முற்றிலும் உண்மை.இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைவிட தமிழக அரசியல்வாதிகளுக்கு முக்கிய பல வேலைகள்.பாவம் தமிழன்தான் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறான்.திருவள்ளுவர் தலையின் இழிந்த மயிரனையர் என்பர்.தமிழன் உயிர் அந்த மயிரைவிட கேவலமாகப் போய்விட்டது.தமிழன் நிலையைப் பார்த்தால் கண்ணீர்தான் வருகிறது.இதைவிட கொடுமை தொழிலுக்காக உயிரைப் பயணம் வைத்து உயிர் விடும் தமிழக மீனவர் நிலை.என்று மாறுமோ தமிழர் நிலை.
ReplyDeleteதமிழினைக் காத்த இறைவா நீ இருந்தால் தமிழ் மக்களை காக்க இருக்கிறாயா.
அடே அப்பா விடிய விடிய ராமாயணம் விடிந்தபின் சீதை என்ன பார்த்திபனின் பொண்டாட்டியா என்ற கேட்ட கதைதான். ஐயா முதலில் ஈழத்தமிழரின் வரலாறுகளை அறிந்து கொள்ளுங்கள். ஆங்கிலேயர் தோட்டங்களுக்கு அழைத்து வந்த தமிழர் இன்றும் மலைநாட்டில் உள்ளனர். ஆனால் ஈழத்தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வரலாறு காலம் தொட்டு வடகிழக்கில் வாழ்ந்து வந்தது வரலாறு. அதை விடுத்து சிங்களவன் புனையும் பொய் கதைகளையும் வரலாறுகளையும் நம்பி ஈழத்தமிரையும் வந்தேறு குடிகள என எழுதாதீர்கள்.
ReplyDeleteenathu thamiz nanba,inimel nijamana varalaatrai arinthe ezuthikiren.thagavalukku nanrigal.
ReplyDelete