Wednesday, October 27, 2010

ஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு

ஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு

ஆவிகள் உலகத்தை மூன்று அடிப்படை உலகங்களாகப் பிரிக்கலாம்.1.பாவ உலகம்,2.மத்திய உலகம்,3.புண்ணிய உலகம்.

பாவ உலகம்:

பூமியில் அதிகபாவம் செய்தவர்கள் அனைவரும் இறந்த பிறகு செல்லும் இடம் இது.இங்கு தீய ஆவிகள் மட்டுமே இருக்கும்.இங்கு இருப்பவர்களுக்கு எந்த வித உதவியும் புண்ணிய உலகத்திலிருந்தும்,பூமியிலிருந்தும் கிடைப்பதில்லை;

இங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் துர்மரணம் அடைந்தவர்கள்,தற்கொலை செய்தவர்கள்,வாழும் போது பஞ்சமாப்பாதகங்களை மகிழ்ச்சியாகச் செய்தவர்கள்,பிறரைத் துன்புறுத்தி வாழ்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

குறிப்பிட்ட காலம் வரை இங்கு வாழ்ந்துவிட்டு,மீண்டும் பூமியில் பிறக்கவேண்டும்.அப்படிவாழும் காலம் இருள் மிகுந்ததாக அல்லது வெயில் மிக்கதாக இருக்கும்.

2.மத்திய உலகம்:

பாவ உலகத்தை விட கொஞ்சம் உயர்ந்த நிலையைக் கொண்டது மத்திய உலகம்.பாவ உலகத்தில் போதுமான தண்டனையை அனுபவித்தவர்கள்,பூமியில் வாழும் போது தவறுகள் செய்தாலும் அதிகமான தான தருமங்கள் செய்தவர்கள்,செய்த தவறுக்காக இறக்கும்போது மனம் வருந்தியவர்கள்,பெரிய அளவில் பாவமோ அல்லது புண்ணியமோ வாழும்போது செய்யாதவர்கள்,முற்பிறவியில் செய்த தவறுகளை ஓரளவுஎடுத்த பிறப்பில் நன்மைகளைச் செய்து கழித்தவர்கள் மரணத்திற்குப் பின் செல்லும் இடம் மத்திய உலகம்.

இந்தப் பகுதியில் இருக்கும் ஆவிகளின் நோக்கம் உயர்நிலையை அடைவது மட்டுமே.இதற்காக இவர்களுக்கு மறுபிறவிதவிர,வேறு சிலவாய்ப்புக்களும் தரப்படுகின்றன.

மரணத்தருவாயில் இருப்பவர்களுக்கு மரணமடைந்தவுடன் என்ன நடந்தது?என்றுபுரியாமல் தவிக்கும் ஆன்மாக்களுக்கும் இறப்பினை உணரவைத்தல் இவர்களது முக்கியப் பணி.

மத்திய உலகத்தில் இருப்பவர்களுக்கு தாம் விரும்பும் தாய் தந்தையரிடம் பிறக்கும் அனுமதி உண்டு.


புண்ணிய உலகம்:

எந்தமதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,பிரார்த்தனைகள்,தான தருமங்கள்,தெய்வீக அறப்பணிகள் செய்து பாவக்கணக்குகளையும்,கருமக்கணக்குகளையும் அழித்தவர்கள்,பற்றில்லாதவர்கள்,பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மிக்கவர்கள்,பக்தி நிறைந்தவர்கள் செல்லும் உலகம் இது.

சில விதிமுறைகளுக்கு உட்பட்டு,மத்திய உலக ஆவிகளுக்கும்,பூமியில் இருப்பவர்களுக்கும் உதவி செய்ய அனுமதி உண்டு.தாங்கள் வாழும்போது பூமியில் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாரோ,அந்தத்துறையைச் சேர்ந்த பூமியில் வாழும் மனிதர்களுக்கு இவர்களால் உதவி செய்ய முடியும்.

புண்ணிய உலகங்களையும் தாண்டி பிறவியற்றநிலையான முக்தியை அடைவதே இவர்களின் நோக்கம்.ஆழ்மனதியானம் செய்யக்கூடியவர்களுக்கு மட்டுமே இந்த உலகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.சித்தர்கள்,ஞானிகள்,மகான்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.ஆன்மீக நிலையில் உயர்வு பெற விரும்பும் அனைவருக்கும் இவர்களது உதவி கிடைக்கும்.
நன்றி:பி.எஸ்.பி.ஐயாஅவர்களின் விடியல் பக்கம்19,20,21,வெளியீடு பிப்ரவரி 2009.

No comments:

Post a Comment