அணு இழப்பீடு சட்டம்: அமெரிக்கா அஞ்சுவது ஏன்?
வெள்ளி, 22 அக்டோபர் 2010( 14:20 IST )
அந்த ‘பாதுகாப்பு’ இந்தியாவின் அணு விபத்து இழப்பீடு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டால் மட்டுமே அந்நாட்டுடன் தங்களால் பிசினஸ் செய்ய முடியும் என்று தெரிவித்துவிட்டன. இதனால், உலகப் புகழ் பெற்ற இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமா என்ற கேள்வியே எழுந்துள்ளது!
அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக உலகின் முதன்மையான நாடு. அங்கு தர உத்தரவாதம் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவ்வாறிருக்க தங்களின் தயாரிப்பு தொடர்பாக அவர்கள் ஏன் அஞ்ச வேண்டும்? அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு? ஏன் என்று கேட்டால், பாபா அணு ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி பி.பி.சிங் கூறியதுபோல், இந்தியா 1969ஆம் ஆண்டு முதல் அணு உலைகளை இயக்கி வருகிறது. அவ்வப்போது சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், பெரிய விபத்தென்று எதுவும் ஏற்படவில்லை.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் அணு உலைகள் அமைப்பு மற்றும் கண்காணிப்பைச் செய்யும் அணு சகதி ஒழுங்குமறை ஆணையம் (Atomic Energy Regulatory Board - AERB) நமது அணு விஞ்ஞானிகளால் மிகத் திறமையாக நடத்தப்படும் அணு பாதுகாப்பு அமைப்பாகும். அதனால்தான் 40 ஆண்டுகளாக அணு உலைகளை இயக்கிவரும், இன்றைக்கு ஒரு முழுமையான அணு சக்தி தொழில் நுட்ப நாடாக விளங்கிவரும் (நமக்கு பிரச்சனையே யுரேனியம் சப்ளைதான், அதுதான் போதுமான அளவிற்கு இல்லை. அதனைக் காரணமாக்கியே இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது) முன்னணி நாடாகத் திகழ்கிறோம்.
அதுமட்டுமின்றி, அயல் நாடுகளில் இருந்து வாங்கி இங்கு நிறுவப்படும் அணு உலைகளை இயக்கப்போவது இந்திய அணு அணு சக்திக் கழகமாகும் (Nuxclear Power Corporation of India - NPCIL). இது மிகத் திறன் வாய்ந்த அரசு அமைப்பு. அவ்வாறிருக்க இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் நிறுவனங்களை இழப்பீட்டிற்குப் பொறுப்பாக்கும் சட்டத்தைக் கண்டு அமெரிக்க நிறுவனங்கள் அஞ்சுவதேன்?
அவர்களுக்கு விறக வேண்டும், பணத்தைப் பெறவேண்டும். பறந்துவிட வேண்டும். இலாபம் மட்டுமே குறி! அதற்குத்தான் அவர்களுக்குத் தேவை இந்திய - அமெரிக்க உறவு!
இதே சட்டம் பிரான்ஸ், கனடா உள்ளிட்ட அணு உலை விற்கப் போகும் நாடுகளையும்தான் கட்டுப்படுத்துகிறது. அவர்கள் நாட்டின் தனியார் நிறுவனங்களு்டன்தான் இந்திய அணு சக்தி ஆணையம் ஒப்பந்தம் போடப்போகிறது. ஆனால் அந்த நாடுகள் இந்தச் சட்டத்தைப் பார்த்து அஞ்சவில்லையே?
அமெரிக்கா மட்டுமே அஞ்சுகிறது. அதற்கு உயிர்கள் முக்கியமல்ல, இலாபமே முக்கியம். இதற்குப் பெயர்தான் இந்தியா யு எஸ் ஸ்டாட்டிஜிக் பார்ட்னர்ஷிப். புரிந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment