Tuesday, May 5, 2009

வாழ்க்கையில் சுயபரிசோதனை செய்வது எப்படி?

சுய பரிசோதனை என்றால் என்ன?

ஒரு மனோதத்துவ அறிஞர் சொன்னது:”ஒருவன் சரியான பாதையில் செல்ல , அடிக்கடி தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.அதற்கு சில கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொள்வது அவசியம்”.
1.தொழிலிலோ, குடும்ப முன்னேற்றத்திலோ நாம் நிர்ணயித்த இலக்கை முழுமையாக எட்ட முடிந்ததா?
2.நம்மால் சகவாழ்வில் மற்றவர்களோடு ஒத்துப்போக முடிந்ததா?
3.நமது தொழிலின் முன்னேற்றம், தரம் எப்படி இருந்தது?
4.நமக்கு மற்றவர்கள் போதிய ஒத்துழைப்பு தந்தார்களா?
5.மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றுவதில் ஏதேனும் இடர்ப்பாடு இருந்ததா? அப்படியென்றால் அதற்கு யார் காரணம்?
6.நம்மிடம் யாராவது பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அவர்கள் திருப்தியடையும்படி நடந்துகொண்டோமா?
7.அதேபோல் நாம் பொறுப்பை ஒப்படைத்தவர்களும் சரியாக நடந்துகொண்டார்களா?
8.யாரிடமாவது கடுமையாக நடந்துகொள்ளும்படி இருந்ததா? ஏன்? யார் காரணம்?

No comments:

Post a Comment