Thursday, May 21, 2009

உலகின் கடைசிமதம்


புறப்பட்டுவிட்ட புதிய மதம்:மதமற்ற மதம்

11.11.1911 அன்று இந்தியாவில் புனே அருகில் உள்ள குச்வாடா என்ற கிராமத்தில் ஒரு சிறுவன் பிறந்தான்.9 வயது வரை அவனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான்.அந்த பாட்டிதான் புதிய மதத்திற்கு அஸ்திவாரமாக விளங்கினார்.
அந்த 9 வயது சிறுவன் வெறும் 21 வயதில் தத்துவத்தில் முதுகலைப்பட்டம் அதாங்க எம்.ஏ.,பெற்றார்.
உலகில் உள்ள அனைத்து மதங்களின் அர்த்தங்களையும் இன்றைய மத அறிஞர்கள் எப்படி சிதைத்துவைத்துள்ளனர் என்பதைக்கண்டு மனம் வருந்தினார்.
அவரது போதனைகளை இந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளாததால் அவர் அமெரிக்காவிற்குச் சென்றார்.64,000 ஏக்கரில் ஒரு மாபெரும் நகரை உருவாக்கினார்.அவரது போதனைகளால்,அமெரிக்க அரசாங்கமும்,கிறிஸ்தவ உலகத்தலைமையும் பயந்து நடுங்கியது.
உலகிலேயே அதிக ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வைத்திருந்த ஒரேமனிதர் அவர்-ஓஷோ என்ற ரஜனீஷ்!!!
அவரது கருத்துக்களைப்பற்றி முறைப்படி அறிய வேண்டுமானால் வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் என்ற தலைப்பில் சுமார் 100 பக்கங்களுக்கு புத்தகம் ஒன்று தமிழில் வெளிவந்துள்ளது.அதை முதலில் படியுங்கள்.அதன் பிறகு, மறைந்திருக்கும் உண்மைகள் என்ற 150 பக்கமுள்ள புத்தகம் படியுங்கள்.புத்தம் புது உலகுக்குள் செல்வீர்கள்.
உங்களது பல அந்தரங்கப்பிரச்னைகளுக்குத் தீர்வு இந்த புத்தகங்களில் ஒளிந்திருக்கின்றன.யாஹீ!!!

No comments:

Post a Comment