Saturday, May 30, 2009

அமெரிக்கான்னா அமெரிக்காதான்.இதுவல்லவோ முன்னேற்றம் என்பது




அமெரிக்கான்னா அமெரிக்காதான்.இதுவல்லவா
முன்னேற்றம்!!!

அமெரிக்காவில் கி.பி.2007 ஆம் அண்டு கணிப்பின்படி 19 வயதுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4,03,28,895.இதில் ஒரு வருடத்திற்கு 15 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களில் 7,50,000 பேர்கள் கர்ப்பவதியாகிறார்கள்.திருமணமாகாமல் கருத்தரிப்போரின் எண்ணிக்கையில் இது 24%.ஆதாரம்:www.pregnantteenhelp.org

இளவயது(15-19)கர்ப்பவதிகளுக்கு ஏற்ற ஆடைகளை விளம்பரம் செய்யும் நிறுவனங்களையும் சேர்த்து சுமார் 11,60,000 வலைத்தளங்கள் உள்ளன.நமது கூகுளில் தேடிப்பாருங்கள்.இன்று 30.5.2009 இந்த வலைமனை அதாங்க இணையதளங்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரித்திருக்கும்.

அமெரிக்க துணை ஜனாதிபதிகளாக அறிவிக்கப்பட்ட சாராபாலினின் மகள் ப்ரிஸ்டல் பாலின் தனது 17 வது வயதில் 5 மாத கர்ப்பவதியாக இருக்கிறார் என்பதை சாரா பாலினே ஒப்புகொண்டுள்ளார்.சாராபாலின் தனது 44 ஆம் வயதில் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.அதே சமயத்தில் அவரது மகள் பிரிஸ்டல் பாலின் கர்ப்பிணியாக இருக்கிறார்.


இந்த வலைப்பூவின் முகப்பில் கொடுக்கப்பட்டிருப்பது இரவுநேர அமெரிக்கா-சாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.நீலநிறமாக இருப்பது இரவு சுமார் 8 மணியளவில் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment